பிரேக் டவுனாகி சாலையோரத்தில் நின்ற டிரக்.. தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்த காட்டு யானை! இணையத்தில் வைரலாகும் வீடியோ

பிரேக் டவுனாகி சாலையோரத்தில் நின்றால் நண்பர்கள் வந்து உதவி செய்ய யோசிக்கும் இந்த காலத்தில் காட்டு யானை ஒன்று தாமாக முன் வந்து வாகனத்தை ஸ்டார்ட் செய்ய உதவி செய்திருக்கின்றது. இதுகுறித்து இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

உணவை தேடி காட்டை விட்டு வெளியே வரும் விலங்குகள் மனிதர்களுக்கு இடையூறாக இருக்கும். பெரும்பாலான நேரங்களில் தான் உண்டு தன் வேலை உண்டு என்றே அந்த விலங்குகள் கடந்த செல்ல முயற்சிக்கும். ஆனால் நம்ம ஆட்கள் செல்ஃபி எடுக்கிறேன், வீடியோ எடுக்கிறேன் உணவு கொடுக்கின்றேன் என்கிற பெயரில் அந்த விலங்குகளை சீண்ட தொடங்கிவிடுகின்றனர்.

Wild elephant helps push start truck

இதன் விளைவு மனித - மிருக மோதலில் கொண்டு போய் விடுகின்றது. இந்த நிலையிலேயே சாலையோரத்தில் பிரேக் டவுன் ஆகி நின்ற டிரக்கை ஸ்டார்ட் செய்ய காட்டு யானை ஒன்று உதவி இருப்பது குறித்த தகவல் இணையத்தின் வாயிலாக வெளியாகி உள்ளது.

இந்த தகவலோடு சேர்த்து யானை டிரக்கை ஸ்டார்ட் செய்ய உதவும் வீடியோவும் இணையும் பகிரப்பட்டு வருகின்றது. காட்டு யானையின் இந்த செயல் பலரின் கவனத்தையும், மனதையும் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. விலங்குகளுக்கு எதிராக மனிதர்கள் பலர் மனிதம் மரணிக்கின்ற வகையில் செயல்பட்டு வரும் நிலையில், மிருகங்கள் சில அதன் மிருக தனத்தை மறந்து இதுபோன்று செயல்களில் ஈடுபடுவது அவற்றின் மீதான பார்வையை மாற்றச் செய்யும் வகையில் இருக்கின்றது.

Elephant hepls to start truck

இந்த சம்பவம் இந்தியாவில் நடைபெற்றதல்ல. அண்டை நாடான இலங்கையில் நடைபெற்றது. அந்நாட்டின் வடக்கு மாகாணத்திலேயே இந்த விசித்திர நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. பொதுவாக, எந்தவொரு வாகன ஓட்டியும் வனவிலங்கு தங்களுக்கு அருகிலேயோ அல்லது எதிரிலேயோ இருக்கும் என்றால் அதைவிட்டு சில அடி தூரம் தள்ளியே இருக்க விரும்புவார்கள்.

அவை எப்போது எப்படி எதிர்வினையாற்றும் என்பது யாராலும் கணிக்க முடியாதது. இதனால்தான் மிருகங்களிடம் இருந்து சற்று விலகியே இருக்க எவராக இருந்தாலும் விரும்புவர். இந்த மாதிரியான சூழலிலேயே காட்டு யானை பிரேக் டவுனாகி நின்றுக் கொண்டிருந்த டிரக்கிற்கு ஜம்ப்-ஸ்டார்ட் செய்ய உதவி இருக்கின்றது.

அதாவது, வாகனத்தை தள்ளிவிட்டு ஸ்டார்ட்டாக உதவி செய்திருக்கின்றது. இந்த யானை தள்ளிவிடவோ அந்த வாகனம் ஸ்டார்ட் ஆகி இருக்கின்றது. அது தள்ளி விடவில்லை என்றால் வேறு வாகனம் வந்து டோவ் செய்யும் வரை அந்த வாகனம் அந்த காட்டுப் பகுதியிலேயே நின்றுக் கொண்டிருந்திருக்க வேண்டி இருந்திருக்கும்.

ஆனால், எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத உதவியை அந்த யானை செய்திருக்கின்றது. இதுபோன்று நடு வழியில் பிரேக் டவுன் ஆகும் வாகனங்களை மீட்டெடுக்க ரோட் சைடு அசிஸ்டன்ஸ் பெரும் உதவியாக இருக்கின்றன. வாகன உற்பத்தி நிறுவனங்கள் அல்லது இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து இதற்கான திட்டத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

பல நிறுவனங்கள் உடனடி ரோடு சைடு அசிஸ்டன்ஸுக்கு உடனடி ரெஸ்பான்ஸை வழங்கும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். வாகனம் எங்கு பிரேக் டவுன் ஆகினாலும் உடனடியாக அவர்களுக்கான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். பொதுவாக வாகனங்கள் சாலையோரத்திற்கு உணவுகளை தேடியே வருகின்றன. கரும்பு மற்றும் காய்கறிகள் போன்றவற்றை ஏற்றி வரும் லாரிகளை மடக்கி அவற்றில் இருந்து உணவை எடுக்கும் நோக்கில் அவை சாலையோரத்தில் நிற்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதுமாதிரியான சூழல்களில் வாகனத்தை விட்டு வெளியே வருவதை தவிர்த்துவிடுவது நல்லது. அதேவேளையில், உணவு தருவதையும் தவிர்க்க வேண்டும். ஒரு முறை உணவு சாலையோரத்தில் கிடைக்கும் என தெரிந்துவிட்டால் அந்த விலங்கு பின்னர் அடிக்கடி சாலைக்கு வர தொடங்கிவிடும். இது அதற்கும் சரி, வாகன ஓட்டிகளுக்கும் சரி பேராபத்தை ஏற்படுத்தும். எனவேதான் சாலையோரங்களில் இருக்கும் விலங்குகளுக்கு உணவளிப்பதை அறவே தவிர்ப்பதே நல்லது.

Article Published On: Thursday, August 17, 2023, 15:00 [IST]
English summary
Elephant hepls to start brake down truck video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+