ஹாலிவுட் படம் போல 24 மணி நேரம் விமான நிலையத்திற்குள்ளேயே சிக்கிய தம்பதி! என்ன நடந்தது தெரியுமா?

இண்டிகோ விமான நிறுவனம் செய்த தவறால் இந்தியாவை சேர்ந்த மூத்த தம்பதிகள் 24 மணி நேரம் இஸ்தான்புல் விமான நிலையத்திலேயே ஒரே சேரில் அமர்ந்தபடி காக்க வைக்கப்பட்ட சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவம் தற்போது விமான பயணிகள் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பெங்களூருவை சேர்ந்த தம்பதி ராஜேஷ்ஷா மற்றும் அவரது மனைவி ராஷ்மீஷா ராஜேஷ் ஷாவிற்கு 64 வயதாகிறது ராஸ்மிஷாவிற்கு 59 வயது ஆகிறது. இவரது மகன் லண்டனில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்நிலையில் லண்டனில் தனது மகன் வீட்டிற்கு சென்ற இருவரும் மீண்டும் திரும்பி இந்தியாவில் உள்ள தனது மகளுடன் தங்க திட்டமிட்டு இந்தியாவிற்கு செல்ல லண்டனில் இருந்து மும்பை வர டிக்கெட் புக் செய்திருந்தனர்.

ndigo forgot older couple in istanbul

இவர்கள் டிக்கெட் எடுக்கும் போதே லண்டனிலிருந்து இஸ்தான்புல் வரை ஒரு விமானத்திலும் இஸ்தான்புலில் இறங்கி இண்டிகோ நிறுவனத்தின் விமானத்திற்கு மாறி அங்கிருந்து மும்பை வந்திறங்கும்படி டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். அதன்படி இவர்கள் லண்டனில் பத்திரமாக விமானத்தில் ஏறினார். இந்த விமானம் இஸ்தான்புல் வந்து இறங்கியது.

இதற்கிடையில் ராஜேஷ் ஷா இதய நோயாளி என்பதால் அவர் வீல் சேரில் தான் பயணம் செய்தார். அவருடன் அவரது மனைவியும் பயணம் செய்தார் அவராலும் அதிக தூரம் நடக்க முடியாத நிலை இருந்தது. இஸ்தான்புலில் இறங்கிய இந்த தம்பதிக்கு விமான நிலைய ஊழியர்கள் உதவி செய்து அவர்களை இண்டிகோ விமானத்தில் ஏறும் பகுதிக்கு அழைத்து சென்றனர்.

ndigo forgot older couple in istanbul

விமான நிலைய ஊழியர்கள் இவர்களை காத்திருக்கும் படி கூறிவிட்டு சென்றனர். ஆனால் அவர்கள் சில மணி நேரம் காத்திருந்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. உடனடியாக ராஸ்மி ஷா விமான நிலைய ஊழியர்களை தொடர்பு கொண்டு என்ன நடக்கிறது என புரிந்து கொள்ள விரும்பினார். அப்பொழுதுதான் அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

இவர்கள் ஏற வேண்டிய மும்பை செல்லும் இண்டிகோ விமானம் ஏற்கனவே டேக் ஆஃப் ஆகிவிட்டது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே இவர்கள் போர்டிங் பாஸ் எடுத்திருந்த நிலையில் இவர்கள் இல்லாமல் எப்படி விமானம் புறப்பட்டு சென்றது என பல கேள்விகளை எழுப்பினர். இதன் பின் விமான நிறுவன ஊழியர்கள் வந்து இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்து நேரடியாக இஸ்தான்புல்லிருந்து மும்பை செல்லும் விமானத்திற்கு இவர்களுக்கு டிக்கெட் போட்டு தருவதாக கூறினர்.

ndigo forgot older couple in istanbul

அதன்படி மறுநாள் இவர்களுக்கு இஸ்தான்பூரில் இருந்து மும்பை வருவதற்கான டிக்கெட் வழங்கப்பட்டது . ஆனால் இந்த 24 மணி நேரம் இவர்கள் குறைவான உணவு மற்றும் தண்ணீருடன் ஒரு சிறிய வீல் சேரிலேயே இஸ்தான்புல் விமான நிலையத்தில் காத்திருக்க வைக்கப்பட்டனர் வைக்கப்பட்டனர். தனி அறை எதுவும் தரவில்லை. இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி நடந்துள்ளது.

இவர்கள் இஸ்தான்புலில் விமானம் புறப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்து அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் விமான நிறுவன ஊழியர்கள் இவர்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை என கூறப்படுகிறது. அதன் பின்பு இந்தியாவில் உள்ள இவர்களது மகள் ரிச்சா இந்தியாவில் உள்ள இண்டிகோ விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு உதவி கேட்டு பின்னர் தான் அவர்களுக்கு இஸ்தான்புலில் உதவி கிடைத்தது என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தற்போது விமான பயணிகள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக விமான பயணம் என்பது பாதுகாப்பானதாக இருக்கும் முக்கியமாக முதியவர்களுக்கு எந்த விவரமும் இல்லாமல் இந்த பயணம் அமைய விமான நிறுவன ஊழியர்கள் அதிகமாக உதவி செய்வார்கள் என பல விஷயங்களை கேள்விப்பட்டிருக்கிறோம். இதனாலேயே பலர் விமானங்களில் பயமில்லாமல் முதியவர்களை பயணம் செய்ய அனுமதி இருக்கின்றனர்.

ஆனால் இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட பிறகு பலருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இஸ்தான்புல்லில் உள்ள இந்த தம்பதி விசா இல்லாமல் அந்த நாட்டிற்குள்ளும் செல்ல முடியாது. வெளியில் சென்றாலாவது இவர்களது வசதிக்கு ஏற்ப தங்கியிருக்கலாம். அதற்கும் வழியில்லாமல் மும்பைக்கும் வர முடியாது விமான நிலையத்திலேயே இரவை எல்லாம் கழித்தனர்.

இது குறித்து இண்டிகோ நிறுவனம் அளித்த விளக்கத்தின்படி இந்த தவறு துருக்கி நாட்டில் உள்ள விமான நிலைய ஊழியர்களின் செய்த தவறால் நடந்தது என்றும், இண்டிகோ நிறுவனத்தின் இஸ்தான்புல் டீம் இவர்களுக்கு உதவி செய்து இவர்களது அடுத்த பயணத்தை உறுதி செய்தது என்றும் நடந்ததற்காக மன்னிப்பு கேட்பதாகவும் விளக்கம் அளித்து இருந்தது..

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உடல்நிலை சரியில்லாத முதியவர்களை தனியாக விமானத்தில் அனுப்பும்போது அவர்களுக்கான செயல்முறை விளக்கங்களை முன்னரே உடன் இருப்பவர்கள் தெரியப்படுத்த வேண்டும். மேலும் அவர்கள் செல்லும் பகுதியில் அவர்களுக்கு படிக்க தெரிகிறதா எந்தெந்த கேட்டுகளில் விமானம் வருகிறது என்ற தகவல் தெரிகிறதா என்ற விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் உடனடியாக இந்த தயக்கமும் இல்லாமல் எல்லா விளக்கங்களையும் விமான நிறுவன ஊழியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

Source: TOI

Article Published On: Wednesday, October 4, 2023, 18:19 [IST]
English summary
Elderly couple stranded 24 hours at istanbul airport due to indigos oversight
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X