வாகனத்தின் மைலேஜ் எல்லாம் குறையப்போகுது! கலப்பட பெட்ரோலை விற்க மத்திய அரசு முடிவு!
இந்தியா தற்போது இ27 ரக பெட்ரோலை பயன்படுத்த தயாராகி வருகிறது. தற்போது இ20 ரக பெட்ரோல்கள் தற்போது விற்பனை செய்யப்படும் நிலையில் விரைவில் இதை இ27ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தற்போது உள்ள வாகனத்தின் மைலேஜை பாதிக்குமா? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா பெட்ரோலுக்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான சார்பை குறைக்க எத்தனாலை பெட்ரோலுடன் கலக்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. அதன்படி படிப்படியாக எத்தனாலை பெட்ரோல் உடன் கலந்து வருகின்றனர். முன்னர் 10 சதவீதம் வரை கலக்கப்பட்ட எத்தனால் தற்போது 20 சதவீதமாக உயர்த்தப்ப்டள்ளது.

இதற்கான முடிவுகள் முன்னதாகவே எடுக்கப்பட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தும் வகையிலான இன்ஜின்களை செய்திருந்தனர். இந்நிலையில் மத்திய அரசு பியேூரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ஸ் அமைப்பிடம் பெட்ரோலில் 27 சதவீதம் எத்தனால் கலப்பது குறித்த வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
இதனால் தற்போது 20 சதவீத எத்தனால் கலப்பு விரைவில் 27 சதவீதமாக தரம் உயரும். ஆனால் இப்படி எத்தனால் கலப்பை அதிகரித்தால் அது இன்ஜினிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது. தற்போது பிஎஸ் 3, பிஎஸ் 4ரக இன்ஜின்கள் அதிகமாக பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த இன்ஜின்களால் இ-20 ரக பெட்ரோலிலேயே சரியாக இயங்க முடியவில்லை. அதிக ரிப்பேர் செலவு ஏற்படும் என சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.

எத்தனால் கலப்பதால் எப்படி பாதிப்ப ஏற்படுகிறது என்பதை நாம் புரிந்து கெள்ள வேண்டும். எத்தானால் என்பது அதிகம் அரிக்கும் ஒரு திரவமாக இருக்கிறது. இது நீண்ட நாட்கள் பெட்ரோல் டேங்க்கில் இருக்கும் போது பெட்ரோல் டேங்கில் அரிப்பை ஏற்படுத்தும், மெது மெதுவாக பெட்ரோல் இன்ஜினிற்குள் போகும் பைப், கியர், மற்றும் மற்ற பாகங்களில் அரிப்பு தொடரும்.
நீண்ட காலம் எத்தனால் சேமிப்பில் இருக்கும் போது எது வெளியில் உள்ள காற்றின் ஈர பதத்தை உறிந்து எடுத்து இன்ஜினை பாதிப்படைய வைக்கும். இதனால் பழைய வாகனங்களில் எத்தனால் பயன்படுத்துவதால் மெல்ல மெல்ல பாதிப்பு வரும் தற்போது வரும் வாகனங்கள் 20 சதவீத எத்தனால் கலவையை தாங்கும் வகையில் சில பாகங்கள் அப்டேட் செய்யப்ப்டடுள்ளது.

இது மட்டுமல்லல சொகுசு கார்கள் பல கார்கள் எத்தனால் கலந்து பயன்படுத்தும் ஏரிபொருளுக்கு ஏற்ப தங்கள் இன்ஜினை வடிவமைக்கவில்லை இ27 பெட்ரோல் பயன்பாட்டிற்கு வந்தால் அதை பயன்படுத்தும் போது நிச்சயம் அது இன்ஜினை பாதிப்படைய வைக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இதன் முக்கிய அறிகுறியாக மைலேஜ் கணிசமான அளவு குறையும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே 20 சதவீத எத்தனால் கலப்பை அரசு சாத்தியப்படுத்திவிட்ட நிலையில் தற்போது 27 சதவீதமாக அதை உயர்த்துவதற்கு முன் மக்களிடம் இந்த எத்தனாலை தாங்கும் வகையில் தங்கள் வாகனங்களை அப்டேட் செய்ய அறிவுறுத்த வேண்டும் இல்லை என்றால் பழைய வாகனங்களை பயன்படுத்துபவர்கள் சீக்கிரமே ஆபத்து ஏற்பட்டு வாகனத்தை தூக்கி போட வேண்டிய அவசியம் வந்துவிடும்.


Click it and Unblock the Notifications









