பேசாம ஆடி கார் வாங்கற பணத்துல இந்த குட்டி விமானத்தை வாங்கிடுவோமா?

By Saravana Rajan

விமானப் பயணம் என்பதே காஸ்ட்லியான விஷயமாக பார்க்கப்படும் நிலையில், தனி நபர் விமானம் என்பது கோடீஸ்வரர்களுக்கே எட்டாக்கனியான விஷயம்தான். விமானத்தை இறக்குவதற்கு ஒரு கட்டணம், நிறுத்துவதற்கு ஒரு கட்டணம், பார்க்கிங் செய்வதற்கு கட்டணம், ஏற்றுவதற்கு தனி, பறப்பதற்கு தனி, ஊழியர்களுக்கான சம்பளம் என்று தலைசுற்ற வைக்கும் அளவுக்கு செலவீனம் பிடித்த ஜோலிதான்.

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற நோக்கோடு e-Go என்ற நிறுவனம் புதிய குட்டி விமானத்தை வடிவமைத்துள்ளது. உங்களது கார் கராஜிலேயே தனி இடத்தை ஒதுக்கி கொடுத்தால், பதுமை போல பதுங்கிவிடும் அளவுதான் இதன் வடிவம். அந்தளவுக்கு மிக மலிவான செலவீனம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த விமானம் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

கார்பன் ஃபைபர் பாடி

கார்பன் ஃபைபர் பாடி

எடை குறைப்பிற்காக இந்த விமானத்தில் இலகு எடையும், உறுதியும் மிக்க கார்பன் ஃபைபர் பாகங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கண்ணாடி மூடியின் ஃப்ரேம், சக்கரங்களுக்கான தாங்கிகள் போன்றவற்றில் மட்டும் உறுதியான ஸ்டீல் பாகங்கள் இருக்கின்றன. இதனால், எடை மிகவும் குறைவாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த குட்டி விமானத்தில் ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும். அதுவும் இந்த விமானத்தை ஓட்ட கற்றுக் கொண்டவர்கள் இயக்க முடியும். அதிக சிரத்தை எடுக்க வேண்டாம். இ- கோ நிறுவனமே இதற்கான பயிற்சியை சிமுலேட்டரை வைத்து வழங்குகிறது.

 எஞ்சின்

எஞ்சின்

ஆள் இல்லா உளவு விமானங்களில் பயன்படுத்தப்படும் 30 எச்பி திறன் கொண்ட வாங்கேல் ரோட்டரி எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் உயர்தர பெட்ரோலில் இயங்கும்.

மைலேஜ் அதிகம்

மைலேஜ் அதிகம்

இந்த விமானம் 3.6 லிட்டர் பெட்ரோலில் 100 கிமீ பயணிக்கும். எனவே, அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட பறக்கும் வாகனமாகவும் கருத முடியும்.

வேகம்

வேகம்

மணிக்கு 104 கிமீ வேகத்தில் 10,000 அடி உயரம் வரை பறக்கும். குறைந்த தூர பயணங்களுக்கு மிகச் சிறப்பானதாக இருக்கும்.

அதிகபட்ச சுமை

அதிகபட்ச சுமை

இந்த விமானத்தின் எஞ்சின் அதிகபட்சமாக 270 கிலோ எடையை சுமந்து பறக்கும். விமானத்தை ஓட்டுபவர் 110 கிலோ எடைக்கு மிகாமல் இருக்க வேண்டும். 15 கிலோ பொருட்களை எடுத்துச் செல்லலாம்.

 கராஜில் நிறுத்தும் வசதி

கராஜில் நிறுத்தும் வசதி

இந்த விமானத்தில் முன்னால் கொடுக்கப்பட்டிருக்கும் சிறிய இறக்கை மற்றும் முதன்மை இறக்கைகளை எளிதாக கழற்ற முடியும். எனவே, கார் நிறுத்தும் கராஜில் கூட நிறுத்திவிட முடியும். இதனால், விமான நிலையங்களில் இருக்கும் ஹேங்கர்களில் நிறுத்தி வைக்க வேண்டிய அவசியம் இருக்காது.

 ஓடுபாதை நீளம்

ஓடுபாதை நீளம்

இந்த குட்டி விமானத்திற்கு 300 மீட்டர் நீளமுடைய ரன்வே இருந்தால் போதுமானத. எளிதாக மேலேறி பறக்கும்.

கட்டுப்பாடு

கட்டுப்பாடு

இந்த விமானத்தில் இருக்கும் பெரிய டிஜிட்டல் திரை மூலமாக எஞ்சின் மற்றும் நேவிகேஷன் இயக்கத்தை கண்காணிக்க முடியும்.

செயல் விளக்கம்

செயல் விளக்கம்

சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் 70 விருந்தினர்களை வரவழைத்து, விமானத்தின் இயக்கத்தையும், சிறப்பம்சங்களையும் டெஸ்ட் பைலட் துணையுடன் செயல்விளக்கம் தரப்பட்டது.

 விலை

விலை

50,000 பவுண்ட் விலையில் இந்த குட்டி விமானமானது விற்பனைக்கு வருகிறது. இந்திய மதிப்பில் ரூ.47 லட்சம் விலை கொண்டது. வர்த்தக ரீதியிலான உற்பத்தியும் முழு வீச்சில் துவங்கப்பட்டு இருக்கிறது.

டெலிவிரி

டெலிவிரி

முதல் விமானம் இங்கிலாந்தின் முன்னாள் விமானப்படை அதிகாரியான பர்னெட் என்பவருக்கு டெலிவிரி கொடுக்கப்பட்டிருக்கிறது. பல வகை விமானங்களை ஓட்டியிருந்தாலும், இந்த விமானம் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளிப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
e-Go aeroplanes ready to soar after first sale.
Story first published: Wednesday, June 15, 2016, 17:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X