இந்த நகரும் அரண்மனையையா துல்கர் சல்மான் வாங்கியிருக்காரு!! அம்மாடியோ... விலை எவ்வளவு தெரியுமா?

துல்கர் சல்மான் (Dulquer Salmaan), மலையாள சினிமா உலகின் முன்னணி நடிகராக இருப்பவர். இவர் சமீபத்தில் விலையுயர்ந்த ஃபெராரி 296 ஜிடிபி காரை வாங்கி இருந்ததை பற்றி உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த நிலையில், துல்கர் சல்மானின் ஃபெராரி காரின் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

கேரள மக்கள் பொதுவாகவே ஆட்டோமொபைல் வாகனங்களின் மீது கூடுதல் ஆர்வம் கொண்டவர்கள் என்பது நமக்கு தெரியும். இதில் மலையாள சினிமா நட்சத்திரங்கள் மட்டும் விதிவிலக்காகவா இருக்கப் போகிறார்கள்? மலையான சினிமா உலகின் மெகா ஸ்டார் என அழைக்கப்படும் மம்முட்டி மிகுந்த கார் பிரியர் என்பதை பல நிகழ்வுகளில் பார்த்திருக்கிறோம்.

dulquer salmaans ferrari 296 gtb

அவருக்கு தப்பாமல் வந்த பிள்ளையாக, அவரது மகனும் நடிகருமான துல்கர் சல்மானும் புது புது கார்களை வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். இந்த வகையில், துல்கர் சல்மான் வாங்கி இருக்கும் புதிய கார் ஃபெராரி 296 ஜிடிபி ஆகும். ஷோரூமில் இருந்து காரை வெளியே கொண்டுவந்த உடனே, அதனை துல்கர் சல்மான் சாலையில் ஓட்டிச் சென்ற வீடியோவை கடந்த வாரம் பார்த்திருப்பீர்கள்.

டெல்லியில் ஷோரூமில் இருந்து இந்த ஃபெராரி கார் சென்னையில் உள்ள ஒரு ஷோரூமிற்கு கொண்டுவரப்பட்டது. காரை டெலிவிரி பெறுவதற்காகவே கேரளாவில் இருந்து துல்கர் சல்மான் சென்னைக்கு வந்தார். இந்த நிலையில், நடிகர் துல்கர் சல்மானின் ஃபெராரி 296 ஜிடிபி காரின் நெருக்கமான படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

dulquer salmaans ferrari 296 gtb

ஆட்டோமொபைலி அர்டெண்ட் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காரின் இந்த படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. சென்னைக்கு கொண்டுவரப்படுவதற்கு முன்னர் டெல்லியில் ஷோரூமில் துல்கர் சல்மானுக்கு டெலிவிரி செய்வதற்காக கார் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது இந்த படங்கள் எடுக்கப்பட்டு உள்ளன. அவற்றை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

ஃபெராரி கார்கள் என்றாலே முதலாவதாக நம் நினைவிற்கு வருவது சிவப்பு நிறம் தான். இன்றைய கால ஃபெராரி கார்களில் சிவப்பு நிற பெயிண்ட் ஆப்ஷன் நன்கு பளிச்சிடும் சிவப்பு நிறத்தில் வழங்கப்படுகிறது. ஆனால், ஆரம்பக்கால கட்டத்தில் அடர் சிவப்பு நிறத்தையே தனது கார்களின் பெயிண்ட்டில் ஃபெராரி பயன்படுத்தியது.

dulquer salmaans ferrari 296 gtb

அந்த அடர் சிவப்பு நிறத்தை ரோஸ்ஸோ ரூபினோ மெட்டாலிஸாட்டோ என அழைக்கின்றனர். இதே பிரத்யேகமான சிவப்பு நிறத்தில்தான் துல்கர் சல்மான் புதிய ஃபெராரி 296 ஜிடிபி காரை வாங்கி உள்ளார். தற்போது வெளியிடப்பட்டுள்ள படங்களில் காரின் உட்பக்க கேபினையும் பார்க்க முடிகிறது. துல்கரின் இந்த புதிய ஃபெராரி காரின் உட்பக்கம் டேன் நிறத்தில் உள்ளது.

காரின் வெளிப்பக்க பெயிண்ட்டுக்கு ஏற்ப காருக்கு உள்ளே டேடோனா இருக்கைகள் போர்டியாக்ஸ் இன்செர்ட்கள் உடன் வழங்கப் படுகின்றன. தற்போது வெளியாகி உள்ள படங்களில் காரின் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஸ்டேரிங் சக்கரம் மற்றும் பெடில் ஷிஃப்டர்கள் உள்ளிட்டவற்றையும் பார்க்க முடிகிறது.

dulquer salmaans ferrari 296 gtb

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிரத்யேகமான ரோஸ்ஸோ ரூபினோ மெட்டாலிஸாட்டோ பெயிண்ட் ஆப்ஷனை தனது புதிய ஃபெராரி காருக்கு தேர்வு செய்து இருப்பதில் இருந்தே நடிகர் துல்கர் சல்மான் எந்த அளவிற்கு கார் பிரியர் என்பதை அறியலாம். துல்கரின் ஃபெராரி 296 ஜிடிபி காரை பற்றி என்ன நினைக்கிறீர்கள் கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

More from DriveSpark

Article Published On: Friday, November 17, 2023, 16:45 [IST]
English summary
Dulquer salmaans ferrari 296 gtb pictures check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X