பெட்ரோல் வண்டியை வாங்க ஒருத்தரும் இருக்க போறது இல்ல! இன்னும் ஆறே மாசம் தான்... சொல்லி வைத்து அடிக்க போறாங்க!

எலக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles)-ஐ சார்ந்துதான் எதிர்காலத்தில் போக்குவரத்து இருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அதற்கு இடையில் சிஎன்ஜி (CNG), ஹைப்ரீட் (Hybrid) போன்ற எரிபொருள்களில் இயங்கக்கூடிய வாகனங்களையும் முடிந்தவரையில் விற்பனை செய்வோம் என்கிற ஐடியாவில்தான் ஆட்டோமொபைல் (Automobile) நிறுவனங்கள் தற்போது செயல்படுகின்றன. ஏனெனில், நேரடியாக பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதற்கு மக்கள் தயங்குவதால், கொஞ்சம் சுற்றிக்கொண்டு எலக்ட்ரிக் வாகனங்களின் போக்குவரத்துக்கு வர வேண்டியுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க இப்போதும் மக்கள் சிலர் தயங்குவதற்கு முக்கிய காரணம், நாடு முழுவதும் சார்ஜிங் வசதி இல்லாதது ஆகும்.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு இப்போதுதான் மெல்ல மெல்ல மார்க்கெட் அதிகரித்து வருகிறது. இதனால், உடனடியாக பெரிய தொகையை எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் கட்டமைப்பிற்காக பயன்படுத்த ஒருபக்கம் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தயக்கம் காட்டுகின்றனர். இவ்வாறு, விநியோகிப்பவர் மற்றும் வாடிக்கையாளர் என இருவரிடமும் தயக்கங்கள் நிலவுவதினாலேயே எலக்ட்ரிக் வாகனங்களின் புரட்சி மெதுவாக நடந்து வருகிறது.

electric vehicles as petrol vehicles

எதாவது ஒருபக்கம் தயக்கத்தை உடைத்தெறிந்து தைரியமாக எலக்ட்ரிக் வாகனங்களுக்காக இறங்கினால் மட்டுமே இந்த புரட்சி வேகமெடுக்கும். எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மக்கள் தயக்கம் காட்டுவதற்கு மற்றொரு காரணம், அவற்றின் அதிகப்படியான விலை ஆகும். எடை குறைவானவை ஆக இருப்பினும் எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்குவதற்கு அதிக செலவாகிறது.

இதனை ஈடுச்செய்ய வேறு வழியில்லாமல் அவற்றின் விலைகளை பெட்ரோல், டீசல் வாகனங்களை காட்டிலும் அதிகமாக நிர்ணயிக்க வேண்டி உள்ளது. ஆனால், இன்னும் 6 மாதங்களில் எலக்ட்ரிக் வாகனங்களின் விலைகள் பெட்ரோல் வாகனங்களுக்கு இணையாக வந்துவிடும் என மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

electric vehicles as petrol vehicles

தலைநகர் டெல்லி (Delhi)-இல் பிரகாதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற 32வது ஒருங்கிணைந்த இந்தியா மாநாடு மற்றும் 10வது ஸ்மார்ட் சிட்டிகள் இந்தியா எக்ஸ்போவில் கலந்துக் கொண்டப்போது இதை அவர் தெரிவித்து இருந்தார். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யாமல், செலவு குறைந்த மற்றும் செயல்திறன் மிகுந்த, மாசு ஏற்படுத்தாத உள்நாட்டு உற்பத்திகளை பெருக்குவதுதான் அரசாங்கத்தின் கொள்கை என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் (uttarakhand) மாநில தலைநகர் டேராடூன் (Dehradun) வரையிலான 212கிமீ தொலைவிற்கான அதிவிரைவுச்சாலை இன்னும் 3 மாதங்களில் நிறைவு பெற்றுவிடும் என தெரிவித்தவர், இந்தியாவை உலகின் 3வது மிகப்பெரும் பொருளாதார நாடாக மாற்ற உள்கட்டமைப்பு துறையை மேம்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சிறந்த தரமான சாலைகளை அமைப்பதன் மூலம், பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வது எளியதாகுவதுடன், அவற்றிற்கான செலவு குறையும் எனவும் தெரிவித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இதன் மூலமாக விலை உயர்வுகளை கட்டுப்படுத்தலாம் எனவும் மறைமுகமாக தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் சிட்டி மற்றும் ஸ்மார்ட் போக்குவரத்து திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருவதால், இந்தியாவின் எதிர்கால பொருளாதாரம் சிறந்த நிலையில் இருப்பதாக அமைச்சர் நம்பிக்கை அளித்துள்ளார்.

electric vehicles as petrol vehicles

அதிவிரைவான போக்குவரத்து முறையை மின்சாரத்தின் உதவியுடன் வழங்க மத்திய அரசு தயாராகி வருவதாக கூறும் அமைச்சர் நிதின் கட்கரி, சாலை கட்டுமான பணிகளுக்கான செலவுகளை குறைக்க புதிய தொழிற்நுட்பங்களையும், கண்டுப்பிடிப்புகளையும் ஊக்கப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கிவந்த மானியத்தை கடந்த 2024ஆம் ஆண்டில் கணிசமாக மத்திய அரசு குறைத்துக் கொண்டது.

2019ஆம் ஆண்டில் எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியையும், விற்பனையையும் ஊக்கப்படுத்தும் விதமாக FAME திட்டத்தின் 2-கட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் சார்பில் குறிப்பிட்ட தொகை மானியமாக வழங்கப்பட்டு வந்தது. அதில், எலக்ட்ரிக் 2-வீலர்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கான மானியத்தை கடந்த 2024ஆம் ஆண்டில் மத்திய அரசு குறைத்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்துவதற்கான மானியம் குறைக்கப்பட்ட போதிலும், கடந்த ஆண்டில் வேறொரு புதிய திட்டத்தை எலக்ட்ரிக் 2-வீலர்களின் விற்பனைக்காக மத்திய அரசு கொண்டுவந்தது. இவ்வாறு, வெவ்வேறான திட்டங்கள் மூலமாக கடந்த பல வருடங்களாகவே எலக்ட்ரிக் வாகனங்களை ஊக்கப்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 20, 2025, 17:36 [IST]
English summary
Electric vehicles will be equal price of petrol vehicles says union minister nitin gadkari
மேலும்... #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X