டீசல் பஸ்களை விட இவி பஸ்கள் அதிகமாக ஆக்ஸிடென்ட் ஆகுதாம்! ஏன் தெரியுமா?
டீசல் பஸ்களை விட எலெக்ட்ரிக் பஸ்கள் அதிகம் விபத்தில் சிக்குவதாக கர்நாடக மாநில போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான ஆய்வை மேற்கொள்ளவும், விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டடுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எலெக்ட்ரிக் பஸ்கள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. பெங்களூரு நகருக்குள் மட்டும் ஒரு நாளுக்க மொத்தம் 65,000 டிரிப்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக 7067 பஸ்கள் இயக்கப்படுகிறது. 1644 எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படுகிறது. 5423 டீசல் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் எலெக்ட்ரிக் பஸ்கள் எல்லாம் தனியார் பராமரிப்பில் இயக்கப்படுகிறது. என்டிபிசி வித்யூத் வியாபார் நிகாம், டாடா மோட்டாஸ் லிமிடெட், சுவிட்ச் மொபிலிட்டி ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து இந்த பஸ்களை இயக்கி வருகிறது.

இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு மத்தி வரையிலான கணக்கெடுப்பில் எலெக்ட்ரிக் பஸ்கள் 35 சாலை விபத்துக்களில் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதே டீசல் பஸ்களும் விபத்தில் சிக்கியுள்ளன. ஆனால் அளவில் குறைவாக உள்ளது. டீசல் பஸ்கள் 1 லட்சம் கி.மீ இயக்கினால் 0.05 விபத்து நடக்கிறது. ஆனால் எலெக்ட்ரிக் பஸ்கள் 1 லட்சம் கி.மீ இயங்கினால் 0.07 விபத்து நடந்துள்ளது. இது பார்க்கும் போது மிக குறைவான நம்பராக இருக்கும். ஆனால் விபத்து எண்ணிக்கையில் 40 சதவீதம் அதிகம் ஆகும்.

இது குறித்து அமைச்சர் பேசும் போது இந்த பஸ்களை இயக்குவதில் தான் பிரச்சனை இருப்பது தெரிகிறது.இந்த பஸ்களை இயக்கும் தனியார் நிறுவனத்தின் டிரைவர்கள் போதுமான அனுபவம் இல்லாமல் இருக்கிறார்கள் என்றும், வாகனங்களின் பராமரிப்பு சரியான நேரத்தில் சரியான அளவில் நடக்கவில்லை. இதனால் வாகனம் ஆங்காங்கே பிரேக்டவுணாகி நிற்பதாகவும், இதனால் பஸ் சேவைபாதிக்கப்படுவதாகவும், இதனால் பஸ்ஸில் பாதுகாப்பு குறைவதாகவும், தொடர்ந்து பேட்டரி தொடர்பான பிரச்சனைகள் வருவதாகவும், சில பஸ்கள் இயக்கத்தில் இருக்கும் போது டெக்னிக்கல் பிரச்சனை வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்கள் இந்த பஸ் செயல்பாட்டிற்காக ஒரு பஸ்ஸில் 2.3 ஊழியர் விதம் பணியமர்த்தப்பட வேண்டும். ஆனால் தனியார் நிறுவனங்கள் 1.9 முதல் 2.0 பயணியாளர்கள் ஒரு பஸ்ஸிற்கு என்ற ரீதியில் தான் பணியாமர்த்தியுள்ளனர். இந்த ஆட்கள் குறைபாடு வாகனத்தின் பாரமரிப்பு மற்றும் செயல்பாட்டில் தர குறைவை பிரதிபலிக்கிறது.

மேலும் வாகனங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை சர்வீஸ் செய்யப்பட வேண்டும். ஆனால் எலெக்ட்ரிக் பஸ்கள் இப்படியான சர்வீஸ் காலம் வரும் போது அதை செய்யாமல் சர்வீஸ் கேன்சல் செய்யப்படுகிறது. சமீபகாலமாக எலெக்ட்ரிக் பஸ்களுக்கு 6.4 சதவீதம் சர்வீஸ் கேன்சல் செய்யப்பட்டுள்ளது. டீசல் பஸ்களுக்கு 1.7 சதவீதம் தான் கேன்சல் செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தனியார்களுக்கு பஸ்களை வழங்கி டிரைவிங் மற்றும் பராமரிப்பு பணி செய்ய சொன்னதில் ஏற்பட்ட பிரச்சனை இது. பராமரிப்பு பணிகள் மட்டுமல்லாமல் டிரைவிங் பணிகளையும் அந்நிறுவனமே செய்ய வேண்டியது உள்ளதால் உரிய அனுபவம் இல்லாத பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இதனால் ஏற்படும் பிரச்சனை இது. இதை நிச்சயம் புரிந்து பிரச்சனைகளை அரசு சரி செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications









