சுங்கசாவடிகளை எல்லாம் ஒரே வருசத்துல தூக்க போறாங்க! மத்திய அமைச்சர் சொன்ன வேற லெவல் ஐடியா!
தற்போது இந்தியா முழுவதும் உள்ள சுங்க சாவடிககளை முழுமையாக எலெக்ட்ரானிக் சுங்கசாவடிகளாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதன்படி அடுத்த 1 ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள சுங்கசாவடிகள் எல்லாம் நீக்கப்பட்டு எலெக்ட்ரானிக் சுங்கசாவடிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வேலைகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் பாராளுமன்ற கேள்வி நேரத்தின் போது இந்தியாவில் உள்ள சுங்கசாவடிகள் குறித்த சில விரிவானவிபரங்களை கூறினார். அதன் படி அடுத்த ஓராண்டிற்குள் இந்தியாவில் உள்ள சுங்கசாவடிகளை எல்லாம் நீக்கிவிட்டு எலெக்ட்ரானிக் சுங்கசாவடிகள் வரப்போகிறது எனவும் இந்த திட்டம் ஏற்கனவே துவங்கிவிட்டது ெனவும் 10 இடங்களில் சோதனை முயற்சியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ள சுங்சாவடி முறையில் நீங்கள் ஃபாஸ்ட்டேக் கார்டில் ரீசார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் ஒவ்வொரு சுங்கசாவடியிலும் உங்கள் வாகனம் நிறுத்தப்பட்டு கார்டு ஸ்கேன் செய்யப்படும். இந்த கார்டில் உள்ள பணம் கழிக்கப்பட்டு நீங்கள் சுங்கசாவடியை கடந்து செல்ல அனுமதி வழங்கப்படும். இந்தநடை முறைதான் இருக்கிறது. இதி்ல வாகனத்தை நிறுத்தி கார்டை ஸ்கேன் செய்வதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது.
இந்நிலையில் சுங்கசாவடிகளில் சில முக்கியமான மாற்றங்கள் வரப்போகிறது அதன்படி சுங்கசாவடிகளில் வாகனங்களின் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்யும் கருவி பொருத்தப்படும். இதனால் வாகம் சுங்கசாவடியை கடந்து செல்லும் போது இந்த கேமரா வாகனத்தின் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்து அந்த வாகனம் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும்.

இந்த நடைமுறைக்காக வாகனத்தை சுங்சாவடியில் நிறுத்த வேண்டிய தேவை கிடையாது. சுங்கசாவடியை வாகனங்கள் தொடர்ந்து கடந்து செல்ல முடியும். இது முற்றிலுமாக தானியங்கி முறையில் செயல்படும். இந்த நடைமுறையில் வாகனங்களை தடுத்து நிறுத்தும் கம்பிகள் சுங்கசாவடியில் இருக்காது. வாகனம் வேகமாக சென்றாலும் அதையும் சரியாக படம் பிடித்துபணம் கழித்துக்கொள்ளப்படும்.
இந்த முறை தற்போது இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள சுங்கசாவடிகளில் சோதனை செய்யப்படுகிறது. இது வெற்றி பெறும் பட்சத்தில் இது இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும். இதுநடைமுறையில் உள்ள இடங்களில் போக்குவரத்து நெருக்கடி குறைந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றனர். இதனால் போக்குரவத்து நெருக்கடி மட்டுமல்லாமல் தேவையில்லாத எரிபொருள் செலவு, மாசு வெளியேற்றம் உள்ளிட்டவையும் குறையும்.

இந்தியாவில் சுங்கசாவடி கட்டணம் நீண்ட ஆண்டுகளாக அதிகமாக இருப்பதாக மக்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வருடாந்திர பாஸ் முறை அமலுக்கு வந்தது. இதை பயன்படுத்தி சுங்சாவடியை கடக்க ஒரு முறைக்கு வெறும் ரூ15 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதாவது ஆண்டிற்கு ரூ3000 கட்டணம் செலுத்தி 200 முறை சுங்கசாவடிகளை கடந்து செல்ல முடியும். இது மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கிறது. இது தனிநபர் வாகனங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. கமர்ஷியல் மற்றும் போக்குரவத்து வாகனங்களுக்கு இது பொருந்தாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சுங்கசாவடிகளால் பல பிரச்சனைகள்இருக்கிறது. இதில் முக்கியமானது நேர விரையம். இந்தியாவில் தொழிற்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சுங்சாவடிகளில் மாற்றம் வ்நதால் நிச்சயம் இது மிகப்பெரிய அளவில் மக்களுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்! இதுகுறித்த உங்கள் கருத்துக்களை காணலாம் வாருங்கள்.


Click it and Unblock the Notifications









