விநோதம்... விமான ஓடு தளத்தில் கார்களை பார்க் செய்த போலீஸ்காரர்கள்... ஏன் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!
விமானங்களின் ஓடு தளத்தில் போலீஸ்காரர்கள் அவர்களின் கார்களைப் பார்த்து செய்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கார்களை பார்க்கிங் செய்வதில் அனைத்து நாடுகளிலும் ஒரே விதிமுறைதான் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. பார்க்கிங் செய்யப்படும் வாகனம் பிற வாகனங்கள் முன்னேறி செல்வதற்கு தடை ஏற்படுத்தாத வண்ணம் இருக்க வேண்டும். இதுவே, தலையாய விதியாகும். மாறாக, ஓர் வாகனம் விதிமுறை மீறி நிறுத்தப்பட்டு மற்ற வாகனங்களின் இயக்கத்தை தடை செய்யுமானால் போக்குவரத்து விதிகளின்படி, அந்த வாகனத்தை பறிமுதல் செய்தல் மற்றும் அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியும்.

வாகன போக்குவரத்தை தடை செய்வதற்கே இந்த நிலை என்றால் விமானம் போக்குவரத்தைத் தடை செய்வர்களுக்கு இதைவிட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சில அயல் நாடுகளில் இதுபோன்ற குற்றங்களுக்கு துப்பாக்கிச் சூடு வரை நிகழ்த்தப்படுகின்றன. அதேசமயம், அவ்வளவு எளிதில் விமான நிலைய வாகனங்களைத் தவிர பிற வாகனங்களால் விமானத்தின் ஓடு தளத்தை நுழைய முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்நிலையில், மிகவும் விசித்திரமாக போலீஸ்காரர்களே விமானங்களின் இயக்கத்திற்கு தடை விதிக்கின்ற வகையில் தங்களின் வாகனங்களை விமான ஓடுதளத்தில் குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தியிருக்கின்றனர். இதனால், விமானத்தால் தரையிறங்க மற்றும் ஏற தடை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம்குறித்த மிக குறுகிய வீடியோ ஒன்று தற்போது டுவிட்டர் போன்ற சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.

விமான ஓடு தளத்தில் கார்களை பார்க் செய்த இந்நிகழ்வானது தென் அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் உள்ள எக்குவடோர் குடியரசு நாட்டில் அரங்கேறியிருக்கின்றது. கொரோனா அச்சத்தின் காரணமாக அந்த விமான நிலைய போலீஸார் இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றனர்.

குறிப்பாக, ஸ்பெயின் போன்ற அதிகம் வைரஸ் தொற்றுள்ள நாடுகளில் இருந்து வரும் விமானங்களைத் தவிர்க்கும் நோக்கில் போலீஸ் அதிகாரிகள் தங்களின் வாகனங்களை விமான ஓடு தளத்தின் நடுவில் நிறுத்தியிருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் மனித குலத்தையே நடுநடுங்கச் செய்துள்ளது. இது உலகின் பல வல்லரசு நாடுகளையும் விட்டும் வைக்காமல் ஆட்டிப்படைத்து வருகின்றது. குறிப்பாக, மருத்துவத்துறையில் வளர்ந்த நாடுகளைகூட கொரோனா வைரஸ் சின்னா பின்னமாக்கியுள்ளது. தொடர்ந்து, உலக நாடுகளின் சுகாதாரத்துறைக்கு மிகப்பெரிய சவாலை அது ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொள்ளை வைரஸின் காரணமாக இதுவரை உலகளவில் 33,178 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த எண்ணிக்கையைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாகவே உயிரிழப்புகள் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் சிலர் கூறி வருகின்றனர்.
ஆகையால், உலக நாடுகள் அனைத்தும் தற்போது அச்சத்தில் உறைந்திருக்கின்றனர். இதன் வெளிப்பாடகவே உலக நாடுகள் அயல் நாடுகளுடன் இருக்கும் தொடர்பைத் துண்டித்து வருகின்றன.

அந்தவகையிலான ஓர் நடவடிக்கையைதான் எக்குவடோர் குடியரசும் மேற்கொண்டிருக்கின்றது. தன் நாட்டிற்கு சீல் வைக்கும் விதமாக விமான நிலையங்களை அது மூடியிருக்கின்றது. மேலும், வேறு விமானங்கள் அனுமிதியின்றி தரையிறங்கிவிட கூடாது என்பதற்காக வாகனங்களை விமான நிலையத்தின் ஓடு தளத்தில் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஏரளமாக கார்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவையனைத்தும் அந்நாட்டு காவல்துறைக்கு சொந்தமான கார்கள் ஆகும். எக்குவடோர் நாட்டில் இந்தியாவிற்கு முன்பிலிருந்தே இம்மாதிரியான அவசர கால தடை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக, கடந்த மார்ச் 17ல் இருந்து கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.

அயல்நாட்டு போக்குவரத்திற்கு 21 நாட்கள் தடைவிதிக்கப்பட்டது. தற்போது இந்த தடை நீடிக்கும் நிலையே காணப்படுகின்றது. விமான போக்குவரத்தைப் போலவே நாட்டை இணைக்கும் எல்லைப் பகுதிகள் முழுமையாக அடைக்கப்பட்டு ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுதவிர நாட்டின் முக்கியமான தலைநகரங்களக் தனிமைப்படுத்தப்பட்டு கண்கானிக்கப்பட்டு வருகின்றது.

ஆகையால், இந்தியாவில் நிலவும் இதே ஊரடங்கு நிலைதான் எக்குவடோர் நாட்டிலும் காணப்படுகின்றது. இங்கு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வெளியே வந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்கி செல்ல அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. அந்த குறிப்பிட்ட நபர் வெளியே சென்றுவர வேண்டுமானால் அரசு அதிகாரிகளின் அனுமதி பெற்றே செல்ல வேண்டும். எதிர்மாறாக செயல்பட்டால் உடனடி கைது போன்ற அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








