ரோடு என்ஜினீயரிங்கின் அற்புதம்!! குஜராத்தில் பெரிய தொகையை செலவழித்துள்ள மத்திய அரசு - சுமார் ரூ.9,000 கோடியாம்
மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள துவாரகா விரைவுச்சாலையின் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். குறிப்பிட்ட அடி உயரத்திற்கு மேல் எழுப்பப்பட்ட இந்தியாவின் முதல் 8-வழி சாலை என கூறப்படும் இந்த துவாரகா நெடுஞ்சாலையின் பிரம்மாண்டத்தை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவின் முதல் மேல்-எழுப்பப்பட்ட சாலை திட்டமான துவாரகா விரைவுச்சாலையின் கவர்ச்சிக்கரமான தோற்றத்தை காட்டும் விதமாக, கழுகு பார்வையில் இருந்து எடுக்கப்பட்ட இந்த விரைவுச்சாலையின் வீடியோவை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டுவிட்டர் பதிவில், "பொறியியலின் அற்புதம்: தி துவாரகா விரைவுச்சாலை! எதிர்காலத்திற்கான அதிநவீன-கலை பயணம்" என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
34 மீட்டர்கள் அகலத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விரைவுச்சாலை சுமார் ரூ.9,000 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த விரைவுச்சாலையை குறிப்பிட்ட அடி உயரத்திற்கு தாங்கி பிடிக்க இடையிடையே வெறும் ஒற்றை தூண் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் துவாரகா நகரில் உள்ள ஷிவ் மூர்த்தி என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலை எண் 48இல் இருந்து துவங்கும் இந்த புதிய விரைவுச்சாலை ஹரியானா மாநிலத்தில் உள்ள கெர்கி டவுலா என்ற பகுதியில் சுங்க சாவடியில் நிறைவடைகிறது.
அதாவது, இடையே ராஜஸ்தான் என்கிற பெரிய மாநிலத்தையே மொத்தமாக இந்த விரைவுச்சாலை கவர் செய்கிறது. ஹரியானா மாநிலத்தில் வெறும் 19கிமீ தொலைவிற்கு மட்டுமே இந்த சாலை அமைந்துள்ளது. ஆனால், மொத்த ரூ.9,000 கோடியில் கிட்டத்தட்ட பாதிக்கு மேலான தொகை இந்த விரைவுச்சாலையை ஹரியானாவில் அமைப்பதற்காகவே செலவிடப்பட்டு உள்ளது. ஏனெனில், ஹரியானாவிற்குள் இந்த துவாரகா விரைவுச்சாலை மொத்தமாக மேல்-எழுப்பப்பட்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக, ஒரு விரைவுச்சாலையை அமைப்பதற்கு ஒவ்வொரு கிமீ தொலைவிற்கும் ரூ.18.2 கோடி செலவாகும். ஆனால் ஹரியானாவில் போட்டப்பட்டது போன்று, விரைவுச்சாலையை குறிப்பிட்ட அடி உயரத்தில் தூண்களின் உதவியுடன் அமைப்பதற்கு ஒவ்வொரு கிமீ-க்கும் சுமார் ரூ.251 கோடி செலவாகுவதாக தேசிய நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.
ஆனால், மத்திய அரசின் இந்த பேச்சை நம்பாத ஆம் ஆத்மி போன்ற கட்சிக்கள் இந்த துவாரகா விரைவுச்சாலை திட்டத்தில் பெரிய அளவில் மோசடிகள் நடைபெற்று உள்ளதாக குற்றஞ்சாட்டி வருகின்றன. 4-ஆம் கட்ட சாலையாக, அதாவது எந்தவொரு இடையூறும் இன்றி சவுகரியமாக அதிவேகமாக பயணிக்க ஏற்ற சாலையாக துவாரகா விரைவுச்சாலை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த விரைவுச்சாலையில் மேம்பாலங்கள், சுரங்கங்கள் மற்றும் அண்டர் பாஸ்கள் உள்ளன.

மேலும், சேதம் அடைந்த பகுதிகளை விரைவாக சீரமைக்க ஏதுவான கிரேட் சாலைகள் துவாரகா விரைவுச்சாலையில் இடையிடையே போடப்பட்டுள்ளன. அதாவது, எங்கு சாலை சேதமடைய அதிக வாய்ப்புள்ளதோ அந்த பகுதிகளில் கிரேட் சாலை போடப்பட்டுள்ளது. அதேபோல், இந்த விரைவுச்சாலையின் பெரும்பாலான பகுதிகளில் மேல் எழுப்பப்பட்ட சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மற்ற வாகனங்களின் இடையூறு இருக்காது என்பது மட்டுமின்றி, விலங்குகள் உள்ளிட்டவற்றின் இடையூறும் தவிர்க்கப்படும்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக புதிய துவாரகா விரைவுச்சாலை இண்டெலிஜண்ட் டிரான்ஸ்போர்ட் சிஸ்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. பல பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் கூட ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த சிஸ்டத்தின் மூலமாக சாலையின் ஏதேனும் ஒரு பகுதியில் விபத்து ஏற்பட்டாலோ அல்லது வேறெந்த காரணத்திற்காகவோ அவசர உதவி அழைக்கப்பட்டால் அடுத்த 10- 15 நிமிடங்களில் சம்மந்தப்பட்ட இடத்திற்கு ஆம்புலன்ஸ் சென்றடைந்துவிடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாடு முழுவதும் விரைவுச்சாலைகளை விரிவுப்படுத்துவதில் நம் மத்திய அரசு முனைப்புடன் உள்ளதாக ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகிறோம். இதற்கு, இந்த துவாரகா விரைவுச்சாலை மிக சிறந்த உதாரணம். நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளை விரிவுப்படுத்துவது மட்டுமில்லாமல், அதிக செலவாகினாலும் பரவாயில்லை என அவற்றை தரமானவைகளாக அமைக்க முயற்சிக்கும் நமது மத்திய அரசின் கொள்கை பாராட்டத்தக்கது.


Click it and Unblock the Notifications









