கேப் டிரைவர்களுக்கு ஆப்பு வச்ச கமிஷனர்! இனி இப்படி பண்ணா உடனே பிடிச்சிடுவாங்க!
நம்மில் பலர் கேப், ஆட்டோ, பைக் டாக்ஸிகளை தினமும் பயன்படுத்தும் நபராக இருக்கலாம். இப்படியாக பயன்படுத்துபவர்கள் பலர் இந்த வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் பலர் வாகனம் ஓட்டும் போது ஹெட்செட்டில் வீடியோ பார்ப்பது உள்ளிட்ட விஷயங்களை செய்த வருவதை காண முடிகிறது. இது சட்டப்படி தவறு என போலீஸ் கமிஷ்னர் வெளியிட்ட எக்ஸ் பதிவு வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தினமும் டாக்ஸி, ஆட்டோ, கேப் பயணம் செய்பவர்கள் நீங்கள் அடிக்கடி வாகனத்தின் டிரைவர் செல்போனில் வீடியோ பார்த்துக்கொண்டே பயணிப்பதை பார்க்கமுடியும். செல்போனில் பேசிக்கொண்டே பயணிப்பது சட்டப்படி குற்றம். இப்படியாக அந்த நபர் செல்போனில் பேசியபடியே பயணித்தால் அவர் மீது நாம் புகாரளிக்க முடியும். சட்ட ரீதியாக தண்டிக்க முடியும்.

ஆனால் காதில் ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு செல்போனில் வீடியோ அல்லது வேறு ஏதாவது ஒரு விஷயத்தை பார்த்துக்கொண்டே பயணிக்கிறார்கள். இந்த அனுபவம் பலருக்கும் இருந்திருக்கும். இதனால் காரில் பயணிகள் பயணிக்கும் போது இவர் கவனத்தை செல்போனில் வைத்துக்கொண்டு எப்படி வாகனத்தை ஓட்டுவார்? பாதுகாப்பாக சென்ற விடுவாரா? இல்லை விபத்தில் சிக்க வைத்துவிடுவாரா என்ற பதற்றம் இருக்கும்.
இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த போலீஸ் கமிஷ்னர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாக பரவி வருகிறது. இதில் அவர் கேப், ஆட்டோரிக்ஷா, பைக் டாக்ஸி டிரைவர்களுக்க ஒரு எச்சரிக்கையை வழங்கியுள்ளார். இதில் அவர் "பல டிரைவர்கள், ஆட்டோ ரிக்ஷா, கேப், பைக் டாக்ஸி டிரைவர்கள் பலர் அடிக்டி வாகனங்களில் செல்போனில் வீடியோ பார்த்துக்கொண்டோ அல்லது இயர்போன் மூலம் பேசிக்கொண்டோ பயணிப்பதை பார்க்க முடிகிறது. இது அபாயகரமானது சட்டப்படி குற்றம் ஆகும். இப்படியான செயலில் ஈடுபடும் நபர்கள் மீது ஐதராபாத் போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள். கவனசிதறல் உங்கள் வாழ்க்கையையே முடித்துவிடும். கவனமாக இருங்கள் பாதுகாப்பாக இருங்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் சொல்வது ஒன்றும் புதிய சட்டம் எல்லாம் கிடையது. வாகனம் ஓட்டும் போது செல்போனை பயன்படுத்துவது சட்டப்படி கறு்றம் தான். இன்று செல்போனில் பேசாவிட்டாலும் பயணத்தின் போதே யூடியூப் வீடியோக்களை பார்ப்பது, அல்லது இன்ஸ்டா, போன்ற ரீல்களை பார்ப்பது சாதாரண விஷயமாகிவிட்டது. பலருக்க செல்போனில் பேசுவது மட்டும் தான் குற்றம் என நினைக்கிறார்கள். ஆனால் இப்படியா கவனசிதறல் ஏற்படுத்தும் எல்லா செயல்களும் குற்றம் தான்.
வாகனம் ஓட்டும் போது கவனசிதறல் ஏற்பட்டால் விபத்து நடக்க வாய்ப்புள்ளது. கேப் போன்ற வாகனங்களில் அது அவர்களின் உயிரை அபாயத்திற்குள்ளாவது மட்டுமல்லாமல் வாகனங்களில் உள்ள அப்பாவி பயணிகள் உயிரையும், சாலையில் செல்லும் மற்றவர்கள் உயிரையும் ஆபத்திற்குள்ளாக்கும் செயல் ஆகும். இதனால் இது போன்ற செயல்களை யாரும் செய்யக்கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர்.

பலர் இந்த பதிவிற்கு கருத்திட்டும் போது. பல்வேறு சிக்கல்கள் அவர்கள் சாலையில் சந்திப்பதை பகிர்ந்துள்ளனர். அதன்படி ஒரவர் எல்இடி ஹெட்லைட்டுகள் கண்களை கூசுகிறது. இதனால் பழைய காலங்களில் உள்ள வாகனங்களில் ஹெட்லைட்களில் மேல்பாகத்தில் கருப்பு ஸ்டிக்கர் அல்லது பெயிண்ட் அடிப்பது போல ஹெட்லைட்களில் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். சிலர் அவர்களுக்கான அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனம் ஓட்டும்போது கவன சிதறல் ஏற்படுத்தும் இதனால் போலீசாரின் இந்த நடவடிக்கைவரவேற்கதக்கதுதான். நிச்சயம் போலீசார் செய்த பதிவு வரவேற்றக்க தக்கது தான். இது குறித்த தீவிர நடவடிக்கையை போலீசார் எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications









