அம்மா ரொட்டிக்கு மாவு பெசையுறத போல ஆட்டோ, ஸ்கூட்டரை அடித்து துவம்சம் செய்த யானை! வீடியோல பாக்கும்போதே பதறுது!
மதம் பிடித்த யானை ஒன்று அதன் கண் முன் பட்ட வாகனங்கள் அனைத்தையும் அடித்து துவம்சம் செய்யும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்த சம்பவம் எங்கு அரங்கேறியது? எத்தனை வாகனங்கள் யானையால் துவம்சம் செய்யப்பட்டன? என்பதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
யானைக்கு மதம் பிடித்துவிட்டால் அதைக் கட்டுப்படுத்துவது இயலாத ஒன்று. ஏன், அந்த யானையின் பாகனே நினைத்தாலும் அதை செய்ய முடியாது. கண் முன் நிற்பது பாசமான பாகனாக இருந்தாலும் அவர்களையும் மதம் பிடித்த யானைகள் சில நேரங்களில் தாக்கிவிடுகின்றன. சூழல் இத்தகையானதாக இருக்க வாகனங்கள் நிலைமையைப் பற்றி சொல்ல வேண்டாம்.

இந்த நிலையிலேயே மதம் பிடித்த யானையின் முன் வாகனங்கள் இருந்தால், அந்த வாகனங்கள் என்ன கதியாகும் என்பதை வெளிக் காட்டக் கூடிய புதிய வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. இந்த சம்பவம் நம்முடைய அண்டை மாநிலமான கேரளாவிலேயே அரங்கேறி இருக்கின்றது. கேரளாவில் கோயில் மற்றும் பொது திருவிழாக்களின்போது யானைகள் பயன்படுத்துவது வழக்கம்.
அவ்வாறு யானை பயன்படுத்தப்பட்டபோதே அதற்கு மதம் பிடித்ததாகக் கூறப்படுகின்றது. அந்த யானையே அதன் கண்களில் பட்ட அனைத்து வாகனங்களையும் தூக்கி எறிந்து துவம்சம் செய்திருக்கின்றது. குறிப்பாக, பயணிகள் ஆட்டோ ஒன்றை பரோட்டாவிற்கு மாஸ்டர் மாவு பிசைவதைப் போல அடித்து, உதைத்து துவம்சம் செய்திருக்கின்றது.

இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. முதலில் இரண்டு சக்கர வாகனங்களைப் பதம் பார்த்த அந்த யானை, இதன் பின்னரே ஆட்டோக்களை நொறுக்கி எடுக்கத் தொடங்கியது. ஒரு பயணிகள் ஆட்டோ மற்றும் ஒரு லோடு ஆட்டோ என இரண்டு ஆட்டோக்கள் யானையால் அடித்து துவம்சம் செய்யப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர, மூன்றுக்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்களை யானை தூக்கி போட்டு பந்தாடி இருக்கின்றது. குறிப்பாக, ஆட்டோவிற்கு முன்னர் ஓர் டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்டை அது பந்தாடியது பார்ப்போரை அதிர செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. ஆகையால், அந்த வாகனத்தின் நிலை தற்போது மிகவும் மோசமாகி இருக்கின்றது.

இதைவிட ஆட்டோவின் நிலைமை மிக மிக மோசமானதாகக் காட்சியளிக்கின்றது. பர்கரில் இரண்டு துண்டுகளாக இருக்கும் பன்னின் அடித் துண்டு மட்டும் மிஞ்சியிருப்பதைப் போல, அந்த ஆட்டோவின் நிலைமை தற்போது மாறி இருக்கின்றது. இந்த சம்பவத்தால் அந்த ஆட்டோவின் உரிமையாளர் பேரிழப்பைச் சந்தித்து இருக்கின்றார்.
மீட்டெடுக்க முடியாத நிலைக்கு அந்த ஆட்டோவை யானை அடித்து நொருக்கி இருக்கின்றது. அதேவேளையில், யானையின் மேலேயும் ஒரு சிலர் அமர்ந்திருந்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை என கூறப்படுகின்றது. இதற்கு முன்னதாகவும் இதுமாதிரியான சம்பவங்கள் கேரளாவில் அரங்கேறி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
மேலும், இதுமாதிரியான நிகழ்வுகளில் இருந்து உங்களுடைய வாகனங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றால் ஒரே வழிதான் இருக்கின்றது. சொந்த வாகனத்தில் நிகழ்ச்சிக்கு செல்லாமல், பொது போக்குவரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லை எனில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இருந்து வேறு இடத்தில் உள்ள பாதுகாப்பான இடங்களைப் பயன்படுத்தி அங்கு வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்தால் மட்டுமே இதுமாதிரியான எதிர்பாரா சம்பவங்களில் இருந்து உங்களுடைய வாகனங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். வன விலங்குகள் மிகவும் ஆபத்தானவை அவற்றின் முன் எதுவாக இருந்தாலும் வெறும் தூசிதான் என்பதையும் இந்த நிகழ்ச்சி நமக்கு எடுத்துரைத்திருக்கின்றது. கேரளாவில் இதுமாதிரியான சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுவது சோகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: யானைகள் கூட்டம் கூட்டமாக வாழக் கூடியவைதான். அதேவேளையில், அவை அதிக மக்கள் நெரிசலையும், வாகனங்களின் அதிக இரைச்சலையும் ஏற்றுக் கொள்ளாது. இதன் விளைவாகவே சில நேரங்களில் யானைகள் மிரண்டு மக்கள் கூட்டத்திற்குள் புகுந்துவிடுகின்றன. எனவே அமைதியான சூழலில் அவற்றை வைப்பதே நல்லது என்கின்றனர் விலங்கு நல ஆர்வலர்கள்.


Click it and Unblock the Notifications









