டோல்கேட்டுக்கு குடுக்கற காசு மொத்தமா மிச்சம்! இனி ஒரு பைசா கூட கட்டணம் இல்ல! மாஸ்டர் பிளானை அமல்படுத்திய அரசு!
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாட்டை அதிகரிக்க தேவையான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பதன் மூலம், கச்சா எண்ணெய் (Crude Oil) பயன்பாட்டை குறைக்க முடியும் என அரசு கருதுகிறது.
அத்துடன் இந்தியாவில் காற்று மாசுபாடு (Air pollution) பிரச்னையையும் குறைக்கலாம் என அரசு நினைக்கிறது. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் தரப்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வழக்கமான பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) வாகனங்களில் இருந்து நிறைய பேர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவார்கள் என்பது அரசின் நம்பிக்கை.

இதன் ஒரு பகுதியாக மஹாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்தில் அதிரடியான திட்டம் ஒன்று தற்போது அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின்படி, மும்பையில் (Mumbai) உள்ள அடல் சேது (Atal Setu) பாலத்தில் இனி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு டோல்கேட் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
அடல் சேது என்பது மும்பையில் உள்ள ஒரு கடல் பாலம் ஆகும். மும்பை-நவி மும்பையை (Navi Mumbai) இணைக்கும் வகையில் இந்த கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த கடல் பாலத்தின் மொத்த நீளம் 21.8 கிலோ மீட்டர்கள் ஆகும். இதன் மூலம் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் (Longest Sea Bridge) என்ற பெருமையை அடல் சேது கொண்டுள்ளது.

அதே நேரத்தில் உலகின் 12வது மிக நீளமான கடல் பாலமாக இது திகழ்கிறது. இப்படி பல்வேறு பெருமைகள் வாய்ந்த அடல் சேது கடல் பாலத்தில் பயணம் செய்ய டோல்கேட் கட்டணம் (Toll Charges) செலுத்துவதில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தற்போது விலக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இன்று (ஆகஸ்ட் 22) முதல் அமலுக்கு வந்துள்ளது.
இது குறித்து லோக்மட் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. டோல்கேட் கட்டணம் செலுத்துவதில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு விலக்கு வழங்கும் திட்டம், கூடிய விரைவில் மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே மற்றும் மும்பை-நாக்பூர் எக்ஸ்பிரஸ்வே ஆகிய சாலைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. எனவே எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்களுக்கு, டோல்கேட் கட்டண செலவு சேமிப்பாக மாறும்.
இது தவிர, மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அனைத்திலும், எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்களுக்கு, டோல்கேட் கட்டணத்தில் சலுகையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அனைத்திலும், எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்கள் 50 சதவீத கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும்.
மஹாராஷ்டிரா மாநில எலெக்ட்ரிக் வாகன கொள்கை, கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டிருந்தபடி, டோல்கேட் கட்டணம் செலுத்துவதில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தற்போது படிப்படியாக சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் பஸ்கள் போன்ற வாகனங்களுக்கு மட்டுமே இந்த சலுகைகள் பொருந்தும். டோல்கேட் கட்டணம் செலுத்துவதில் சலுகைகள் வழங்கப்படும் திட்டத்தில், எலெக்ட்ரிக் சரக்கு வாகனங்கள் சேர்க்கப்படவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ்வேக்கள் போன்ற சாலைகளில் பயணம் செய்யும் வாகன உரிமையாளர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னையே டோல்கேட் கட்டணம்தான். ஆனால் மஹாராஷ்டிரா மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் உரிமையாளர்கள் இனி டோல்கேட் கட்டணம் செலுத்துவதை நினைத்து கவலைப்பட வேண்டியதில்லை.
அம்மாநில அரசின் அதிரடி நடவடிக்கையால், அவர்களுக்கு கணிசமான தொகை இனி சேமிப்பாக மாற போகிறது. எனவே இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு நடவடிக்கைதான் என்பது எங்கள் கருத்து. அத்துடன் இந்த அதிரடி திட்டத்தால், மஹாராஷ்டிரா மாநிலத்தில் இனி எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை உயர்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே பொதுமக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான மாஸ்டர் பிளான்-ஆகவே இது கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








