ஹோட்டலுக்கு வெளியே காத்து கிடந்த 6 கோடி ரூபாய் கார்! ஓட்டீட்டு வந்தது அவரா! மொத தடவையா வீடியோ மாட்டியிருக்கு!

தமிழ் (Tamil) மற்றும் மலையாளம் (Malayalam) உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் (Movies) நடித்து வருபவர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). நடிகர் மம்முட்டியின் (Mammootty) மகன் என்றாலும் கூட, தனது தனி திறமையால், வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக துல்கர் சல்மான் மாறியுள்ளார்.

திரைப்படங்களை கடந்து, கார்களையும் அதிகம் நேசிப்பவராக துல்கர் சல்மான் அறியப்படுகிறார். அவரது விலை உயர்ந்த கார் கலெக்ஸன் (Car Collection) இதற்கு ஒரு சாட்சி. ஏற்கனவே பல்வேறு கார்கள் இருக்கும் நிலையில், புதிதாக ஃபெராரி 296 ஜிடிபி (Ferrari 296 GTB) கார் ஒன்றையும் துல்கர் சல்மான் தற்போது வாங்கியுள்ளார்.

Dulquer Salmaan Spotted Driving Ferrari 296 GTB

இந்த காரின் புகைப்படங்கள் சமீப நாட்களாக இணையத்தில் வேகமாக பரவி வந்தன. இந்த சூழலில் தற்போது இந்த காரின் வீடியோவே நமக்கு கிடைத்துள்ளது. இந்த வீடியோவில் 2 விலை உயர்ந்த கார்களை நம்மால் பார்க்க முடிகிறது. இதில் ஒன்று ஃபெராரி 296 ஜிடிபி ஆகும். இந்த காரை துல்கர் சல்மான்தான் ஓட்டி வந்தார்.

மற்றொன்று மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி (Mercedes-Benz G63 AMG) கார் ஆகும். இதுவும் துல்கர் சல்மானுடையதுதான். ஆனால் அந்த காரை வேறு ஒருவர் ஓட்டியுள்ளார். ஐதராபாத் (Hyderabad) நகரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு (Hotel) இந்த 2 கார்களும் வந்தபோது, இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

Ferrari 296 GTB

முதலில் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி கார் ஹோட்டல் வளாகத்திற்கு உள்ளே சென்று விட, துல்கர் சல்மான் ஓட்டி வந்த ஃபெராரி 296 ஜிடிபி வெளியே காத்து கொண்டிருந்தது. மற்ற கார்கள் உள்ளே செல்ல ஏதுவாக துல்கர் சல்மான் வெளியே காத்திருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு அவரும் உள்ளே சென்று விட்டார்.

துல்கர் சல்மான் புதிதாக வாங்கியுள்ள ஃபெராரி 296 ஜிடிபி காரின் விலை (Price) 5.44 கோடி ரூபாய் ஆகும்! இதற்கே ஆச்சரியப்பட்டு விடாதீர்கள். இது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. ஆன் ரோடு விலை தோராயமாக 6.25 கோடி ரூபாய் வரும்! இதில் இருந்தே துல்கர் சல்மான் கார்களை எவ்வளவு அதிகமாக நேசிக்க கூடியவர்? என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

செயல்திறனை பொறுத்தவரையில் இந்த காரில், 2.9 லிட்டர் வி6 பெட்ரோல் (Petrol) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் எலெக்ட்ரிக் மோட்டாரும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் (Hybrid Petrol Engine) சிறப்பான செயல்திறனை வழங்க கூடியது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் எட்டி விடக்கூடிய திறன் இந்த காருக்கு உண்டு.

அதே நேரத்தில் இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 330 கிலோ மீட்டர்கள் ஆகும். இந்த வீடியோவில் நாம் பார்க்கும் மற்றொரு விலை உயர்ந்த காரான மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி காரும், நாங்கள் ஏற்கனவே கூறியபடி, துல்கர் சல்மானுடையதுதான். கடந்த 2021ம் ஆண்டு துல்கர் சல்மான் வாங்கியபோது, இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலை 2.44 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இவ்வளவு நாட்களாக துல்கர் சல்மான் வாங்கிய ஃபெராரி 296 ஜிடிபி காரின் புகைப்படங்களை மட்டுமே நாம் பார்த்து வந்தோம். அனேகமாக இந்த காரின் வீடியோ நாம் பார்ப்பது இதுவே முதல் முறையாக இருக்கும். எனவே இந்த வைரல் வீடியோவை (Viral Video) ரசிகர்கள் பலரும் சமூக வலை தளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 6, 2023, 13:02 [IST]
English summary
Dulquer salmaan spotted driving ferrari 296 gtb worth rs 6 25 crore viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+