ஈரான் மோப்பம் பிடிச்சிருச்சு! இந்த 2 இடத்துல குண்டு போட்டா கதை முடிஞ்சுது! பேய் அறஞ்ச மாதிரி நடுங்கும் இஸ்ரேல்

உலகில் எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles) தற்போது மிக வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்பதுதான் இதற்கு மிகவும் முக்கியமான காரணம். இதன் காரணமாகவே உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன.

எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை உலகின் பல்வேறு நாடுகளும் ஊக்குவித்து கொண்டிருப்பதற்கு மற்றொரு முக்கியமான காரணமும் உள்ளது. அவை பெட்ரோல் (Petrol) மற்றும் டீசலின் (Diesel) மூலப்பொருளான கச்சா எண்ணெய் (Crude Oil) இறக்குமதியை குறைக்க உதவி செய்யும் என்பதுதான் அந்த மற்றொரு முக்கியமான காரணம்.

Israel-Iran War

வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்கள் உடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்குவதற்கு குறைவான செலவே ஆகிறது. எனவே பொதுமக்களும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதில் அதிக ஆர்வம் காட்டி கொண்டுள்ளனர். இப்படி எலெக்ட்ரிக் வாகனங்களால் நிறைய நன்மைகள் கிடைத்து கொண்டிருக்கும் சூழலில், இஸ்ரேலுக்கோ (Israel) அவை தலைவலியாக மாறியுள்ளன.

ஈரான் (Iran) உடனான போர்தான் (War) இதற்கு காரணம். இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தற்போது மிக கடுமையான போர் நடைபெற்று கொண்டுள்ளது. இரண்டு நாடுகளும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஒன்றையொன்று தாக்கி வருகின்றன. இதில், 2 நாடுகளுக்கும் மிக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டுள்ளன.

Tesla Model 3

அத்துடன் கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் விலை உயர்வு (Gold Price) போன்ற காரணங்களால், உலக நாடுகளுக்கும் இந்த போர் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில்தான் ஈரான் உடனான போர் காரணமாக, எலெக்ட்ரிக் வாகனங்கள் இஸ்ரேலுக்கு தலைவலியாக மாறியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இஸ்ரேலை பொறுத்தவரையில், 2 துறைமுகங்கள் மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. அவை அஸ்டோட் (Ashdod) மற்றும் ஹைஃபா (Haifa) ஆகியவை ஆகும். இதில், அஸ்டோட் துறைமுகம்தான் இஸ்ரேல் நாட்டிலேயே மிகவும் பெரியது. இஸ்ரேல் இறக்குமதி செய்யும் சரக்குகளில் 60 சதவீதத்தை அஸ்டோட் துறைமுகம்தான் கையாள்கிறது.

மறுபக்கம் ஹைஃபா துறைமுகம் வழியாக ஒவ்வொரு ஆண்டும் 20 மில்லியன் டன் சரக்குகள் செல்கின்றன. இந்த 2 துறைமுகங்களிலும் தற்போது ஏராளமான எலெக்ட்ரிக் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை வெளிநாடுகளில் இருந்து இஸ்ரேலுக்கு இறக்குமதி செய்யப்பட்டவை என கூறப்படுகிறது.

இந்த துறைமுகங்களில் ஏராளமான எலெக்ட்ரிக் வாகனங்கள் இருப்பதை ஈரான் மோப்பம் பிடித்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஈரான் தாக்குதல் நடத்தினால், இந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பற்றி எரியலாம் என்று அஞ்சப்படுகிறது. பொதுவாக எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பற்றினால், அவற்றை அணைப்பது மிகவும் கடினமான ஒரு விஷயம் ஆகும். தீ விபத்து சம்பவங்களின்போது, எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகள் அதிக அளவிலான வெப்பத்தை வெளியிடும்.

இது தீயின் உக்கிரத்தை அதிகமாக்கி விடும். எனவே கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால், அஸ்டோட் மற்றும் ஹைஃபா துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எலெக்ட்ரிக் வாகனங்கள் இஸ்ரேலுக்கு தற்போது தலைவலியாக மாறியுள்ளன. இதன் காரணமாக இஸ்ரேலின் கப்பல் மற்றும் துறைமுக நிர்வாகம் தற்போது அதிரடியான புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்ரேலை சேர்ந்த வாகன இறக்குமதி நிறுவனங்கள், தாங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வைத்துள்ள எலெக்ட்ரிக் வாகனங்களை, நாட்டின் முக்கியமான துறைமுகங்களில் இருந்து உடனடியாக எடுத்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக, மத்திய கிழக்கு (Middle East) பிராந்தியத்தில், அமைதியற்ற சூழல் நிலவுகிறது. எனவே 2 நாடுகளும் பேச்சுவார்த்தை மூலமாக தங்கள் பிரச்னைகளை தீர்த்து கொள்ள வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். போர்கள் பேரழிவை ஏற்படுத்தலாம் என்பதை 2 நாடுகளும் நினைவில் கொள்ள வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 24, 2025, 14:45 [IST]
English summary
Electric vehicles becomes a headache for israel due to war with iran full details
மேலும்... #auto news
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+