பெட்ரோல் செலவை மிச்சம் பண்ண இப்படி ஒரு வழி இருக்குதா? இது தெரியாம ஆயிரக்கணக்குல வேஸ்ட் பண்ணிட்டோமே!

டில்லியில் இந்தியா மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ என்ற கண்காட்சி சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த கண்காட்சியில் ஏகப்பட்ட வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. முக்கியமாக பிளக்ஸ் ஃப்யூயலில் இயங்கும் வாகனங்கள் மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. டூவீலர்கள் கார்கள் என பல வகையான வாகனங்களில் இந்த ஃபிளக்ஸ் ஃப்யூயல் ஆப்ஷன் இருந்தது இதைப்பற்றி தான் நாம் விரிவாக காணப்போகிறோம்.

தற்போது நாம் வாகனங்களில் பெட்ரோல் அல்லது டீசல் என்ற எரிபொருளை பயன்படுத்தி தான் பயணம் செய்து வருகிறோம். இந்த எரிபொருள் என்பது இன்ஜினுக்குள் சென்று எரிக்கப்பட்டு அதன் மூலம் ஏற்படும் சக்தி மூலம் வாகனம் நகர்கிறது. இந்த எரிபொருளை நாம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணையில் இருந்து பிரித்து எடுத்து தயாரிக்கிறோம்.

e20 petrol

ஆனால் இந்தியாவின் எரிபொருள் சக்தி என்பது பெரும்பாலும் வெளிநாட்டை சார்ந்த இருக்கிறது. இந்தியாவிலேயே பெட்ரோல் உற்பத்தி என்பது மிக குறைவாக இருக்கிறது. இதையடுத்து மத்திய அரசு இப்படியான பெட்ரோல் தேவைகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த ஃபிளக்ஸ் ஃப்யூயல் என்ற தொழிற்நுட்பம். இதை பயன்படுத்துவதன் மூலம் பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை குறைகிறது.

அதாவது வழக்கமான பெட்ரோலுடன் எத்தனால் அல்லது மெத்தனால் என்ற வேதியல் பொருட்களை கலப்பதன் மூலம் பெட்ரோல் அதன் திறன் மாறாமல் தொடர்ந்து வாகனங்களில் இயக்க பயன்படும். இந்த எத்தனால் மற்றும் மெத்தனாலை நாம் இந்தியாவிலேயே தயாரிக்க முடியும். அதனால் குறைவான அளவு பெட்ரோலில் இந்த இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எத்தனால் 10 சதவீதம் கலப்பதன் மூலம் நாம் பெட்ரோல் தேவைகளை குறைக்க முடியும்.

e20 petrol

இதையடுத்து மத்திய அரசு ஏற்கனவே பெட்ரோல் எத்தனாலை நாள் கலப்பை செய்து வருகிறது. 10 சதவீதத்திற்கும் மேல் தற்போது எத்தனால் கலக்கப்பட்டு வரும் நிலையில் 20 சதவீதத்தை எட்டிப்பிடிக்க முயற்சி செய்து வருகிறது. இப்படியாக 20 சதவீதம் எத்தனாலை கடந்த பெட்ரோல் என அழைக்கப்படுகிறது.

இந்த 20 சதவீதம் என்ற அளவை மத்திய அரசு விரைவில் 50 சதவீதமாக உயர்த்தி பெட்ரோலை கொண்டு வர வேண்டும் என திட்டமிட்டு வருகிறது. தற்போது நடந்த மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ கண்காட்சியில் மாருதி வேகன் ஆர் முதல் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 முதல் வரை ஏகப்பட்ட வாகனங்கள் இந்த ஃபிளக்ஸ் ஃப்யூயல் இன்ஜின் கொண்ட வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

ஜியோ பிபி நிறுவனம் தான் இந்தியாவில் முதன்முறையாக எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்தியது. தற்போது அனைத்து ஜியோ பிபி பங்குகளிலும் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த எத்தில் ஆல்கஹால் அல்லது எத்தனால் என அழைக்கப்படும் இந்த வேதியல் பொருள் இயற்கையாக நமக்கு கிடைக்க கூடியது.

கரும்பு சக்கையிலிருந்து கிடைக்கக்கூடிய இந்த வேதியல் பொருளான எத்தனாலை பெட்ரோலுடன் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. 20 சதவீதம் எத்தனால் மற்றும் 80 சதவீதம் பெட்ரோல் கலந்த பொருள் இ-20 பெட்ரோல் என அழைக்கப்படுகிறது. விரைவில் இதில் எத்தனால் கலப்பை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது பெட்ரோல் 80 லிட்டருக்கு குறைந்தபட்சம் ரூபாய் 96 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதுவே இ20 பெட்ரோல் என்றால் இதில் 80 சதவீத விலையை நாம் எடுத்துக் கொள்வோம். அதாவது 76.80 ரூபாய்க்கு பெட்ரோல் இருக்கும். தற்போது இந்தியாவில் எத்தனால் லிட்டருக்கு ரூபாய் 55 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. அப்படி என்றால் 55 க்கு 20 சதவீதம் என்பது ரூபாய் 11 ஆகும்.

ஆக ரூபாய் 76.80 மற்றும் ரூபாய் 11 சேர்த்து மொத்தமாக டி20 தற்போது 87.80 என்ற விலையில் தான் விற்பனை ஆகி வருகிறது. அதாவது சாதாரண பெட்ரோலை விட ரூபாய் 8.20 குறைவான விலையில் இந்த இ20 பெட்ரோல் விற்பனையாகி வருகிறது. சாதாரண பெட்ரோலுக்கு பதிலாக இ20 ரக பெட்ரோல் பயன்படுத்தினால் ஆயிரக்கணக்கில் மிச்சப்படுத்த முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எதிர்காலத்தில் இ20 நகர பெட்ரோல் தான் கிடைக்கப் போகிறது. சாதாரண பெட்ரோல் நீங்கள் நினைத்தாலும் கிடைக்காத சூழ்நிலை விரைவில் உருவாக்க போகிறது. தற்போதைய நிலையில் 10 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் தான் பயன்படுத்தி வருகிறீர்கள். இதனால் எதிர்காலத்தில் நிச்சயம் பெட்ரோல் விலை குறைய அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, February 5, 2024, 18:20 [IST]
English summary
E20 petrol saving thousands per month
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+