பெட்ரோல், டீசலை விட மின்சார ஆற்றல் தான் இந்தியாவிற்கு ஆபத்து... மெர்சிடிஸ் சொல்லும் உஷார்..!!

பெட்ரோல், டீசலை விட மின்சார ஆற்றல் தான் இந்தியாவிற்கு ஆபத்து... மெர்சிடிஸ் சொல்லும் உஷார்..!!

By Azhagar

சுற்றுச்சூழலை காக்கவும், காற்று மாசுப்படுதலை குறைக்கவும் எதிர்கால வாகன துறையை மின்சார ஆற்றலுக்கு மாற்ற பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.

மின்சார வாகன பயன்பாடு வந்தாலும் பிரயோஜனம் இல்லை..!!

வாகன புகை அதிகரிப்பை தடுக்க மின்சார ஆற்றலுக்கு மாறுவது தான் நிரந்தர தீர்வா..? என்ற விமர்சனம் எழுந்து வரும் சூழலில், அதற்கு எண்ணை ஊற்றுவது போல ரோலான்ட் ஃபால்ஜர் என்பவர் பேசியுள்ளார்.

Recommended Video

Bangalore City Police Use A Road Roller To Crush Loud Exhausts
மின்சார வாகன பயன்பாடு வந்தாலும் பிரயோஜனம் இல்லை..!!

அதாவது இந்திய வாகன துறை மின்சார ஆற்றலுக்கு மாறினால் பெட்ரோல், டீசல் எரிவாயுக்களை விட அதிக காற்று மாசுவை அதிகரிக்கும் என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறார் இவர்.

மின்சார வாகன பயன்பாடு வந்தாலும் பிரயோஜனம் இல்லை..!!

இன்றைய ஆட்டோ துறையை பரபரப்பிற்கு உள்ளாக்கி இருக்கும் இந்தரோலான்ட் ஃபால்ஜர், யார் இவர் என்பது பலரது கேள்வியாக இருக்கும். இவர் தான் இந்தியாவில் இயங்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திற்கான தலைமை இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி.

மின்சார வாகன பயன்பாடு வந்தாலும் பிரயோஜனம் இல்லை..!!

இந்தியாவில் 50% மின்சாரம் என்பது நிலக்கரியில் இருந்தே பெறப்படுகிறது. நிலக்கரி பெறுவதும் பெரிய காற்று மாசுவை உருவாக்கூடிய பணி தான். ஒரு காற்று மாசு குறைப்பாட்டில் இருந்து தான் மின்சார கிடைக்கிறது.

மின்சார வாகன பயன்பாடு வந்தாலும் பிரயோஜனம் இல்லை..!!

வாகன துறையை மின்சார ஆற்றலுக்கு மாற்றிவிட்டால், தேவையை மீறி, ஆட்டோ துறைக்கான மின்சாரத்தை அரசு கூடுதலாக உருவாக்க நேரிடும்.

அதற்காக நிலக்கரியின் தேவை பன்மடங்கு அதிகரிக்கும். அதன்காரணமாக காற்று மாசு கூடுமே தவிர குறையாது என்கிறார் ரோலான்ட் ஃபால்ஜர்.

மின்சார வாகன பயன்பாடு வந்தாலும் பிரயோஜனம் இல்லை..!!

மின்சார ஆற்றல் என்பது சுற்றுச்சூழலை பாதிக்காத முறையில் உருவாக்கப்பட்டால், மின்சார வாகன பயன்பாடு இந்தியாவில் வெற்றிக்கரமாக அமையும் என்பது இவரது கருத்து.

மின்சார வாகன பயன்பாடு வந்தாலும் பிரயோஜனம் இல்லை..!!

இந்தியாவில் 2030ம் ஆண்டிற்குள் வாகன துறை 100% மின்சார ஆற்றலுக்கு மாற்ற இந்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

மின்சார வாகன பயன்பாடு வந்தாலும் பிரயோஜனம் இல்லை..!!

எதன் அடிப்படையில் இந்த திட்டம் இந்தியாவில் சாத்தியப்படுத்தப்பட உள்ளது என்று கேள்வி எழுப்புகிறார் ஃபால்ஜர்.

குறிப்பாக மின்சார ஆற்றலுக்கு வாகன துறையை மாற்ற சரியான தொழில்நுட்பம் எது என இந்திய அரசு கண்டறிந்துள்ளதா..??

மின்சார வாகன பயன்பாடு வந்தாலும் பிரயோஜனம் இல்லை..!!

மணிக்கு 100 கி.மீ வேகம் தரக்கூடிய காரை உருவாக்க பல்வேறு நிலக்கரி அமைப்புகளை பெற்ற நிலங்கள் முற்றிலும் மாசாகக்கூடும்.

2030ம் ஆண்டிற்கு வாகன துறை அனைத்து மின்சார மயம் என்ற கொள்ளைக்கு ஏற்ப இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை தொடங்கியுள்ளது.

மின்சார வாகன பயன்பாடு வந்தாலும் பிரயோஜனம் இல்லை..!!

குறிப்பாக, நாசிக்கில் மின்சார வாடகை கார்கள் மற்றும் பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. பேட்டரி சார்ஜிங் நிலையங்களும் அங்கு அமைக்கப்பட்டு வருகின்றன.

மின்சார வாகன பயன்பாடு வந்தாலும் பிரயோஜனம் இல்லை..!!

இந்தியாவில் வாகன துறையில் ஜாம்பவான்களாக உள்ள நிறுவனங்கள், மின்சார ஆற்றல் பெற்ற வாகனங்களை தயாரிக்க களமிறங்கிவிட்டனர்.

மின்சார வாகன பயன்பாடு வந்தாலும் பிரயோஜனம் இல்லை..!!

இதில் குறிப்பாக டாடா, மஹிந்திரா மற்றும் மாருதி போன்ற நிறுவனங்கள் 2020ம் ஆண்டிற்குள் தங்களது மின்சார கார்களை வெளிக்கொண்டு வரும் முடிவில் உள்ளன.

மின்சார வாகன பயன்பாடு வந்தாலும் பிரயோஜனம் இல்லை..!!

இந்தியாவில் காற்று மாசு குறைபாடு டெல்லி உட்பட பல்வேறு நகரங்களில் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒரே தீர்வாக மின்சார வாகன பயன்பாடு மட்டுமே உள்ளது.

மின்சார வாகன பயன்பாடு வந்தாலும் பிரயோஜனம் இல்லை..!!

மின்சார வாகன கட்டமைப்பு காற்று மாசு குறைப்பாட்டிற்கு ஒரு தீர்வாக அமையும் என்பது அரசு உட்பட பொதுமக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

மின்சார வாகன பயன்பாடு வந்தாலும் பிரயோஜனம் இல்லை..!!

இந்நிலையில் மெர்சிடிஸ் பென்ஸ் தலைமை இயக்குநர் ரோலான்ட் ஃபால்ஜர் இந்திய அரசின் மின்சார வாகன கட்டமைப்பு மீது எழுப்பியுள்ள இந்த கேள்விகள், ஆட்டோ துறையில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Electric Vehicles Could Be Worse Than Petrol And Diesel Cars: Mercedes-Benz India CEO. Click for Details...
Story first published: Monday, December 11, 2017, 18:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X