ஓய்விற்கு பிறகு லம்போர்கினி காரை வாங்கிய முதியவர்! மனுஷன் கொண்டாடி தீத்துட்டாரு! பாக்கும்போதே சந்தோஷமா இருக்கு

முதியவர் ஒருவர் தனது ஓய்விற்கு பிறகு, லம்போர்கினி காரை சொந்தமாக்கியதை கொண்டாடும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. புத்தம் புதிய சாம்பல் நிற லம்போர்கினி காரில் இருந்து ஒரு முதியவர் உற்சாகமாக வெளியே வருவதை இந்த வீடியோவில் நம்மால் காண முடிகிறது.

அவர் தனது பணி ஓய்வு காலத்திற்கு பிறகு இந்த காரை வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த கொண்டாட்டங்களின்போது எடுக்கப்பட்டதுதான் இந்த வீடியோ எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையை சொல்வதென்றால், அந்த முதியவர் லம்போர்கினி காரில் இருந்து வெளியே வருவதற்கே சற்று சிரமப்படதான் செய்கிறார்.

Elder Man Buys Lamborghini After Retirement

ஆனால் தட்டு தடுமாறி காரில் இருந்து கீழே இறங்கியதும், அவர் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கீழே விழுந்த அவர், தரையை ஒரு சில முறைகள் தட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். நெடுநாள் கனவு நிறையவேறிய ஒருவர் நிச்சயமாக இப்படிதான் நடந்து கொள்வார் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம்.

இந்த முதியவர் வாங்கியிருப்பது அனேகமாக லம்போர்கினி அவென்டெடார் எஸ்விஜே (Lamborghini Aventador SVJ) காராக இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். இந்திய மதிப்பில் இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலையே தோராயமாக 6.25 கோடி ரூபாய் வருகிறது. இந்த முதியவர் யூஸ்டு கார் டீலரிடம் இருந்து, லம்போர்கினி அவென்டெடார் காரை வாங்கியிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

லம்போர்கினி அவென்டெடார் எஸ்விஜே காரில், 6.5 லிட்டர் 12 சிலிண்டர் பெட்ரோல் (Petrol) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்மில் 760 பிஹெச்பி பவரையும், 6,750 ஆர்பிஎம்மில் 720 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. லம்போர்கினி அவென்டெடார் எஸ்விஜே காரின் அராய் மைலேஜ் (ARAI Mileage) ஒரு லிட்டருக்கு 7.69 கிலோ மீட்டர்கள் மட்டுமே. ஆனால் நகர பகுதிகளில் ஓட்டும்போது இந்த கார் ஒரு லிட்டருக்கு சுமார் 3 கிலோ மீட்டர் மைலேஜ் மட்டுமே தரும் என கூறப்படுகிறது.

ஆனால் லம்போர்கினி அவென்டெடார் எஸ்விஜே காரை யாரும் மைலேஜிற்காக வாங்குவதில்லை. அதன் அட்டகாசமான செயல்திறனை அனுபவிப்பதற்காகவே வாங்குகின்றனர். இது 2 பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய கார் ஆகும். இந்தியாவில் கோடீஸ்வரர்கள் ஒரு சிலரிடம் லம்போர்கினி அவென்டெடார் எஸ்விஜே கார் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிகவும் விலை உயர்ந்த லம்போர்கினி அவென்டெடார் எஸ்விஜே காரை வாங்கி, தனது கனவை நிறைவேற்றியுள்ள முதியவருக்கு டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. கார்கள் மீதான மனிதர்கள் ஒரு சிலரின் காதலை இச்சம்பவம் நமக்கு மிகவும் தெளிவாக உணர்த்துகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 1, 2023, 23:55 [IST]
English summary
Elder man buys lamborghini after retirement viral video all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+