விஜய் வந்தா கூட போட்டோ எடுக்க இப்படி போட்டி போடுவாங்களான்னு தெரியல! 1 கோடி ரூபா கார்ல ஜோடியா சுத்தறது அவங்களா!
பிக் பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சிக்கு என்று, தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. எவ்வளவு வேலை இருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து விட்டுதான் பலர் படுக்கைக்கே செல்கின்றனர். அந்த அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி, ரசிகர்களை கட்டி போட்டுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். இதில் ஒரு சிலருக்கு இடையே நல்ல நட்பு உருவாகிறது. இதனால் பிக் பாஸ் வீட்டு விட்டை வெளியே வந்த பிறகும், அவர்கள் ஒன்றாக வலம் வந்து கொண்டுள்ளனர்.
இந்த வரிசையில் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்ட ஒரு ஜோடி, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும், தற்போது ஒன்றாக வலம் வந்து கொண்டுள்ளனர். எனவே கூடிய விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள கூடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சமூக வலை தளங்களில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில் ஒரு ஜோடி ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொள்வதை நம்மால் காண முடிகிறது. இறுதியில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ (Mercedes Benz GLE) காரில் ஏறி அவர்கள் பயணம் செய்வதை நம்மால் காண முடிகிறது.
இந்த வீடியோவில் நாம் காணும் ஜோடி ஈஷா சிங் (Eisha Singh) மற்றும் அவினாஷ் மிஷ்ரா (Avinash Mishra) ஆகியோர் ஆவார். இவர்கள் இருவரும் ஹிந்தி டிவி நடிகை, நடிகராக உள்ளனர். எனவே ஏற்கனவே இவர்கள் இருவரும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்களாதான் இருந்து வருகின்றனர்.

இந்த சூழலில் சமீபத்தில் நிறைவடைந்த ஹிந்தி பிக் பாஸ் சீசன் 18 நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டனர். பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே இவர்களின் நட்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்த நட்பின் காரணமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும், அவர்கள் இருவரும் ஒன்றாக வலம் வந்து கொண்டுள்ளனர்.
அப்படி மும்பை (Mumbai) நகரில், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ சொகுசு காரில் ஒன்றாக வலம் வந்தபோதுதான், தற்போது வைரலாக பரவி வரும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் நாம் காணும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ கார் மிகவும் விலை உயர்ந்தது ஆகும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 99 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 1.17 கோடி ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
இந்த சொகுசு காரில், மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 2.0 லிட்டர் டீசல், 3.0 லிட்டர் டீசல் மற்றும் 3.0 லிட்டர் பெட்ரோல் ஆகியவை ஆகும். இந்த 3 இன்ஜின்கள் உடனும், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்றாகும். எனவே அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சமில்லை. இதில், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
பாதுகாப்பை (Safety) பொறுத்தவரையில், 9 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு போன்றவை எல்லாம் இந்த காரின் மிக முக்கியமான அம்சங்களாக உள்ளன. இது போன்ற வசதிகள் எல்லாம் இருப்பதால், இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5), ஆடி க்யூ7 (Audi Q7) மற்றும் வால்வோ எக்ஸ்சி90 (Volvo XC90) போன்ற கார்களுக்கு எல்லாம், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது. இது ஹிந்தி திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்றாகும்.
இதற்கிடையே ஈஷா சிங்-அவினாஷ் மிஸ்ரா ஜோடியை நேரில் பார்த்ததும், அங்கிருந்தவர்கள் அவர்களுடன் போட்டோ எடுக்க அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். குறிப்பாக அந்த வழியாக வாகனங்களில் சென்று கொண்டிருந்த பலர், வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு வந்து, அவர்களுடன் போட்டோ எடுத்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








