கர்ப்ப காலத்தில் ரயிலில் டிராவல் செய்யலாமா? அது பாதுகாப்பானதா? மருத்துவர்கள்கூட இந்த டிப்ஸ்கள சொல்ல மாட்டாங்க!
பெரும்பாலும் கர்ப்ப காலத்தில் நீண்ட தூரம் டிராவல் செய்வதை தவிர்ப்பதே நல்லது. அதேவேளையில், குடும்ப சூழல் மற்றும் கட்டாயத்தின் காரணமாக ஒரு சில கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க முடியாத பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் எந்த டிரான்ஸ்போர்ட்டை தேர்வு செய்வது என்கிற கேள்வி உங்களுக்கு எழும்பலாம்.
ஒரு சிலர் பேருந்தை காட்டிலும் ரயில் பெஸ்ட்டானது என கூறுவார்கள். என்னதான் மற்றவர்கள் ரயில் பயணம் பெஸ்டானது என கூறினாலும் உண்மையில் அது கர்ப்ப காலத்தில் டிராவல் செய்ய ஏதுவானதுதானா? இந்த டிராவல் பாதுகாப்பானதாக இருக்குமா? என்கிற சந்தேகம் உங்களுக்கு எழும்பக்கூடும். இந்த கேள்விக்கான பதிலையே இந்த பதவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

கருவுற்ற காலத்தில் ரயிலில் டிராவல் செய்யலாமா? மிக தாராளமாக ரயிலில் கர்ப்பிணி பயணிக்கலாம். பேருந்தைக் காட்டிலும் அதிக பாதுகாப்பானதே ரயில் பயணம். சாலை மார்க்கமாக பயணிக்கும்போது அதிக வளைவுகள், திருப்பங்கள் மற்றும் பள்ளம்-மேடுகளை பேருந்துகள் சந்திக்க வேண்டி இருக்கும். ஆனால், ரயிலுக்கு இந்த மாதிரியான பிரச்னை எதுவும் இல்லை.
சொல்லப்போனால் அது மிகவும் ஸ்மூத்தாக இயங்கும். குறிப்பாக திடீர் பிரேக்குகள் ரயில் போடப்படாது. ஆகையால், மிக மிக பாதுகாப்பான டிரான்ஸ்போர்ட்டாக கர்ப்பிணி பெண்களுக்கு ரயில் வழி பயணம் இருக்கின்றது. கர்ப்ப காலத்தில் பெண்கள் அடிக்கடி கழிவறை நாட வேண்டி இருக்கும். ரயிலில் பயணிக்கும்போது இதற்கு எந்த தடையும் இருக்காது.

ஆனால், பேருந்தில் பயணிக்கும்போது ஒவ்வொரு முறையும் பேருந்து ஓட்டுநரிடம் இதற்காக கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டி இருக்கும். இதனையும் நம்மால் தவிர்த்துக் கொள்ள முடியும். மேலும், சௌகரியமாக படுத்துக் கொண்டே ரயில்களில் டிராவல் செய்ய முடியும். அதேவேளையில், நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடங்கும் முன் உங்கள் மருத்துவரை ஒரு முறை ஆலோசித்து விடுவதே ரொம்ப நல்லது.
ரயில் எந்த கிளாஸ் பெட்டி பெஸ்ட்டானது? எந்த வகுப்பாக இருந்தாலும் ஓகேதான். ஆனால், லோயர் பெர்த்தாக கட்டாயம் இருக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் எளிதில் அமர்ந்து, எழுந்திருக்க இந்த இருக்கையே வசதியானதாக இருக்கும். அதேநேரத்தில், சில மருத்துவர்கள் ஏசி3 அல்லது 2 டையர் பெஸ்ட்டானது கூறுகின்றனர்.
இங்கு போதுமான இடைவெளி அவர்களுக்கு கிடைக்கும். நீங்கள் இருக்கும் பெட்டியில் அதிகளவு குலுங்கல் தெரிகின்றது எனில் கட்டாயம் வேறு பெட்டிக்கு மாறுவதே நல்லதே. டிடிஆரிடம் ரெக்குவஸ்ட் செய்து இதை உடனடியாக செய்துவிடுவது நல்லது. அதிக அலுங்கல், குலுங்கல்கள் தாய்க்கும் சேய்க்கும் நல்லது அல்ல.

