மெட்ரோ இரயில் காலத்திற்கு வந்துவிட்டோம்... ஆனா இந்தியாவில் ஒரு மாநிலத்தில் இப்போதுதான் முதல் எலக்ட்ரிக் இரயில்

எலக்ட்ரிக் இரயில்களை தாண்டி மெட்ரோ இரயில்களின் காலத்தை நெருங்கி கொண்டிருக்கிறோம். ஆனால் இந்தியாவில் ஒரு மாநிலத்தில் இப்போதுதான் முதல்முறையாக எலக்ட்ரிக் இரயில் இயக்கத்திற்கு தயாராகி உள்ளது. யார் செய்த தாமதம் இது? என்பதற்கான பதிலை விரிவாக இனி பார்க்கலாம்.

இரயில்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் பரிணாம வளர்ச்சியை அடைந்து வருகின்றன. ஒரு காலத்தில் புகை வண்டிகள் மட்டுமே பெரும் நகரங்களில் இருந்துவந்த நிலையில், அவை அதன்பின் எலக்ட்ரிக் இரயில்களாக மாறின. மெட்ரோ இரயில்கள் தற்சமயம் முக்கிய மாநகரங்களில் மட்டுமே உள்ளன. ஆனால் கூடிய விரைவில் இந்தியாவின் அனைத்து நகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.

ஒருவழியாக... மேகாலயாவில் முதல்முறையாக எலக்ட்ரிக் ரயில் சேவை!

யார் கண்டது, எதிர்காலத்தில் அருகில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் அளவிற்கு கூட மெட்ரோ இரயில்கள் விரிவுப்படுத்தப்படலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மேகாலயா மாநிலம் தற்போதுதான் முதல் எலக்ட்ரிக் இரயிலை பெற்றுள்ளது. மேகாலயா மாநிலம் ஆனது இந்திய வடக்கிழக்கு எல்லை இரயில்வே மண்டலத்திற்குள் அடங்குகிறது.

இந்த மண்டல அதிகாரிகளின் ஆணைக்கிணங்க, அசாமில் உள்ள துத்னை நகரத்தில் இருந்து மேகாலயாவில் உள்ள மெண்டிபதார் நகரம் வரையில் 22.82 கிமீ தொலைவிற்கு எலக்ட்ரிக் இரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மேகாலயா மாநிலத்திற்கு முதல்முறையாக எலக்ட்ரிக் இரயில் சேவைக்கான மின்சார கம்பிகள் வந்துள்ளன. அசாம் மாநிலத்தில் வேறொரு பகுதியிலும் எலக்ட்ரிக் இரயில் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஒருவழியாக... மேகாலயாவில் முதல்முறையாக எலக்ட்ரிக் ரயில் சேவை!

அசாமில் அபாயாபுரி மற்றும் பஞ்சரத்னா நகரங்களுக்கு இடையே இந்த புதிய எலக்ட்ரிக் இரயில் சேவை துவங்கப்பட்டுள்ளதாக வடகிழக்கு எல்லை இரயில் மண்டல முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி சபைசாஸ்சி டி தெரிவித்துள்ளார். துத்னை - மெண்டிபதார் இடையேயான இரயில் சேவையை காட்டிலும் நீளமானதாக 34.59கிமீ தொலைவு தண்டவாளத்தை அபாயாபுரி - பஞ்சரத்னா இடையே இரயில் சேவை கொண்டுள்ளது.

அபாயாபுரி மற்றும் பஞ்சரத்னா நகரங்களுக்கு இடையேதான் இந்தியாவின் மிக பெரிய நதியான பிரம்மப்புத்திரா செல்கிறது. இருப்பினும், நதிக்கு மேலேயே தண்டவாளத்தை அமைத்துள்ளனர். தற்போது எலக்ட்ரிக் இரயிலுக்கான மின்சார கம்பிகளும் நதியை கடந்து செல்கின்றன. பிரம்மப்புத்திரா ஆறு சற்று குறுகலாக செல்லும் பகுதியை தேர்வு செய்து இந்த இரயில் பாலத்தை கட்டமைத்துள்ளனர்.

ஆக மொத்தமாக அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் 57.41 கிமீ தொலைவிற்கு எலக்ட்ரிக் இரயில் சேவையை வடகிழக்கு எல்லை இரயில் மண்டலம் கொண்டுவந்துள்ளது. இவ்வளவு தொலைவிற்கு மின்சார கம்பிகள் மற்றும் அவற்றை தாங்கி பிடிப்பதற்கு கம்பங்களை நிறுவுதல் உள்ளிட்ட பணிகளை மத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனம் ஒன்றின் மூலமாக வடகிழக்கு எல்லை இரயில் மண்டலம் மேற்கொண்டுள்ளது.

மேகாலயா மாநிலத்திலேயே முதல்முறையாக எலக்ட்ரிக் இரயில் சேவையை பெற்றுள்ள மெண்டிபதார் நகரத்தில் இரயில் போக்குவரத்து ஆனது மிக சமீபத்தில் 2014இல் தான் துவங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது 10 வருடங்களுக்கு உள்ளாகவே எலக்ட்ரிக் இரயில் சேவையை பெற்றுள்ளது. எரிபொருள் மூலமாக இயங்கும் இரயில்களினால் ஏற்படும் காற்று மாசுவை தவிர்ப்பது மட்டுமின்றி, எலக்ட்ரிக் இரயில்கள் சற்று கூடுதல் வேகத்திலும் இயங்கக்கூடியவை.

More from DriveSpark

Article Published On: Saturday, March 18, 2023, 14:12 [IST]
English summary
Electric train transportation first time in meghalaya
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+