EV Jobs For Freshers: ஒன்னு ரெண்டு இல்ல ஆயிரக்கணக்கான பேருக்கு வேலை ரெடியா இருக்குது!

இந்தியாவில் சமீபகாலமாக எலெக்ட்ரிக் வாகன துறை மிகப்பெரிய வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது. இந்தியா எனர்ஜி ஸ்டோரேஜ் அலையன்ஸ் என்ற அமைப்பு வருங்காலங்களில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன துறை ஆண்டிற்குச் சதவீதம் வளர்ச்சியடையும் எனத் தெரிவித்துள்ளது. மக்கள் மெல்ல மெல்ல எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் மிகப்பெரிய அளவில் திட்டமிட்டு வரும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய அதிகமான பணியாளர்களைத் தேடி வருகின்றனர். அதுவும் குறிப்பாகத் திறமை மிகுந்த பணியாளர்களைத் தேடி வருகின்றனர். தற்போது ஹீரோ எலெக்ட்ரிக், எம்ஜி மோட்டார், சிம்பிள் எனர்ஜி, யூலு பைக்ஸ் ஆகிய நிறுவனங்கள் பணியாளர்களைத் தேடும் பணியில் தீவிரமாக இருக்கின்றன.

EV Jobs For Freshers: ஒன்னு ரெண்டு இல்ல ஆயிரக்கணக்கான பேருக்கு வேலை ரெடியா இருக்குது!

அதுவும் குறிப்பாக இவி டெக்னீஷியல், பேட்டரி ரீசைக்கிளிங் வல்லுநர்கள், மென்பொருள் உருவாக்குநர்கள், தயாரிப்பு மற்றும் இன்ஜினியரிங் துறை சார்ந்த வல்லுநர்களை இந்நிறுவனங்கள் அதிகமாகத் தேடி வருகின்றன. நாம் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய வேலை வாய்ப்புகள் தற்போது இவி துறையில் திறக்கப்பட்டுள்ளது.

தற்போது ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இவி டிசைன், பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம், ஐஓடிஏ, தயாரிப்பு, சப்ளை செயின், சார்ஜிங் கட்டுமானம், சாஃப்ட்வேர் மேம்பாடு மற்றும் சர்வீஸ் மெக்கானீக் ஆகிய துறைகளில் வல்லுநர்களாக இருக்கும் நபர்களை வேலைக்காகத் தேடி வருகிறது. வரும் ம் ஆண்டிற்குள் 900 நபர்களை வேலைக்குச் சேர்க்க முடிவு செய்துள்ளது.

இதே போல சிம்பிள் எனர்ஜி நிறுவனம் அடுத்த நிதியாண்டில் சுமார் 1500 பேரை வேலைக்குச் சேர்க்க முடிவு செய்துள்ளது. அவர்கள் ஆட்டோமோட்டிவ், சாஃப்ட்வேர், ஃபிரிம்வேர் துறைகளில் உள்ள நபர்களை ஹார்டுவேர் தயாரிப்பு, சாஃப்ட்வேர்மேம்பாாடு, இன்ஜினியரிங், தயாரிப்பு, விற்பனை மற்றும் சர்வீஸ் ஆகிய துறைகளில் வேலைக்குச் சேர்க்க முடிவு செய்துள்ளது.

இது போன்று நிறுவனங்களுக்கு பணியாளர்களைச் சேர்த்துவிடும் ஒரு நிறுவனம் 10ல் 6 இவி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாகவும், அடுத்த 6 மாதத்தில் ஏகப்பட்ட நபர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் குறிப்பாக இவிகளுக்கு தலைநகராக விளங்கும் பெங்களூருவில்தான் அதிகமாக வேலை வாய்ப்பு உருவாகி வருவதாகவும் கூறியுள்ளது.

இவி ஸ்டார்ட்அப்கள் கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவில் 1.66 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பணத்தை முதலீடாகப் பெற்றுள்ளது. இது 117 சதவீத வளர்ச்சியாகும். பெங்களூருவில் தான் பெரும்பாலான இவி நிறுவனங்கள் தங்கள் தலைமயத்தை வைத்துள்ளனர். தற்போது புதிதாகத் துவங்கப்பட்டுள்ள யூலு பைக்ஸ் நிறுவனம் இந்தாண்டு இறுதிக்குள் 70 ஆயிரம் -1 லட்சம் பைக்குகளை சாலைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது.

இதற்காக டெக்னாலஜி, டேட்டா சையின்ஸ், பப்ளிக் பாலிசி, டெலிமேட்டிக்ஸ், ஃபிரிம்வயர் மற்றும் ஆப்பரேஷன்ஸ் ஆகிய துறைகளில் பணியாளர்களைத் தேடி வருகிறது. விரைவில் இந்நிறுவனம் இவி துறையில் பெரும் புரட்சியே செய்யப்போகிறது என எதிர்பார்க்கப்படுகிறது இதையெல்லாம் விட ஒரு படி மேலே போய்விட்டது எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம்

எம்ஜி மோட்டார் நிறுவனம் 22 கல்லூரிகளுடன் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி அந்நிறுவனம் 25 ஆயிரம் மாணவர்களுக்கு எம்ஜி நியூச்சர் புரோகிராம் என்ற ஸ்கில் மேம்பாட்டுப் பயிற்சியை வழங்கி வருகிறது. சுமார் 4 ஆண்டு பயிற்சிக்குப் பிறகு இந்த பயிற்சியில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களை நேரடியாக இந்நிறுவனம் வேலைக்கு எடுக்கும் பணியைச் செய்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, March 27, 2023, 12:40 [IST]
English summary
Electric vehicle industry hiring new talents to meet rising demand
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+