பைலட் லைசென்ஸ் தேவையில்லை... ஹாயாக பயணிப்பதற்கான புதிய டிரோன் அறிமுகம்!

Written By:

அமெரிக்காவில் நடந்து வரும் நுகர்வோர் மின்னணு கண்காட்சியில், ஒருவர் பயணிப்பதற்கான சிறிய வகை டிரோன் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வரும் இந்த டிரோனின் சிறப்பசம்ங்கள் இது எப்போது வரும் என்ற ஆவலையும் வெகுவாக தூண்டுகிறது.

இஹாங்-184 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும், இந்த டிரோன் வர்த்தக ரீதியில் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது என்பது மகிழ்ச்சி தரும் விஷயம். இந்த டிரோன் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

குட்டி ஹெலிகாப்டர்

குட்டி ஹெலிகாப்டர்

ஆள் இல்லாமல் பறக்கும் குட்டி விமானங்களின் மேம்பட்ட வடிவமாக இதனை உருவாக்கியிருக்கிறது இஹாங் நிறுவனம். பார்ப்பதற்கு குட்டி ஹெலிகாப்டர் போல இருக்கிறது.

சிங்கிள் சீட்டர்

சிங்கிள் சீட்டர்

இந்த குட்டி விமானத்தில் ஒருவர் அமர்ந்து பயணிக்க முடியும். பைலட் தேவையில்லை என்பது முக்கிய விஷயம்.

தானியங்கி கட்டுப்பாடு

தானியங்கி கட்டுப்பாடு

இந்த டிரோனின் டேஷ்போர்டில் இருக்கும் 12 இன்ச் தொடுதிரையில் செல்லுமிடத்தை தேர்வு செய்து டேக் ஆஃப் பட்டனை தட்டிவிட்டால், தானாக மேலே எழும்பி பறந்து செல்லுமிடத்தை அடைந்துவிடும். மனித கட்டுப்பாடு இல்லாமலே பறக்கும்.

கோளாறு ஏற்பட்டாலும்...

கோளாறு ஏற்பட்டாலும்...

இந்த டிரோனில் கோளாறு ஏற்பட்டாலும் பாதுகாப்பாக தரை இறங்குவதற்கான சாஃப்ட்வேர் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்டாப் பட்டனை அழுத்தினால், உடனடியாக பாதுகாப்பான இடத்தில் தரை இறங்கும்.

ஹெலிகாப்டர் போன்றே...

ஹெலிகாப்டர் போன்றே...

ஹெலிகாப்டர் போன்றே கீழ்பகுதியில் இருக்கும் வலுவான ஃபிரேம்கள் துணையுடன் நிற்கும். அதேபோன்று, நான்கு மடங்கி விரியும் கரங்களின் நுனியில் ரோட்டர் எனப்படும் விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன.

பேட்டரி

பேட்டரி

இந்த டிரோனில் 142 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 8 மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. 14.4 kWh பேட்டரி பேக் டிரோன் இயங்குவதற்கு தேவையான மின் ஆற்றலை வழங்குகிறது.

வேகம்

வேகம்

மணிக்கு அதிகபட்சமாக 100 கிமீ வேகத்தில் பறக்கும். 11,480 அடி உயரம் வரை மேலே பறக்கும் வல்லமை கொண்டது.

ரேஞ்ச்

ரேஞ்ச்

ஒருமுறை பேட்டரியை முழமையாக சார்ஜ் செய்வதற்கு 4 மணி நேரம் பிடிக்கும். ஆனால், விரைவாக சார்ஜ் செய்வதற்கான விசேஷ சார்ஜரும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடை சுமக்கும் திறன்

எடை சுமக்கும் திறன்

200 கிலோ எடை கொண்ட இந்த டிரோனில் அதிகபட்சமாக 120 கிலோ வரை எடையுடையவர் பயணிக்கலாம்.

விலை

விலை

இந்திய மதிப்பில் ரூ.1.3 கோடி முதல் ரூ.2 கோடி விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிய அட்வான்டேஜ்

பெரிய அட்வான்டேஜ்

இந்த டிரோனை இயக்குவதற்கு பைலட் லைசென்ஸ் தேவையில்லை என்பது மிகப்பெரிய அட்வான்டேஜ். எனவே, பறக்கும் கார்களைவிட இதற்கு வாடிக்கையாளர்களிடையே வரவேற்பு அதிகம் இருக்கும் என நம்பலாம்.

வீடியோ

இந்த டிரோன் உருவான விதம் மற்றும் செயல்பாட்டை விளக்கும் வீடியோ.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Ehang's 184 code named, Autonomous Aerial Vehicle is designed to carry a single human passenger, autonomously flying them from one location to another location.
Story first published: Friday, January 8, 2016, 14:32 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark