எலக்ட்ரிக் வாகனங்களை யூஸ் பண்ணுவதால் இப்படியொரு பிரச்சனை வருமா? புது ஆய்வு முடிவு என்ன சொல்லுது?
பெட்ரோல், டீசல் வாகனங்களை காட்டிலும் எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகமாக மாசு துகள்களை வெளியிடுவதாக ஓர் அதிர்ச்சிக்கர ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. யார் நடத்திய ஆய்வு இது? அப்படியென்றால் இதற்கு என்ன தான் தீர்வு? என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.
உலக வெப்பமயமாதல் நாளுக்கு நாள் பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. ஏனெனில், இது உயிர்களின் வாழ்வாதாரம் என அடிப்படை விஷயத்தில் கை வைப்பதால், பல்வேறு நாட்டு அரசாங்கங்களும் வெப்பமயமாதலை குறைப்பதில் தீவிரமாக உள்ளன. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதும் அதன் ஒரு பகுதியே ஆகும்.

உலக வெப்பமயமாதலுக்கு பெட்ரோல்/ டீசல் என்ஜின் வாகனங்களில் இருந்து வெளிவரும் கார்பன்-டை-ஆக்ஸைடு அடங்கிய புகை முக்கிய காரணமாக விளங்குகிறது. ஆனால், எலக்ட்ரிக் வாகனங்களில் அவ்வாறான புகை எதுவும் வெளிவராததால், சுற்றுச்சூழல் பாதிப்பு இருக்காது என்று சிறிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் இருந்து டாடா மோட்டார்ஸ் வரையில் விளம்பரப்படுத்தி எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்கின்றன.
இந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த எமிஷன்ஸ் அனலடிக்ஸ் (Emissions Analytics) என்ற ஆய்வு நிறுவனம் தனது சமீபத்திய ஆய்வின் மூலம் புதிய உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. எமிஷன்ஸ் அனலடிக்ஸின் முக்கியமான வேலை என்னவென்றால், உலகில் ஏற்படும் உமிழ்வுகளை அளவீடு செய்து அதுகுறித்து விரிவான தகவல்களை வழங்குவதாகும்.

எமிஷன்ஸ் அனலடிக்ஸ் எல்லா விதமான உமிழ்வுகளையும் அறிவியில் முறையில் அளவீடு செய்கிறது. ஆட்டோமொபைல் வாகனங்களில் இருந்து வெளிவரும் அணுக்களின் எண்ணிக்கையை அளவீடு செய்வதில் உலகளவில் நிபுணத்துவம் பெற்ற ஆய்வு நிறுவனமாக எமிஷன்ஸ் அனலடிக்ஸ் விளங்குகிறது. இந்த நிறுவனம் சமீபத்தில், பெட்ரோல், டீசல் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களை கொண்டு ஒரு ஆய்வை மேற்கொண்டது.
இது, வாகனங்களில் இருந்து எந்த அளவிற்கு கார்பன் மாசு உமிழப்படுகிறது என்பதை கண்டறியும் வழக்கமான சோதனை கிடையாது. இயக்கத்தின்போது வாகனங்களில் இருந்து எத்தனை மூலக்கூறுகள் சிதறுகின்றன என்பதை கண்டறியும் ஆய்வு சோதனையாக இதனை எமிஷன்ஸ் அனலடிக்ஸ் மேற்கொண்டது. இந்த ஆய்வு தொடர்பான விபரங்கள் வால் ஸ்ட்ரீட் ஜோர்னல் ஒப்-பெட் (Wall Street Journal op-ed) என்கிற பத்திரிக்கையில் வெளியிடப்பட்டு உள்ளன.

அணுக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்தது தான் மூலக்கூறு என பள்ளி பாடப் புத்தகத்தில் படித்து இருப்பீர்கள். இயக்கத்தின்போது காரின் பாகங்களுக்கு இடையே ஏற்படும் உராய்வுகளால் மூலக்கூறுகள் சிதறுவது வழக்கம். இதனை 'துகள் உமிழ்வு' என்றும் அழைக்கலாம். கார் மட்டுமில்லை எந்தவொரு வாகனத்திலும் இது நடக்கும். எமிஷன்ஸ் அனலடிக்ஸ் நிறுவனம் வாகனத்தின் பிரேக்குகள் மற்றும் டயர்களில் இருந்து உமிழப்படும் மூலக்கூறுகளின் எண்ணிக்கையை மட்டும் அளவீடு செய்து பார்த்தது. அப்போது ஒரு ஆச்சிரியமான முடிவு கிடைத்துள்ளது.
அதாவது, பெட்ரோல்/ டீசல் வாகனங்களை காட்டிலும் எலக்ட்ரிக் வாகனங்களில் இருந்து அதிகளவில் துகள்கள் உமிழப்படுகின்றன என்பதை எமிஷன்ஸ் அனலடிக்ஸ் கண்டறிந்துள்ளது. எலக்ட்ரிக் வாகனங்கள் அதிக எடையில் உருவாக்கப்படுவதால், பெட்ரோல்/ டீசல் வாகனங்களை காட்டிலும் இவற்றில் சுமார் 1,850 மடங்கு அதிக துகள்கள் பிரேக்குகள் மற்றும் டயர்களில் இருந்து உமிழப்படுவதாக இந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அளவில் பெரிய பேட்டரிகளினால் எடை அதிகமாக இருக்கும் எலக்ட்ரிக் வாகனங்களை சுமக்கவும், எலக்ட்ரிக் வாகனங்களில் இயக்க ஆற்றலும், டார்க் திறனும் கண்ணிமைக்கும் நேரத்தில் சக்கரங்களுக்கு செல்வதாலும் வலுவான டயர்கள் தேவைப்படுகின்றன. கச்சா எண்ணெய்யை கொண்டு இந்த டயர்கள் உருவாக்கப்படுவதால், டயர் தேயும்போது நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருள்கள் வெளியேறுவதையும் எமிஷன்ஸ் அனலடிக்ஸ் கண்டுப்பிடித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்களின் பிரேக்குகள் மற்றும் டயர்களில் இருந்து நிறைய துகள்கள் உமிழப்படுவது இல்லையே... இதை ஏன் பெரிய பிரச்சனையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என நீங்கள் கேட்கலாம்? வழக்கமான பெட்ரோல்/ டீசல் வாகனங்களை காட்டிலும் எலக்ட்ரிக் வாகனங்களில் இருந்து சுமார் 1,850 மடங்கு அதிக துகள்கள் வெளிவருவதாக இந்த ஆய்வறிக்கை கூறியிருப்பதை மறந்துவிட வேண்டாம். இது, மாடர்ன் பெட்ரோல் காரின் எக்ஸாஸ்ட்டில் இருந்து வெளிவரும் துகள்களின் எண்ணிக்கையை காட்டிலும் 400 மடங்கு அதிகமாம்.


Click it and Unblock the Notifications









