எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்து 8 பேர் மரணம்... நாட்டையே உலுக்கிய சோகச் சம்பவம்...

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலிருந்து வந்த புகையால் இவர்கள் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர். இது குறித்த முழு விபரத்தைக் காணலாம் வாருங்கள்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்து 8 பேர் மரணம் . . . நாட்டையே உலுக்கிய சோகச் சம்பவம் . . .

இந்தாண்டு கடந்த மார்ச் மாதம் முதல் அடுத்தடுத்து இந்தியாவின் பல பகுதிகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து மக்களுக்கு எலெக்டரிக் வாகனங்கள் மீது நம்பிக்கை குறைந்தது. மத்திய அரசு இது குறித்து விசாரணைக்காக குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழுவும் விசாரணை நடத்தி பேட்டரி அமைப்பு தான் பிரச்சனை என முடிவுகளை அறிவித்தது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்து 8 பேர் மரணம் . . . நாட்டையே உலுக்கிய சோகச் சம்பவம் . . .

இதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே அடுத்த சம்பவம் நடந்துள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை அடுத்த செகந்திராபாத் பகுதியில் ரூபி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூம் ஒன்று செயல்பட்டு வந்தது. அதே கட்டிடத்தின் மாடியில் 4 தளங்களில் ரூபி பிரைடு என்ற லாட்ஜ் ஒன்றும் நடந்து வந்தது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்து 8 பேர் மரணம் . . . நாட்டையே உலுக்கிய சோகச் சம்பவம் . . .

இந்நிலையில் நேற்று இரவு இந்த எலெக்டரிக் ஸ்கூட்டர் ஷோரூமிருந்து புகை கிளம்பியுள்ளது. இந்தப் புகை படிகட்டுகளின வழியாக லாட்ஜின் முதல் மற்றும் இரண்டாம் மாடிக்குச் சென்றுள்ளது. அந்த லாட்ஜில் உள்ள 4 தளத்தில் மொத்தம் 25 பேர் தங்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதில் புகை லாட்ஜ் உள்ள இரவுநேரம் சென்றது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்து 8 பேர் மரணம் . . . நாட்டையே உலுக்கிய சோகச் சம்பவம் . . .

இரவு நேரம் என்பதால் இந்தப் புகை வருவது யாருக்கும் தெரியவில்லை எல்லோரும் தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர். அதிகமான புகை வந்ததால் அங்கிருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தின் உள்ளே இருந்து புகை வருவதைப் பார்த்ததும் அக்கம் பக்கத்தினர். தீயணைப்பு நிலையத்திற்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்து 8 பேர் மரணம் . . . நாட்டையே உலுக்கிய சோகச் சம்பவம் . . .

இதையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து லாட்ஜ் உள்ளே இருந்தவர்களை மீட்க முயற்சி செய்தனர். ஜன்னல் வழியாக அங்குத் தங்கியிருந்தவர்களை மீட்கும் முயற்சி நடந்தது. அந்த லாட்ஜில் உள்ள 23 ரூம்களிலும் தங்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டனர். இதில் துரதிருஷ்டவசமாக இந்தப் புகையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்து 8 பேர் மரணம் . . . நாட்டையே உலுக்கிய சோகச் சம்பவம் . . .

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த தெலங்கானா மாநில உள்துறை அமைச்சர் முகம்மது மெஹ்மூத் அலி உத்தரவிட்டுள்ளார். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எப்படி தீ பிடித்தன என விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் அதிகமாக சார்ஜ் ஏறியது, அல்லது ஷாட் சர்க்யூட் காரணமாக ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்து அதிலிருந்து அடுத்தடுத்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெடித்திருக்கலாம் எனத் தெரிகிறது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்து 8 பேர் மரணம் . . . நாட்டையே உலுக்கிய சோகச் சம்பவம் . . .

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லிய பிரதமர் மோடி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ50 ஆயிரம் பணமும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். பொதுவாக எலெக்ட்ரிக் வாகனம் தீப்பிடித்து எரிந்தால் அதில் வரும் தீயை விடப் புகை அதிகமாக இருக்கும்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்து 8 பேர் மரணம் . . . நாட்டையே உலுக்கிய சோகச் சம்பவம் . . .

இந்தப் புகை அப்பகுதி அடைந்த பகுதியாக இருந்தால் உள்ளே இருப்பவர்கள் சுவாசிக்க கூட முடியாத அளவிற்கு அடர்த்தியாக இருக்கும். இதனால் இந்தச் சம்பவத்தின் போது உள்ள இருப்பவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழக்க நேரிடும். இந்த இப்படியாக புகை வருவது பேட்டரி வெடித்தால் மட்டுமே ஏற்படும் விஷயமாகும். இப்படியாக பேட்டரிகள் வெடிப்பதற்கு முக்கியமான காரணம் தரமற்ற பேட்டரியை வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் பயன்படுத்துவதன் எனக் கூறப்படுகிறது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்து 8 பேர் மரணம் . . . நாட்டையே உலுக்கிய சோகச் சம்பவம் . . .

குறிப்பாக இந்த விபத்தில் தீப்பிடித்தால் அதைத் தானாக தண்ணீரைப் பீச்சி அடிக்கும் கருவி பொருத்தப்பட்டிருக்கும். இந்தச் சம்பவத்தின் போது அந்தக் கருவியும் வேலை செய்யவில்லை. இதுவும் விபத்தில் உயிரிழப்புகள் அதிகமாக நடந்ததற்குக் காரணமாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து இந்த விபத்திற்கான மூல காரணம் கண்டறியப்படும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 13, 2022, 12:09 [IST]
English summary
Electric scooter fire accident in Secunderabad eight people died
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+