இன்னும் 6 மாசம் தான் சென்னையே குளுகுளுன்னு மாறப்போகுது! சத்தமே இல்லாமல் ஓடும் பஸ் வரப்போகுது!

சென்னையில் சமீபகாலமாக தாழ்த்தள பஸ்கள் எல்லாம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னைக்கு புதிதாக எலெக்ட்ரிக் பஸ்கள் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது சென்னை மக்களை குஷிபடுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கடும் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்கவும் காற்று மாசை சமாளிக்கவும் இந்த பஸ்கள் சிறப்பாக பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சென்னையில் தற்போது இயங்கி வரும் அரசு பஸ்களை மாற்றி புதிதாக அரசு பஸ்சை வாங்குவதற்காக ஆர்டர் வழங்கப்பட்ட நிலையில், தற்போது வழங்கப்பட்ட ஆர்டருக்கு ஏற்ற பஸ்கள் எல்லாம் டெலிவரி செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி தற்போது சென்னையில் பல்வேறு கட்டங்களாக தாழ்த்தள பஸ்கள் எல்லாம் டெலிவரி செய்யப்பட்டு தற்போது அந்த பஸ்கள் எல்லாம் பயன்பாட்டில் இருக்கிறது.

electric bus in chennai

சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் இந்த தாழ்தன பஸ்கள் பயன்பாட்டிற்கு வர உள்ள நிலையில் இந்த ஆர்டர்களுடன் சேர்த்து வழங்கப்பட்ட எலெக்ட்ரிக் பஸ்களுக்கான ஆர்டர் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சென்னையில் எலெக்ட்ரிக் பஸ்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு உலக வங்கியுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 500 எலெக்ட்ரிக் பஸ்களை தாழ்த்தள பஸ்களாக தயாரித்து வாங்க தமிழக போக்குவரத்து கழகம் திட்டமிட்டு இருந்தது. அதில் 100 பஸ்கள் ஏசி பஸ்களாகவும் மற்ற 400 பஸ்கள் ஏசி அல்லாத எலெக்ட்ரிக் பஸ்களாகவும் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பஸ்களுக்கான ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது பஸ்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன.

electric bus in chennai

வரும் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த பஸ்கள் எல்லாம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் டீசல் பஸ்க்களை ஒரு கிலோ மீட்டர் இயக்க தமிழக அரசுக்கு 116 ரூபாய் செலவாகிறது. அதுவே எலெக்ட்ரிக் பஸ்சை இயக்க வேண்டும் என்றால் ஒரு கிலோ மீட்டருக்கு 77.14 ரூபாய் மட்டுமே செலவாகும். எலெக்ட்ரிக் ஏசி பஸ் இயக்க 80.86 ரூபாய் செலவாகும்.

தற்போது உள்ள டீசல் பஸ்களை விட எலெக்ட்ரிக் பஸ்கள் செலவு மிக குறைவாக இருப்பதால் தமிழக போக்குவரத்து கழகத்திற்கு மிக அதிகமான லாபம் கிடைக்கப் போகிறது என போக்குவரத்து கழகம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பஸ்களுக்கு தயாரிப்பதற்கான ஆர்டர்களை அசோக் லேலாண்ட் மற்றும் ஸ்விட்ச் மொபிலிட்டி ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன. ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனத்தின் துணை நிறுவனமான ஓஎச்எம், இவிஇஒய் டிரான்ஸ் மற்றும் ஏரோகிள் ஆட்டோமொபைல் ஆகிய நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

electric bus in chennai

இந்த நிறுவனங்கள் வெறும் பஸ்களை மட்டும் தயாரித்து வழங்குவதற்காக ஒப்பந்தம் செய்யப்படவில்லை. பஸ் வழங்கப்பட்டு அடுத்த 12 ஆண்டுகளுக்கு அந்த பதிலை பராமரிக்கும் பொறுப்பும் அந்த நிறுவனங்களுக்கு தான் இருக்கிறது. பஸ்களை வழங்கிய நிறுவனங்கள் அந்த பஸ்களில் உள்ள பராமரிப்பு உதிரி பாகங்கள் பழுதானால் அதை மாற்றுவது மற்றும் பஸ்ஸை இயக்குவது உள்ளிட்ட பொறுப்பு நிறுவனங்களுக்கு இருக்கிறது. பஸ்ஸில் நடத்துனரை மட்டுமே தமிழக அரசு நியமித்து டிக்கெட் மூலம் பணம் வசூலித்துக் கொள்ளும்.

தமிழக அரசுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் படி பஸ்சை சுத்தம் செய்வது முதல் பராமரிப்பு செய்வது என அனைத்தும் அது தனியார் நிறுவனங்கள் செய்ய வேண்டியது தான். அதற்காக சேர்த்து தான் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த பஸ் ஒருமுறை சார்ஜ் செய்தால் 180 கிலோமீட்டர் வரை இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை நகர் பகுதியில் இயங்கும் பஸ்களாக இந்த பஸ்கள் இயக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

தற்போது சென்னை போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது படி பெரும்பாக்கம், தண்டையார்பேட்டை, பூந்தமல்லி, வியாசர்பாடி மற்றும் பெரம்பூர் ஆகிய டிப்போகளில் இந்த அரசு பஸ்கள் வழங்கப்பட்டு அந்தந்த டிப்போக்களில் உள்ள ரூட்டுகளில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பஸ்களை வாங்குவதற்கு மொத்தம் ரூபாய் 959 கோடி செலவாகியுள்ளது.

இந்த மொத்த செலவில் 70 சதவீத தொகையை உலக வங்கி வழங்கி உள்ளது. 30 சதவீத தொகையை மட்டுமே மாநில அரசு வழங்கி உள்ளது. இந்த பஸ் போக்குவரத்து மூலம் கிடைக்கும் லாபத்தை வைத்து உலக வங்கியில் தமிழக அரசு வாங்கியுள்ள இந்த கடனை அடைத்து முடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் பஸ் விலை விட எலெக்ட்ரிக் பஸ்கள் அதிக லாபமாக இருப்பதால் இனிதாக இந்த கடனை அடைத்து விட முடியும் என்ன தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் காற்று மாசு அதிகமாக இருந்து வருகிறது. அதில் சென்னையில் விதிவிலக்கல்ல. இந்த காற்று மாசுவை சமாளிக்க இப்படியான எலெக்ட்ரிக் பஸ்களின் பயன்பாடு அதிகமாக தேவையான இருக்கிறது. இந்த 500 எலெக்ட்ரிக் பஸ்கள் ஒரு சோதனை முயற்சியாகவே வாங்கப்பட்டுள்ளன. இது வெற்றியடையும் பட்சத்தில் இனி அனைத்து பஸ்களும் மாறுவதற்கு கூட வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 24, 2024, 11:30 [IST]
English summary
Electric bus in chennai april 2025 launch
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X