போக்குவரத்தில் புதிய புரட்சி... பேட்டரியில் இயங்கும் பறக்கும் டாக்சி வெற்றிகரமாக சோதனை!

உலகின் முதல் பறக்கும் மின்சார வாகனம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

By Saravana Rajan

மின் மோட்டார்களில் இயங்கும் உலகின் முதல் பறக்கும் வாகனம் வெற்றிகரமாக பறக்கவிட்டு சோதனை செய்யப்பட்டு இருக்கிறது. இது வாடகை வாகனமாக பயன்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட இருப்பதால், நகர்ப்புற போக்குவரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

உலகின் முதல் மின்சார பறக்கும் வாகனம் வெற்றிகரமாக சோதனை!

ஜெர்மனியை சேர்ந்த லிலியம் என்ற நிறுவனம்தான் இந்த மின்சார பறக்கும் வாகனத்தை உருவாக்கி உள்ளது. இந்த பறக்கும் வாகனத்தின் மிக முக்கிய சிறப்பம்சமே, இருந்த இடத்தில் இருந்து மேலே எழும்பி பறக்கவும், தரை இறங்கவும் கூடிய திறனை பெற்றிருக்கிறது.

உலகின் முதல் மின்சார பறக்கும் வாகனம் வெற்றிகரமாக சோதனை!

இந்த பறக்கும் வாகனம் டாக்சியாக பயன்படுத்தும் நோக்கோடு தயாரிக்கப்படுகிறது. அதாவது, ஓலா, உபர் போன்று மொபைல்போனில் முன்பதிவு செய்து கொண்டு இந்த பறக்கும் வாகனத்தில் செல்ல முடியும்.

உலகின் முதல் மின்சார பறக்கும் வாகனம் வெற்றிகரமாக சோதனை!

கடந்த 21ந் தேதி லிலியம் பறக்கும் வாகனம் முதல்முறையாக பறக்கவிட்டு சோதனை செய்யப்பட்டது. ரிமோட் கன்ட்ரோல் மூலமாக இந்த பறக்கும் வாகனம் இயக்கப்பட்டது. தொடர்ந்து இந்த பறக்கும் வாகனத்தை பறக்கவிட்டு பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன.

உலகின் முதல் மின்சார பறக்கும் வாகனம் வெற்றிகரமாக சோதனை!

முதல்கட்ட சோதனைகள் வெற்றிகரமாக முடிந்தவுடன், பயணிகளுடன் இந்த பறக்கும் வாகனத்தை இயக்கி சோதனை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த புரோட்டோடைப் மாடலில் இப்போது 2 பேர் பயணிக்க முடியும். இதன் அடிப்படையில் உருவாக்கப்பட இருக்கும் வாடகை பறக்கும் வாகனத்தில் 5 பேர் பயணிக்கும் வசதியுடன் தயாரிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

உலகின் முதல் மின்சார பறக்கும் வாகனம் வெற்றிகரமாக சோதனை!

இந்த பறக்கும் வாகனத்தில் 36 விசிறிகள் பறப்பதற்கான உந்து சக்தியை வழங்கும். இவை மின்மோட்டார்கள் மூலமாக இயக்கப்பட உள்ளது. உலகிலேயே வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு இருக்கும் முதல் மின்சார பறக்கும் வாகனமாக அறியப்படுகிறது.

உலகின் முதல் மின்சார பறக்கும் வாகனம் வெற்றிகரமாக சோதனை!

சாதாரணமாக மின்சார வாகனங்களை வடிவமைப்பதில் பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றை கடந்து முதல்முறையாக வணிக ரீதியில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான சிறப்பம்சங்களுடன் இந்த பறக்கும் வாகனம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

உலகின் முதல் மின்சார பறக்கும் வாகனம் வெற்றிகரமாக சோதனை!

க்வாட்காப்டர் எனப்படும் சிறிய ரக பறக்கும் சாதனத்தை ஒப்பிடும்போது, இந்த லிலியம் பறக்கும் வாகனத்திற்கு வெறும் 10 சதவீத எரிபொருள் செலவே ஆகும். அதாவது, இது மின்சாரத்தில் இயங்குவதால் மிக குறைவான எரிபொருள் செலவு இருக்கும். பேட்டரியில் இயங்குவதால் புகை பிரச்னை இல்லை. எனவே, சுற்றுச்சூழலுக்கும் சிறப்பானதாக இருக்கும்.

உலகின் முதல் மின்சார பறக்கும் வாகனம் வெற்றிகரமாக சோதனை!

இந்த பறக்கும் சாதனத்தின் பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்யும் பட்சத்தில் 300 கிமீ தூரம் வரை பயணிக்கும். மணிக்கு 300 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

உலகின் முதல் மின்சார பறக்கும் வாகனம் வெற்றிகரமாக சோதனை!

பறக்கும் கார்களுக்கு பிரத்யேக ஓடுதளங்கள் தேவைப்படும். ஆனால், இந்த பறக்கும் டாக்சி வாகனத்துக்கு அவ்வாறு ஓடுதளங்கள் எதுவும் தேவைப்படாது. இதனால், சாதாரண வாடகை கார்களில் இருப்பது போன்ற கட்டணத்தில் இந்த பறக்கும் டாக்சிக்கான கட்டணம் இருக்கும் என்பதும் ஆவலைத் தூண்டும் விஷயம்.

உலகின் முதல் மின்சார பறக்கும் வாகனம் வெற்றிகரமாக சோதனை!

இந்த பறக்கும் வாகனத்தில் இருக்கும் விசிறிகள் மற்றும் மின் மோட்டார்கள் தனித்தனியாக இயங்கும் வகையில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஒரு விசிறி அல்லது மோட்டாரில் பழுது ஏற்பட்டாலும், பாதுகாப்பாக தரை இறங்கும் வசதி இருக்கிறது.

உலகின் முதல் மின்சார பறக்கும் வாகனம் வெற்றிகரமாக சோதனை!

அதேபோன்று, பைலட் ஏதேனும் தவறு செய்தாலோ அல்லது வாகனத்தை தவறுதலாக பயன்படுத்த முடியாத அளவுக்கு பிரத்யேக சாஃப்ட்வேர் பொருத்தப்பட்டு இருக்கிறது. மோட்டார்கள் செயலிழந்தால், பாராசூட் மூலமாக தரையிறங்கும் வசதியும் உண்டு. பறக்கும் கார்களுக்கு முன்னதாகவே இந்த பறக்கும் டாக்சி வாகனம் பயன்பாட்டுக்கு வந்துவிடும் வாய்ப்பு இருப்பதாக வாகன சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Electric flying taxi by Lilium successfully completes its first flight test
Story first published: Saturday, April 22, 2017, 15:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X