குஜராத்தை முந்தி, 6வது இடத்தில் நம் தமிழ்நாடு!! மக்களவையில் மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல்- அவரே சொல்லிட்டாரா

மற்ற பகுதிகளை காட்டிலும் இந்தியாவின் மத்தியிலும், தென் மாநிலங்களிலும் தான் அதிகளவில் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்கப்படுவதாக ஓர் புள்ளி விபரம் வெளியாகியுள்ளது. இதுகுறித்தும், இந்தியாவில் இதுவரையில் எத்தனை எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகி உள்ளன என்பதையும் இனி விரிவாக பார்க்கலாம்.

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை மக்களிடத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இதனை உறுதிப்படுத்தும் வகையிலான புள்ளி விபரங்கள் இருந்தால், எலக்ட்ரிக் வாகனங்களின் இந்த வளர்ச்சியை நாம் இன்னும் அமோதிக்கலாம். இந்த நிலையில், இது தொடர்பான அறிக்கை ஒன்றை மத்திய போக்குவரத்து துறை அமைச்சரே வெளியிட்டுள்ளார்.

electric vehicles records in india

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், இந்த அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார். மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியின் இந்த சமீபத்திய அறிக்கை மற்றும் மத்திய அரசாங்கத்தின் வாஹான் இணையத்தள பக்கத்தில் உள்ள விபரங்களை வைத்து பார்க்கும்போது, கடந்த 2023 ஆகஸ்ட் 8ஆம் தேதி வரையில் இந்திய நாட்டில் மொத்தம் 28 இலட்சத்து 30,565 எலக்ட்ரிக் வாகனங்கள் ஆர்டிஓ-இல் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

நம் நாட்டில் 2014ஆம் ஆண்டில் இருந்து எலக்ட்ரிக் வாகனங்கள் ஆர்டிஓ-வில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. முதல் 2014ஆம் ஆண்டில் மொத்தமாகவே வெறும் 2,389 எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன. ஆனால் முழுவதுமாக 8 மாதங்கள் கூட முடியாத இந்த 2023ஆம் ஆண்டில் இதுவரையிலேயே 8 இலட்சத்து 86,959 எலக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. இந்த 2023ஆம் ஆண்டு முடிவதற்குள் நிச்சயமாக இந்த எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்துவிடும்.

electric vehicles records in india

ஏனெனில் கடந்த 2022ஆம் ஆண்டில் 10 இலட்சத்து 24,795 எலக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை கணிசமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, கடந்த 2022ஆம் ஆண்டில் மிக பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த 2022இல் 10,24,795 எலக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு முந்தைய 2021ஆம் ஆண்டில் மொத்தமாகவே 3 இலட்சத்து 31,463 எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே ஆர்டிஓ-இல் பதியப்பட்டு இருந்தன.

ஆதலால் இந்த 2023ஆம் வருடத்தில் இந்த ஆர்டிஓ பதிவு எண்ணிக்கை சுமார் 15 இலட்சத்தை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 20 இலட்சத்தை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இத்தனைக்கும் இதில், இந்தியாவில் உள்ள 27 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் பதிவாகும் எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. தெலுங்கானா மாநிலம் மற்றும் லச்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் பதிவாகுபவை வஹான் இணையத்தளத்தில் பதிவு செய்யப்படுவதில்லை.

electric vehicles records in india

மாநிலங்களை பொறுத்தவரையில், இந்தியாவில் இருப்பதிலேயே உத்தர பிரதேசம் மாநிலத்தில் தான் அதிகளவில் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்கப்படுவதாக ஏற்கனவே கூறியிருந்தோம். இது தொடர்பான செய்தி ஒன்றை ஏற்கனவே நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் செய்தித்தளத்தில் பதிவிட்டு இருந்தோம். உத்தர பிரதேசத்தில் இதுவரையில் 5 இலட்சத்து 74,967 எலக்ட்ரிக் வாகனங்கள் ஆர்டி அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உத்தர பிரதேசத்துக்கு அடுத்து மஹாராஷ்டிரா 3,05,006 எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை உடன் 2வது இடத்திலும், கர்நாடகா 2,48,747 எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை உடன் 3வது இடத்திலும் உள்ளன. இந்த வரிசையில், நம் தமிழ்நாடு 6வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரையில் 1 இலட்சத்து 73,152 எலக்ட்ரிக் வாகனங்கள் ஆர்டிஓ-இல் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த வரிசையில் கடைசி இடத்தில் சிக்கிம் மாநிலம் உள்ளது. சிக்கிமில் இதுவரையில் வெறும் 20 எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு உள்ளன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்த புள்ளி விபரங்களை வைத்து பார்க்கும்போது, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்டவை அடங்கிய இந்தியாவின் மத்திய மாநிலங்களிலும், கர்நாடகா, தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களிலும் தான் அதிகளவில் எலக்ட்ரிக் வாகனங்கள் மக்களால் வாங்கப்படுகின்றன. இந்த எண்ணிக்கையில், குறைந்த வேகத்தில் இயங்கக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அடங்கவில்லை என்பதை மறந்துவிட வேண்டாம். ஏனெனில் 25kmph வேகத்திற்கு மேல் இயங்காத எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஆர்டிஓ-இல் பதிய தேவையில்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 15, 2023, 16:30 [IST]
English summary
Electric vehicles records in india nitin gadkari data provided
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X