கோடிகோடியா சம்பாதிக்கும் பணக்கார நடிகர் 15வருஷ பழைய காரை வாங்கியிருக்காரா! நல்லா உத்து பாருங்க யாருனு தெரியும்
பிரபல நடிகரும், பிரபல நடிகரின் மகனுமான துல்கர் சல்மான், மிகப் பெரிய கார் காதலர் என்பது உங்களில் எத்தனை பேருக்கும் தெரியும். அவருடைய அப்பா மம்மூட்டியும் ஓர் தீவிர கார் காதலர் ஆவார். இவருக்கு தப்பாமலேயே துல்கர் சல்மான்-ம் பிறந்திருக்கின்றார். இதற்கு சான்றாகவே ஓர் சம்பவத்தை அவர் நிகழ்த்தி இருக்கின்றார். தற்போது தன்னுடைய கார் சேகரிப்பில் புதிதாக ஓர் காரை அவர் இணைத்திருக்கின்றார். ஆனால், அது பிராண்டு நியூ கார் அல்ல.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் பழைய காரையே அவர் தன்னுடைய கார் சேகரிப்பில் இணைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தந்தை மகன் என இருவரும் நடித்து சேர்த்த சொத்த பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கின்ற போதிலும் இவர் 15 ஆண்டுகளுக்கும் அதிகமான பழைய காரை வாங்கி இருப்பது ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

குறிப்பாக, தன்னிடம் பத்துக்கும் மேற்பட்ட ஆடம்பர மற்றும் அரிய வகை கார் மாடல்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கின்ற சூழலிலேயே அவர் இந்த பழைய காரை வாங்கி இருக்கின்றார். அவர் வாங்கி இருப்பது 2010 மாடல் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் ஆட்டோ பயோகிராஃபி (2010 Range Rover Vogue Autobiography) சொகுசு கார் மாடலே ஆகும்.
இந்த காரில் 5.0 லிட்டர் வி8 சூப்பர் சார்ஜட் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 510 பிஎஸ் மற்றும் 625 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. பார்க்க மிக நீளமான தோற்றத்தில் இருக்கும் இந்த காரில் மொத்தமாகவே ஐந்து பேர் வரை மட்டுமே அமர்ந்து பயணிக்க முடியும்.
இத்தகைய கார் மாடலையே தற்போது நடிகர் துல்கர் வாங்கி இருக்கின்றார். ஏற்கனவே பல ஆடம்பர கார்கள் மாடல்கள் அவரிடத்தில் இருக்கின்ற சூழலில் இதை ஏன் அவர் வாங்கினார் என்பதற்கான காரணம் தெரியவில்லை. இதேபோல், இந்த காரை அவர் வாங்கிவிட்டார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
நம்பகத் தன்மை வாய்ந்த ஓர் சமூக வலைதள பக்கமான கிரேசி கார்ஸ் சென்னையே அவர் இந்த காரை வாங்கியிருப்பதாக தகவலையும், வீடியோவையும் வெளியிட்டு இருக்கின்றது. அதேநேரத்தில், காரின் பதிவெண்ணை வைத்து நாங்கள் ஆராய்ந்ததில் அந்த கார் ஓர் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

அது வேஃபேரர் ஃபில்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் துல்கர் சல்மானும் ஒருவர் என்பது கவனிக்கத்தகுந்தது. ஆகையால், இந்த காரை அவர் வாங்கிவிட்டார் என்பது உறுதியாக தெரிகின்றது. மலையாளம் மற்றும் தமிழ் என தென்னிந்திய மொழிகளில் துல்கர் சல்மான் தற்போது பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றார்.
குறிப்பாக, சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியாகிய லக்கி பாஸ்கர் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. விரைவில் காந்தா எனும் திரைப்படம் திரைக்கு வர இருக்கின்றது. இந்த நிலையிலேயே இந்த பழைய ஆடம்பர காரை வாங்கி ஒட்டுமொத்த இந்தியாவையும் துல்கர் திரும்பி பார்க்கச் செய்திருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போதும் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு பழைய ரேஞ்ச் ரோவர் வோக் ஆட்டோபயோகிராஃபி காருக்கு இருப்பதை வெளிக்காட்டும் விதமாக துல்கர் சல்மானின் இந்த கொள்முதல் சம்பவம் அமைந்திருக்கின்றது. இந்த காரில் அவர் ஏற்கனவே வலம் வர தொடங்கிவிட்டார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