பயணத்திற்கு முன் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: கடைசி நிமிட அவசரத்தை தவிர்க்க வேண்டும். நாளை பயணம் என்றால் முன்கூட்டியே பயணத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் முதல் நாளே தயார் செய்து விட வேண்டும். குறிப்பாக, தினமும் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து மாத்திரைகளை கையோடு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதை ஏதோ ஓர் பையில் போட்டு விடாமல் சுலபமாக எடுக்கும் வகையில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ரயிலில் ஏறிய பின்னர் எது எங்கு இருக்கின்றது என தேடிக் கொண்டிருக்க முடியாது. ஆகையால், முன்கூட்டியே முக்கிய தேவைகளை (மருந்து, மாத்திரைகளை) கையோடு எடுத்துக் கொள்வது நல்லது. இதேபோல், உங்கள் மருத்துவ ஆவணங்களையும் கையோடு வைத்துக் கொள்ளுங்கள்.
செல்லும் இடத்தில் ஏதேனும் அவசர தேவை எனில் அதை வைத்து தற்காலிகமாக வேறொரு மருத்துவரின் உதவியை நாடிக் கொள்ள உதவியாக இருக்கும். அதேவேளையில், அதிக லக்கேஜ்களை உடன் எடுத்துச் செல்வதை தவிர்ப்பதும் நல்லது. அவசர காலத்தில் அனைத்தையும் கையாண்டுக் கொண்டிருக்க முடியாது. இத்துடன், முடிந்த அளவு விரைவாக ரயில் நிலையம் வந்து சேருவதும் நல்லது. இதன் வாயிலாக நெரிசலை தவிர்க்க முடியும்.

உணவு உட்கொள்ளும் விஷயத்தில் கவனம் அவசியம்: டிராவலை ஸ்டார்ட் செய்யும்போது அளவுக்கு அதிகமான அல்லது உபாதைகளை ஏற்படுத்தக் கூடிய உணவுகளை தவிர்ப்பதே நல்லது. குறிப்பாக, அசைவ உணவுகளை தவிர்த்து விடலாம். அதேவேளையில், வீட்டிலேயே உணவை தயார் செய்து எடுத்துக் கொண்டு போகலாம்.
இரவில் மீண்டும் பசிக்கும் எனில் பழங்களை உட்கொண்டு போசாக்கைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், பழங்களை முன் கூட்டியே வெட்டி எடுத்துச் செல்ல வேண்டாம். அதில் விரைவில் பேக்டீரியா தொற்று ஏற்படக் கூடும். வாழைப்பழத்தை டிராவலின்போது உட்கொள்ளலாம். எளிதில் செறிக்கும், அதேநேரத்தில், பசியையும் அது ஆற்றும்.

இதைவிட மிக முக்கியமாக தேவையான நீரை கையோடு எடுத்துச் செல்ல மறந்துவிடக் கூடாது. வெளியில் கிடைக்கும் நீர் எந்த அளவிற்கு நல்லதாக (சுத்தமாக) இருக்கும் என யூகிக்க முடியாது. ஆகையால், வீட்டிலேயே தேவையான தண்ணீரை காய்ச்சி வடிக்கட்டி எடுத்துக் கொண்டு போகலாம்.
தனியாக பயணமா வேண்டவே வேண்டாம்: கர்ப்ப காலத்தில் தனியாக, அதுவும், நீண்ட தூர பயணத்தை மேற்கொள்வதை முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள். ரயில், கார் என எதில் சென்றாலும், எக்காரணத்தைக் கொண்டும் தனியாக மட்டும் பயணிப்பதற்கான பிளானை போடக் கூடாது. எப்போதும் ஒருவர் உதவிக்காக உங்களுடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

ரயிலில் பயணிக்கும்போது கழிவறைக்குச் செல்லும்போதுகூட உடன் துணையை அழைத்துச் செல்வதே நல்லது. கர்ப்ப காலத்தின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் கர்ப்பிணி பெண் என்றால் எப்போது வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் அவருக்கு நடக்கலாம். அதைச் சமாளிக்க கட்டாயம் ஓர் துணை தேவை என்பதை தப்பியும் மறந்துவிடக் கூடாது.
டிரைவ்ஸ்பார்க் டிப்ஸ்கள்: அசௌகரியமான நிலையில் அமரக் கூடாது. நீண்ட நேரம் அமர்ந்தபடியே இருத்தக் கூடாது. தேவைப்படும்போது படுத்துக் கொள்வதே நல்லது. அதேநேரத்தில், அவ்வப்போது தேவைக்கேற்ப ரயில் பெட்டிக்குள்ளேயே ஓர் சிறிய வால்க்கிங்கை போட வேண்டும். இதன் வாயிலாக உங்கள் கருவறைக்குள் இருக்கும் குழந்தையை ஆக்டிவாக வைத்திருக்க முடியும். மேலும், ரத்த ஓட்டமும் சீராகும். இதுதவிர, பதற்றமில்லாமல் மிகவும் தைரியமாக பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications









