பெட்ரோல் பங்க்களில் ஏப்ரல் 1 முதல் வரும் அதிரடி நிபந்தனை! மைலேஜ் குறைவுக்கு ஒருவழியா தீர்வு கிடைச்சாச்சு!

இந்தியாவில் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல், குறைந்தபட்சம் 95 'ஆராய்ச்சி ஆக்டேன் எண்' (Research Octane Number) கொண்ட இ20 (E20) பெட்ரோல் விற்பனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 20% வரை எத்தனால் (Ethanol) கலந்த பெட்ரோலாக இருக்கும் இதனை பற்றிய கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

இந்திய பெட்ரோலிய அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், இந்திய தர நிர்ணய அமைப்பின் விதிகளின்படி, 20% வரை எத்தனால் கலந்த மோட்டார் பெட்ரோலை (E20) குறைந்தபட்சம் 95 RON உடன் எண்ணெய் நிறுவனங்கள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

e20 petrol with minimum ron 95

வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும், சுற்றுச்சூழல் பாதிப்பைக் கட்டுப்படுத்தவும் பெட்ரோலில் எத்தனாலை கலந்து பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கரும்பு, சோளம் போன்ற விவசாய விளைபொருட்களில் இருந்து பெறப்படும் எத்தனால், உள்நாட்டிலேயே கிடைப்பதுடன், சுத்தமான எரிபொருளாகும். இது விவசாயிகளின் வருவாய்க்கும் உறுதியளிக்கிறது.

2023ஆம் ஆண்டு முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட பெரும்பாலான புதிய வாகனங்கள் இ20 எரிபொருளில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பழைய வாகனங்களில் எத்தனால் கலப்பால் சில பிரச்சனைகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. பழைய மாடல் வாகனங்களில் உள்ள ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பாகங்கள் எத்தனாலால் விரைவில் தேய்மானமடைந்து, இயந்திரப் பழுதுகளுக்கு வழிவகுப்பதாக வாகன ஓட்டிகள் பலர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

e20 petrol with minimum ron 95

அத்துடன், பழைய வாகனங்களின் மைலேஜ் 3% முதல் 7% வரை குறைந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப் படுகிறது. ஒவ்வொரு நாளும் இந்தியாவில் இலட்சக்கணக்கிலான பீப்பாய் கணக்கில் தேவைப்படும் பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படுவது இன்றோ அல்லது நேற்றோ துவங்கப்பட்டது கிடையாது, அது கடந்த பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் செயலாகும்.

எத்தனாலை கலப்பதால் என்னென்ன நன்மைகள் என்பதை மேலே குறிப்பிட்டு விட்டோம். இந்தியாவில் எத்தனால் எளிதில் கிடைப்பதாலும், அவற்றின் மதிப்பு குறைவாக இருப்பதாலும் அதன் பயன்பாட்டை மத்திய அரசு தீவிரமாக ஊக்கப்படுத்தி வருகிறது. இதனாலேயே சில வருடங்களுக்கு முன்பு வரையில் பெட்ரோலில் வெறும் 10% எத்தனால் கலக்கப்பட்டு வந்த நிலையில், அது 20% ஆக அதிகரிக்கப்பட்டது.

இந்த கூடுதல் 10% அதிகரிப்புதான் நாடு முழுக்க பல வாகன ஓட்டிகளின் மன குமுறலுக்கு காரணம் ஆகும். ஏனெனில், 20% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலில் இயங்கும் அளவிற்கு பழைய வாகனங்கள் உருவாக்கப்படவில்லை. 2023ஆம் ஆண்டில் 20% எத்தனாலை பெட்ரோலில் கலப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இதற்கு தயாராகின.

இதனால், இந்த பிரச்சனைக்கு மத்திய அரசு உரிய தீர்வு காண வேண்டும் என பல தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டன. பழைய வாகனங்களுக்கு என பெட்ரோல் பங்க்களில் தனியாக 10% மட்டுமே எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை விற்பனை செய்ய வேண்டும் என்றெல்லாம் ஆலோசனைகள் வந்தன. ஆனால், மத்திய அரசு வேறு விதமாக யோசித்து இ20 பெட்ரோலில் RON-ஐ கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.

'ஆராய்ச்சி ஆக்டேன் எண்' (RON) என்பது என்ஜினில் எரிபொருள் விரைவில் பற்றிக்கொள்வதைத் (knocking) தடுக்கும் திறனின் மதிப்பாகும். அதாவது, RON எண் அதிகமாக இருக்கும்போது, என்ஜின் சேதமடைவதற்கான வாய்ப்புகள் குறையும். சுமார் 108 RON மதிப்புக் கொண்ட எத்தனாலை 20% கலப்பதால், அதிக அழுத்தத்திலும், அதிக வெப்பநிலையிலும் பெட்ரோல் தானாக தீப்பற்றி கொள்வதை குறைக்க முடியும். இதன் மூலம், வீணாக பெட்ரோல் எரிந்து வாகனத்தின் என்ஜின் பழுதடைவதையும், மைலேஜ் குறைவதையும் தடுக்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 10% எத்தனால் கலப்பில் அரசின் இலக்கை இந்தியா முன்கூட்டியே 2022 ஜூனில் எட்டியது. இதன்விளைவாக, 20% கலப்பிற்கான இலக்கு 2030இல் இருந்து 2025-26ஆம் ஆண்டிற்கு விரைவுபடுத்தப்பட்டது. தற்போது நாட்டின் பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் இ20 பெட்ரோல் கிடைக்கிறது. 2014-15ஆம் ஆண்டு முதல் பெட்ரோல் மாற்று எரிபொருள் கொள்கையால், இந்தியா ரூ.1.40 லட்சம் கோடிக்கும் அதிகமான அந்நியச் செலாவணியை இதன் மூலமாக மிச்சப்படுத்தியுள்ளது.

இந்த விஷயத்தில் சிறப்பு சூழ்நிலைகள் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும், குறிப்பிட்ட காலத்திற்கு விதிவிலக்கு அளிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. இருப்பினும், தன் முயற்சியில் இருந்து பின்வாங்காமல், இ20 பெட்ரோலில் குறைந்தப்பட்சம் 95 RON ஆவது இருக்க வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்துவது பாராட்டத்தக்கது ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, February 27, 2026, 5:00 [IST]
English summary
E20 petrol with minimum ron 95 will be mandate from april 1 check all details here
மேலும்... #petrol #petrol bunk #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+