இவங்க வெச்சிருக்கும் எலெக்ட்ரிக் காரின் விலை இத்தன கோடியா! இதுல போனா உல்லாச கப்பல்ல மெதக்கற மாதிரி இருக்கும்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மீதான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சாதாரண மக்கள் மட்டுமல்லாது, பிரபலங்களும் கூட எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்த செய்தியில் எலெக்ட்ரிக் கார்களை வைத்துள்ள பாலிவுட் பிரபலங்கள் (Bollywood celebrities) குறித்த தகவல்களை பார்க்கலாம்.

ஷாருக்கான் (Shahrukh Khan): பிரபல நடிகர் ஷாருக்கானிடம் ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) எலெக்ட்ரிக் கார் உள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் விலை 45.95 லட்ச ரூபாயாக இருக்கிறது. இது எக்ஸ் ஷோரூம் விலை ஆகும்.

Shahrukh Khan Hyundai Ioniq 5

ரேகா (Rekha): பிரபல நடிகையான ரேகா சமீபத்தில்தான் பிஎம்டபிள்யூ ஐ7 (BMW i7) எலெக்ட்ரிக் காரை வாங்கினார். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 2.03-2.50 கோடி ரூபாய் வரையிலான விலைகளில் பிஎம்டபிள்யூ ஐ7 கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

கிம் ஷர்மா (Kim Sharma): இவரிடமும் பிஎம்டபிள்யூ ஐ7 எலெக்ட்ரிக் கார் உள்ளது. கிம் ஷர்மா மிகவும் எளிமையான டாடா நானோ (Tata Nano) கார் பயன்படுத்தி வந்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். விலை குறைவான இந்த காருடன் தற்போது பிஎம்டபிள்யூ ஐ7 எலெக்ட்ரிக் கார் இணைந்துள்ளது.

Jacqueline Fernandez BMW i7

ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ் (Jacqueline Fernandez): நடிகை ரேகா மற்றும் கிம் ஷர்மாவை போல், மற்றொரு பிரபல நடிகையான ஜாக்குலின் ஃபெர்ணாண்டசும் கூட, பிஎம்டபிள்யூ ஐ7 எலெக்ட்ரிக் காரை சொந்தமாக வைத்துள்ளார். இதன் மூலம் பாலிவுட் நடிகைகள் இந்த எலெக்ட்ரிக் காரை எவ்வளவு விரும்புகின்றனர்? என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

மாதுரி தீக்ஸித் (Madhuri Dixit): பிரபல நடிகையான மாதுரி தீக்ஸித் வசம் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) உள்ளது. இது டார்க் எடிசன் (Dark Edition) மாடல் ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 14.74-19.94 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் டாடா நெக்ஸான் இவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவையும் எக்ஸ் ஷோரூம் விலைதான்.

மந்த்ரா பேடி (Mandira Bedi): இவரிடமும் டாடா நெக்ஸான் இவி உள்ளது. இது இந்திய சந்தையில் அதிகமாக விற்பனையாகி கொண்டுள்ள எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைப்பதும், நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருப்பதும்தான் இதற்கு மிக முக்கியமான காரணங்கள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய வாடிக்கையாளர்கள் முன்பெல்லாம் எலெக்ட்ரிக் கார்களை வாங்க தயக்கம் காட்டி வந்தனர். ஆனால் பிரபலங்களே தற்போது எலெக்ட்ரிக் கார்களை வாங்க தொடங்கியுள்ளதால், அந்த தயக்கம் தகர்க்கப்பட்டுள்ளது என நாங்கள் கருதுகிறோம். இது இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்க உதவி செய்யும் என்பது எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Friday, December 29, 2023, 19:43 [IST]
English summary
Electric car owners in bollywood shahrukh khan kim sharma mandira bedi
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+