விமானங்களே தோத்துடும் போலயே! சென்னையில் இன்று அறிமுகமான எலெக்ட்ரிக் பஸ்களில் இவ்வளவு வசதிகள் இருக்குதா?

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் 120 எலெக்ட்ரிக் பஸ் சேவையை துவங்கி வைத்தார். சென்னையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ள இந்த எலெக்ட்ரிக் பஸ்களில் என்னென்ன வசதிகள் இருக்கிறது? இதில் உள்ள அம்சங்கள் என்ன? விரிவான விபரங்களை காணலாம் வாரு்ஙகள்.

சென்னையில் இயங்கி வரும் டீசல் பஸ்களுக்கு மாற்றாக சுற்றுசூழலுக்கு பாதிப்பில்லாத எலெக்ட்ரிக் மற்றும் எல்என்ஜி/சிஎன்ஜி மூலம் இயங்கும் பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 5 பணிமனைகள் மூலம் 625 எலெக்ட்ரிக் பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

Electric Bus in Chennai

இதில் முதற்கட்டமாக 120 பஸ் சேவையைமுதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைத்துள்ளார். இந்த பஸ்கள் எல்லாம் ஒப்பந்த அடிப்படையில் இயங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை வியாசர்பாடி பணிமனையில் இருந்து பஸ்களை இயக்குவதற்கா தேவையான பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது.

இந்த பஸ்கள் எல்லாம் தாழ்தள பஸ்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் எல்லாம் இந்த பஸ்ஸில் ஏறி இறங்கவசதியாக இருக்கும். மக்கள் தற்போது உள்ள டீசல் பஸ்களில் ஏறி இறங்க சிரமப்படுவதை அறிந்த அரசு இப்படியாக உயரம் குறைவாக உள்ள பஸ்களை வாங்க முடிவு செய்தது இதற்கு கோர்ட் உத்தரவும் ஒரு காரணமாக இருக்கிறது.

Electric Bus in Chennai

மேலும் ஒவ்வொரு எலெக்ட்ரிக் பஸ்களிலும் 7 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பஸ்சின் டிரைவர் செயல்பாடுகள், பஸ் பயணிகள் பாதுகாப்பு, பஸ்சில் விபத்து ஏற்பட்டால் அதற்கான ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களாக்காக இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பாதுகாப்பான பயணத்தை செய்ய முடியும்.

இந்த பஸ்களில் பயணிகள் சீட்டில் அமருக்கும் போது சீட் பெல்ட் அணியும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. எப்படி விமானங்களில் சீட் பெல்ட் வழங்கப்படுகிறதோ அதே போல இந்த பஸ்களில் ஒவ்வொரு பயணிகளும் சீட் பெல்ட் அறிந்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும். இது போக ஆங்காங்க பயணிகள் தங்கள் செல்போன் லேப்டாப் போன்ற எலெக்ட்ரானிக் கருவிகளை சார்ஜ் போட சார்ஜர்களும் வழங்கப்பட்டுள்ளன. இது போக டிரைவருக்கு நவீன வசதிகளும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

Electric Bus in Chennai

மேலும் இந்த பஸ்ஸின் உள்ள அடுத்த ஸ்டாப் குறித்த அறிவிப்புகளை வழங்குவதற்காக எல்இடி திரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அறிவிப்பிற்கான ஸ்பீக்கர்களும் வழங்கப்பட்டுள்ளது. பணிமனைகளில் இந்த பஸ்களை சார்ஜ் போடும் இடமும் வழங்கப்பட்டுள்ளது. டீசல் பஸ்களை இயக்கவதை விட எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவது தான் அரசுக்கு லாபமாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையில் இயங்கப்போகும் இந்த எலெக்ட்ரிக் பஸ்கள் நிச்சயம் பலரது கவனத்தை ஈர்க்கும் நவீன அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை பஸ்களை தயாரித்த நிறுவனமே பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பஸ்கள் வாங்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து பஸ்கள் சிறப்பாக கண்காணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, June 30, 2025, 20:00 [IST]
English summary
Electric bus in chennai 120 low floor evs flagged off by cm stalin
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X