வாகனங்களுக்கு இனி பச்சை நிற நம்பர் பிளேட்....ஏன் தெரியுமா?

இனி வாகனங்களுக்கு பச்சை நிற நம்பர் பிளேட் வழங்குவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அது ஏன்? என்பது பற்றிய செய்தியை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

By Arun

6 வகையான நம்பர் பிளேட்கள்

இந்தியாவில் தற்போது 6 வகையான நம்பர் பிளேட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நம்பர் பிளேட்டுக்கும், ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. அதை முதலில் தெரிந்து கொள்ளலாம்.

வாகனங்களுக்கு இனி பச்சை நிற நம்பர் பிளேட்....ஏன் தெரியுமா?

சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்கள்

அதாவது வெள்ளை நிற பின்னணியில் கருப்பு வண்ணத்தில் எழுதப்பட்டிருக்கும் நம்பர் பிளேட்கள், சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்கள் என்பதை குறிக்கின்றன. இந்த நம்பர் பிளேட்தான் இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய நம்பர் பிளேட் கொண்ட வாகனங்களைதான் நாம் சாலைகளில் அடிக்கடி பார்த்திருப்போம்.

வாகனங்களுக்கு இனி பச்சை நிற நம்பர் பிளேட்....ஏன் தெரியுமா?

கமர்ஸியல் பயன்பாட்டிற்கான வாகனங்கள்

மஞ்சள் நிற பின்னணியில் கருப்பு வண்ணத்தில் எழுதப்பட்டிருக்கும் நம்பர் பிளேட்கள், கமர்சியல் பயன்பாட்டிற்கான வாகனங்கள் என்பதை குறிக்கும். டாக்ஸியை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்திய சாலைகளில் 2வது அதிகமாக காண கிடைக்கும் நம்பர் பிளேட்கள் இதுவே.

வாகனங்களுக்கு இனி பச்சை நிற நம்பர் பிளேட்....ஏன் தெரியுமா?

வாடகை வாகனங்கள்

கருப்பு நிற பின்னணியில் மஞ்சள் வண்ணத்தில் எழுதப்பட்டிருக்கும் நம்பர் பிளேட்கள், வாடகைக்கு விடப்படும் வாகனங்களை குறிக்கும். அதாவது ஓட்டுனர் இல்லாமல் தன் தேவைக்கு வாடிக்கையாளரே எடுத்து இயக்கி கொள்ளும் வாகனங்கள்தான் இவை. வாடகை அடிப்படையில் வாடிக்கையாளர் இந்த வாகனத்தை இயக்கி கொள்ளலாம். இத்தகைய வாகனங்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருகிறது.

வாகனங்களுக்கு இனி பச்சை நிற நம்பர் பிளேட்....ஏன் தெரியுமா?

தூதரக வாகனங்கள்

வெளிர் நீல பின்னணியில் வெள்ளை எழுத்துக்களை கொண்டிருக்கும் நம்பர் பிளேட்கள், வெளிநாட்டு தூதரக வாகனங்களை குறிக்கும்.

வாகனங்களுக்கு இனி பச்சை நிற நம்பர் பிளேட்....ஏன் தெரியுமா?

தற்காலிக ரெஜிஸ்ட்ரேஷன் வாகனங்கள்

சிகப்பு நிற பின்னணியில் வெள்ளை நிறத்தில் எழுதப்பட்டிருக்கும் வாகனங்கள், தற்காலிகமாக பதிவு செய்யப்பட்டவை என்பதை குறிக்கும். இந்த தற்காலிக பதிவு ஒரு மாதத்திற்கு பொருந்தும். ஆனாலும் சில மாநிலங்களில் தற்காலிக நம்பர் பிளேட்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

வாகனங்களுக்கு இனி பச்சை நிற நம்பர் பிளேட்....ஏன் தெரியுமா?

ராணுவ வாகனங்கள்

இந்திய ராணுவ பயன்பாட்டிற்கான வாகனங்கள், பிரத்யேக எண்களை கொண்டதாக இருக்கும். இதில், முதல் அல்லது மூன்றாம் எழுத்தில் மேல் நோக்கி அம்புக்குறி இடப்பட்டிருக்கும்.

வாகனங்களுக்கு இனி பச்சை நிற நம்பர் பிளேட்....ஏன் தெரியுமா?

வருகிறது பச்சை நிற நம்பர் பிளேட்

இதனிடையே எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பச்சை நிற நம்பர் பிளேட் வழங்குவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

வாகனங்களுக்கு இனி பச்சை நிற நம்பர் பிளேட்....ஏன் தெரியுமா?

பச்சை ப்ளஸ் வெள்ளை

இதன்படி சொந்த பயன்பாட்டிற்கான தனியார் எலக்ட்ரிக் வாகனங்கள், பச்சை நிற பின்னணியில் வெள்ளை எழுத்துக்களுடன் நம்பர் பிளேட்டை கொண்டிருக்கும்.

வாகனங்களுக்கு இனி பச்சை நிற நம்பர் பிளேட்....ஏன் தெரியுமா?

பச்சை ப்ளஸ் மஞ்சள்

அதே நேரத்தில் கமர்சியல் பயன்பாட்டிற்கான எலக்ட்ரிக் வாகனங்கள், பச்சை நிற பின்னணியில் மஞ்சள் நிற எழுத்துக்கள் அடங்கிய நம்பர் பிளேட்டை கொண்டிருக்கும். இதன்மூலம் எலக்ட்ரிக் வாகனங்கள் தனி அடையாளத்துடன் சாலைகளில் வலம் வரும்.

வாகனங்களுக்கு இனி பச்சை நிற நம்பர் பிளேட்....ஏன் தெரியுமா?

எகோ ப்ரென்ட்லி

எலக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் எகோ பிரெண்ட்லியாக இருக்கும் என்பதால், பச்சை வண்ணம் அளிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

வாகனங்களுக்கு இனி பச்சை நிற நம்பர் பிளேட்....ஏன் தெரியுமா?

இன்னும் சலுகைகள்

எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன்படி எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு பார்க்கிங் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிப்பது, டோல்கேட்களில் சாலை வரியில் இருந்து விலக்கு அளிப்பது உள்ளிட்டவற்றுக்கான வழிகாட்டு வரைவையும் நிதி ஆயோக் அமைப்பு தயாரித்து வருகிறது.

வாகனங்களுக்கு இனி பச்சை நிற நம்பர் பிளேட்....ஏன் தெரியுமா?

டாட்டா, மகேந்திரா தீவிரம்

தற்போது டாட்டா மோட்டார்ஸ் மற்றும் மகேந்திரா ஆகிய நிறுவனங்கள், தனியார் மற்றும் கமர்சியல் பயன்பாட்டிற்கான எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதில் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Electric Vehicles To Get Green Number Plates In India. read in tamil
Story first published: Thursday, May 10, 2018, 14:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X