Just In
- 2 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 4 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 4 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
- 5 hrs ago
பார்ட்-டைம் ஆட்டோ டிரைவராக மாறிய 21 வயது இளம்பெண்... காரணம் தெரிந்தால் கண்டிப்பா பாராட்டுவீங்க...
Don't Miss!
- News
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
11 போயிங் விமானங்களை வாங்கிய பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனம்... விமான சேவைக்காக அல்ல... அப்போ வேறு எதுக்காக?
பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஒன்று 11 போயிங் 767-300 ஜெட் விமனங்களை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஒன்று 11 போயிங் 767-300 ரக ஜெட் விமானங்களை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஏ டூ இசட் வரையிலான பொருட்களை விற்பனைச் செய்து வரும் இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனம் இத்தனை விமானங்களை வாங்கியிருக்கின்றது.

இந்நிறுவனம் ஒரே அடியாக 11 விமானங்களை வாங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. விமான சேவையில் ஈடுபடுவதற்காக இத்தனை விமானங்களை அமேசான் வாங்கியிருக்கின்றதா என்ற சந்தேகத்தையும் கிளப்பியிருக்கின்றது. மிக சமீபத்தில் ஓலா கால் டாக்சி நிறுவனம் விரைவில் மின்சார இருசக்கர வாகன விற்பனையில் களமிறங்க இருப்பதாக அறிவித்திருந்தது.

ஓலா கால் டாக்சியின் இந்த செயல் எந்த நிறுவனம் வேண்டுமானாலும் எந்த தொழிலை வேண்டுமானாலும் புதிதாக தொடங்கலாம் என்ற மனநிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. இம்மாதிரியான சூழ்நிலையிலேயே பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் 11 விமானங்களை வாங்கியிருக்கின்றன.

இவையனைத்தையும் தனது வாடிக்கையாளர்களுக்கு துரித நேரத்தில் உரிய பொருட்களை டெலிவரிக் கொண்டு சேர்ப்பதற்காகவே வாங்கியிருக்கின்றது. டெல்டா மற்றும் வெஸ்ட்ஜெட் ஆகிய நிறுவனங்களிடம் இருந்தே விமானங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன.

இந்த விமானங்கள் விரைவில் அமேசானின் கார்கோ பயன்பாட்டில் களமிறங்க இருக்கின்றன. 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இது பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்பது தெரியவந்திருக்கின்றது. அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனம், தற்போது குறிப்பிட்ட சில பொருட்களை மிக விரைவில் ஒரு நாளுக்கும் குறைவாக டெலிவரி செய்து வருகின்றது.

அதேசமயம், பிரைம் மெம்பர் அல்லாத சில வாடிக்கையாளர்களுக்கு மூன்று முதல் ஐந்து நாட்கள் வரைகூட டெலிவரிக்கான கால தாமதத்தை அது செய்து வருகின்றது. இந்த நிலையைக் குறைக்கும் நோக்கிலேயே புதிய விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டிருக்கின்றன.

அவை ஒன்றன் பின் ஒன்றாக கார்கோ பயன்பாட்டில் களமிறக்கப்பட இருக்கின்றன. இந்த விமானங்கள் பயன்பாட்டிற்கு வருவதன் மூலம் தற்போது நீடிக்கும் கால தாமதம் பல மடங்கு குறையும். அனைத்து வாடிக்கையாளர்களாலும் விரைவில் ஆர்டர் செய்த பொருளை டெலிவரி பெற முடியும்.

வெஸ்ட்ஜெட் நிறுவனத்திடம் இருந்து நான்கு விமானங்களையும், டெல்டா நிறுவனத்திடம் இருந்து ஏழு விமானங்களையும் அமேசான் வாங்கியிருக்கின்றது. இதில், வெஸ்ட்ஜெட் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட விமானங்கள் பயணிகள் விமானமாக பயன்படுத்தப்பட்டு வந்தவை ஆகும். இவற்றையே கார்கோ மாற்றி ஷிப்பிங் பணிக்காக பயன்படுத்த இருக்கின்றது.

Image Courtesy: Boeing, Delta and Westjet
இவை 2021ம் ஆண்டில் சேவையில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றன. இதேபோன்று, டெல்டா நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டிருக்கும் கார்கோ விமானங்கள் 2022 ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது. இந்த விமானங்களுடன் மேலும் சில விமானங்களையும் அமேசான் சேர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.