சென்னை சாலையில் வித்தியாசமான நம்பர் பிளேட்டுடன் சுற்றி திரிந்தது அவரோட காரா!.. ஆமா இவரு இங்க என்ன செய்யுறாரு!

"யாருக்குதாங்க சூப்பர் காரை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்காது".. அப்படிதான் ஹாட்டான சென்னை டிராஃபிக்கில் சுற்றி திரிந்த சூப்பர் காரை பார்த்த பலர் மிரண்டு போயிருக்கின்றனர். சிவப்பு நிறத்திலான அந்த கார் ஃபெர்ராரி நிறுவனத்தின் 296 ஜிடிபி (Ferrari 296 GTB) மாடல் ஆகும்.

இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 5.4 கோடிகள் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆன்-ரோடில் இதன் விலை எப்படியும் ஆறு கோடியை தொட (அ) தாண்டக் கூட செய்யும் என கூறப்படுகின்றது. இத்தகைய விலை உயர்ந்த காரை பார்த்தே நம்மை சென்னை வாசிகள் பலர் விழிபிதுங்கி நின்றிருக்கின்றார்.

Dulquer salmaan ferrari car

இந்த சூப்பர் கார் ஓர் பிரபலத்திற்கு சொந்தமானது ஆகும். தமிழ் திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரம் அல்ல அவர். அவர் ஓர் மலையாள திரையுலகைச் சேர்ந்தவர் ஆவார். துல்கர் சல்மானே இந்த காரின் உரிமையாளர் ஆவார். இவர் பான் இந்தியா திரைப் படங்கள் சிலவற்றிலும் நடத்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இவர் சமீபத்திலேயே இந்த ஃபெர்ராரி 296 ஜிடிபி காரை கொள்முதல் செய்தார். இந்த நிலையிலேயே நடிகரின் சூப்பர் சாலையில் பயணிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. இந்த கார் சாலையில் தென்படுவது இதுவே முதல் முறை ஆகும். ஏனெனில் கடந்த வாரத்திலேயே இந்த கார் கொள்முதல் அரங்கேற்றம் நிகழ்ந்தது.

Dulquer salmaan ferrari 296 gtb

மேலும், இதுவே மலையாள திரை உலகின் முதல் ஃபெர்ராரி 296 ஜிடிபி-யும் ஆகும். ஆகையால், இவரை வாகன உலகமே இந்த காரினால் திரும்பி பார்க்கச செய்தது. ஆமாங்க, வேறு எந்த மலையாள நட்சத்திர நடிகர்களும் இந்த சூப்பர் வைத்திருக்கவில்லை. மலையாள திரை உலகின் உச்ச நட்சத்திரம் மோகன்லால் இடத்தில்கூட இந்த கார் இல்லை.

ஆனால், துல்கர் அக்காரை வாங்கிவிட்டார். இந்த நிலையிலேயே, சென்னையை சாலையை அதிரவிட செய்யும் வகையில் இந்த காரில் துல்கர் சல்மானின் ஃபெர்ராரி கார் பயணித்திருக்கின்றது. அந்த காரில் வித்தியாசமான நம்பர் பிளேட் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை வைத்து பார்க்கையில் இன்னும் அந்த கார் பதிவு செய்யப்படவில்லை என தெரிகின்றது.

Ferrari 296 gtb

ஆகையால், தற்காலிக பதிவெண்ணுடன் அது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும், நடிகர் புதிய அல்லது பேன்சியான நம்பருக்காக காத்திருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. துல்கர் சல்மானிடத்தில் இருக்கும் பெரும்பாலான கார்களில் 369 என்கிற எண் பயன்படுத்தப்பட்டு இருக்கும். ஆகையால், அந்த பதிவெண்ணிற்காக அவர் காத்திருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகின்றது.

மேலும், இந்த கார் சென்னையில் வைத்து பதிவு செய்யப்படலாம் என தெரிகின்றது. கொச்சியில் இருப்பதைப் போலவே இவருக்கு சென்னையிலும் மிக பெரிய கார் கலெக்சன் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. காரின் பின் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள் மட்டுமே தற்போது வெளியாகி உள்ளன. ஆகையால், காரில் துல்கர் பயணித்தாரா என்பது துள்ளியமாக தெரியவில்லை.

Dulquer salmaan ferrari 296 gtb spotted in chennai

இந்த காரின் வெளிப்புறம் மட்டுமல்ல உட்புறமும் சிவப்பு நிறத்தாலேயே அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த காரின் வெளிப்புறத்தின் அழகை கூடுதலாக்கும் பொருட்டு மஞ்சள் நிற காலிபர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஃபெர்ராரி 296 ஜிடிபி ஓர் என்ட்ரீ லெவல் ஸ்போர்ட்ஸ் கார் ஆகும்.

பிரீமியம் லுக் மற்றும் அம்சங்கள் ஆகியவற்றை இந்த கார் மிக தாராளமாக தாங்கி இருக்கும். இதன் இருக்கை மிகவும் சொகுசானதாக என்ஜாய் செய்து ரைடை அனுபவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில் இதன் வேகம் கட்டுக்கடங்கா வேகம் ஆகும். ஃபெர்ராரி நிறுவனம் இந்த காரில் ஹைபிரிட் வசதிக் கொண்ட, 3.0 லிட்டர், ட்வின் டர்போசார்ஜட் மோட்டாரை பயன்படுத்தி இருக்கின்றது.

இந்த மோட்டாரும், இதன் ஹைபிரிட் சிஸ்டமும் இணைந்து 830 எச்பி திறன் மற்றும் 740 என்எம் டார்க்கை வெளியேற்றும். இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 330 கிமீ ஆகும். இதுதவிர, வெறும் 2.9 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை இந்த கார் எட்டிவிடும்.

அதேநேரத்தில் மணிக்கு 200 கிமீ எனும் வேகத்தை எட்ட இந்த கார் வெறும் 7.3 செகண்டுகளையே எடுத்துக் கொள்ளும். இந்த பவர்ஃபுல் வேக திறனை கட்டுப்படுத்த ஏதுவாக சூப்பரான பிரேக்கிங் சிஸ்டத்தை இந்த காரில் ஃபெர்ராரி வழங்கி இருக்கின்றது. உதாரணமாக, ஃபெராரி 296 ஜிடிபி கார் மணிக்கு 200 கிமீ வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கின்றது என வைத்துக் கொள்ளுவோம்.

இந்த உச்சபட்ச வேகத்தில் இருந்து பூஜ்ஜியம் கிலோ மீட்டர் வேகத்தை எட்ட இந்த காருக்கு வெறும் 107 மீட்டர் இடைவெளியே போதுமானது. இந்த அளவிற்கு சூப்பரான பிரேக்கிங் சிஸ்டமே ஃபெரிர்ராரி 296 ஜிடிபி சூப்பர் காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த காரில் ப்யூர் இவி மோடிலும் பயணிக்க முடியும்.

இந்த மோடில் பயணிக்கும்போது உச்சபட்சமாக 25 கிமீ தூரம் வரை பெட்ரோல் இன்றி பயணிக்க முடியும். இந்த ரேஞ்ஜ் திறனுக்காக சிறிய 7.45 kWh பேட்டரி பேக் 296 ஜிடிபி காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த ப்யூர் இவி மோடில் பயணிக்கும்போது மணிக்கு 135 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நாளுக்கு நாள் சூப்பர் கார்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. திரை நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் மத்தியில் இந்த வகை கார்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவிக் கொண்டிருப்பதே இதற்கு காரணம் ஆகும். ஆனால், ஒவ்வொரு சூப்பர் கார்களின் விலையும் பல கோடி ரூபாய்களாக இருக்கின்றன.

Article Published On: Tuesday, November 14, 2023, 20:27 [IST]
English summary
Dulquer salmaan owned ferrari 296 gtb spotted in chennai
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X