3ல் 2 பேருக்கு திடீர்ன்னு மைலேஜ் குறைஞ்சிடுச்சு! இ20 பெட்ரோல் குறித்த சர்வேயில் அதிர்ச்சி தகவல்!
இ20 பெட்ரோல் தான் தற்போது இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுவரும் ஒரு முக்கிய விஷயுமாக இரக்கிறது. பழைய வாகனம் வைத்திருக்கும் பலர் நீண்ட நாட்கள் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்துவதால் தங்கள் வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கருதுகின்றனர். சிலர் ஃப்யூயல் லைனில் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கருதுகின்றனர். இதுகுறித்து பலர் பல விவாதங்களை வைத்து வரும் நிலையில் இது குறித்த ஆய்வு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் இ20 பெட்ரோலால் பாதிப்பு ஏற்படுகிறது என்ற பிரச்சனை எழுந்த போதே அரசும் எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களும் இதை திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது குறித்து சோதனை எல்லாம் நடத்தப்பட்ட பாதுகாப்பானது என முடிவு செய்யப்பட்ட பிறகே விற்பனைக்கு வந்துள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் பிரச்சனைகளை சந்தித்துள்ளதாக கூறகின்றனர்.

இது குறித்து லோக்கல் சர்க்கிள் என்ற அமைப்பு சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் 28 சதவதம் பேர் தங்கள் வாகனங்களில் இ20 பெட்ரோலால் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதாவது கார் பயன்பஐடுத்தும் 4 பேரில் ஒருவருக்கு இந்த பிரச்சனை வருகிறது என எடுத்துக்கொள்ள முடியும். இந்த பிரச்சனைகள் பெரும்பாலும் இன்ஜின், ஃப்யூயல் லைன், டேங்க், மற்றம் கார்பரேட்டர் ஆகிய பகுதிகளில் பிரச்சனை ஏற்படுகிறது.
இந்த சர்வேயில் கலந்து கொண்ட 3ல் 2 பேருக்கு தங்கள் வாகனத்தின் மைலேஜ் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.இதனால் எரிபொருளுக்கு ஆகும் செலவு அதிகமாகிறது. இந்த சர்வே இந்தியா முழவதும் உள்ள 331 மாவட்டங்களில் 37,000 மக்களிடம் நடத்தப்பட்டுள்ளது.

இதில் 42 சதவத மக்கள் டயர் 1 நகரங்களில் இர்து வந்துள்ளது. 30 சதவீத மக்கள் டயர் 2 நகரங்களில் இருந்தும், 28 சதவீத மக்கள் கிராம் மற்றும் சிறு நகர பகுதிகளில் இருந்தும் பங்கேற்றுள்ளனர். இந்த ஆய்வி்ல பங்கேற்றவர்களில் 68 சதவீதம் ஆண்கள் தான். மீதம் உள்ளவர்கள் பெண்களாக இருக்கின்றனர்.
இந்த சர்வேயில் பங்கேற்றவர்களில் மத்திய அரசு கொண்டு வரும் இந்த இ20 பெட்ரோலுக்கு ஆதரவளிப்பதாக 52 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர். 20 சதவீத மக்கள் இ20 மற்றும் இ0 பெட்ரோல் என தங்களுக்கு தேர்வு செய்யும் வாய்பு பெட்ரோல் பங்க்களில் வழங்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர்.

எத்தனால் கலந்த பெட்ரோலுக்கும், கலக்கப்படாத பெட்ரோலுக்கும் வெவ்வேறு விதமான கம்பஷன் அம்சங்கள் உள்ளது. எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்டுத்த தகுந்த பெட்ரோல் டேங்க், ஃப்யூயல் லைன்கள், இன்ஜின்கள் அதற்கு ஏற்றார் போல இருக்க வேண்டும். எத்தனால் அதிக அரிப்பு தன்மை கொண்டதாக இருக்கிறது. இதனால் இந்த பொருட்களில் அதற்கான ஸ்பெஷல் கோட்டிங் இருக்கிறது. இது அரிப்பை தடுக்கும்.
அதே நேரம் எத்தனாலில் ஆக்ஸஜன் அளவு அதிகமாக இருக்கும் இதனால் இது இன்ஜினிற்குள் எரியும் போது பெட்ரோலை விட சற்று வித்தியாசமாக எரியும். இதற்கு ஏற்றார் போல இன்ஜின் கேலிபிரேட் சிஸ்டத்தை மாற்றியமைக்க வேண்டும். அப்பொழது தான் இ20 பெட்ரோலுக்க ஏற்றவாறு இன்ஜின் செயல்படும் தற்போது மார்கெட்டில் வரும் இன்ஜின்கள் எல்லாம் இந்த ரக இன்ஜின்களாக மட்டுமே வருகின்றன.இ20 பெட்ரோலை பயன்படுத்துவது மூலம் இந்தியா கச்சா எண்ணெய்க்காக மற்ற நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய தேவை குறையும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிக அளவில் இ20 வாகனங்களை தயாரிக்க துவங்கிவிட்டன. பழைய வாகனங்களை பயன்படுத்தும் ஒரு சிலருக்கு இந்த பிரச்சனை ஏற்படலாம். அதனால் நீங்கள் உங்கள் வாகனத்தில் பிரச்சனை ஏற்பாடுகிறதா என்பதை சோதனை செய்யுங்கள் பாதிப்பு ஏற்படுவதாக உணர்ந்தால் உரிய மெக்கானிக்களிடம் எடுத்து சென்று அதை சரி செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications









