இந்த கார்களில் பார்த்தவுடன் என்னை கவர்ந்த விஷயங்கள்!!

Posted By:

ஒரு காரை பார்த்தவுடன் அதிலிருக்கும் சில வெளிப்புற டிசைன் அம்சங்கள் நம்மை வெகுவாக கவர்ந்துவிடும்.

அதுபோன்று, சில கார் மாடல்களில் நான் கவனித்த வரையில், என்னை மிகவும் கவர்ந்த பிரத்யேகமான விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் பகிர்ந்து கொள்கிறேன்.

01. டாடா ஸெஸ்ட்

01. டாடா ஸெஸ்ட்

டாடா ஸெஸ்ட் காரின் பகல்நேர ரன்னிங் விளக்குகள் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. பல கார்களில் ஹெட்லைட்டை ஒட்டியும், படுக்கைவாட்டில் வளைவுநெளிவுகளுடன் இருக்கும். ஆனால், டாடா ஸெஸ்ட் காரில் சற்று சாய்ந்து நிற்பது போல் இருப்பதுடன், அந்த காரின் தோற்றக் கவர்ச்சியை மிகச்சிறப்பாக எடுத்தியம்புகிறது.

02. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

02. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ காரின் பானட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் ஏர்இன்டேக் ஸ்கூப் என்னை கவர்ந்த அம்சம். அந்த காரின் கம்பீரத்திற்கும், முன்பக்க தோற்றத்திற்கு வலு சேர்ப்பதிலும் இந்த பானட் ஸ்கூப்பிற்கு முக்கிய பங்கு உண்டு.

03. ஹூண்டாய் எலைட் ஐ20

03. ஹூண்டாய் எலைட் ஐ20

மிக நேர்த்தியான டிசைன் கொண்ட கார் மாடல்களில் ஒன்று ஹூண்டாய் எலைட் ஐ20 கார். இந்த காரின் ஒட்டுமொத்த டிசைனும் சூப்பர். ஆனாலும், இந்த காரில் என்னை பெரிதும் கவர்ந்த விஷயம் எலைட் ஐ20 காரின் பின்புற டெயில் லைட்டுகளின் டிசைன்தான். சொகுசு கார்களை தோற்கடிக்கும் ஓர் சிறப்பான டிசைன் அது.

04. டாடா போல்ட்

04. டாடா போல்ட்

டாடா போல்ட் காரின் புரொஜெக்டர் ஹெட்லைட் டிசைன் மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த காரின் முகப்புக்கு மிகவும் நேர்த்தியான தோற்றத்தையும், அழகையும் வழங்குகிறது.

05. ஃபோக்ஸ்வேகன் போலோ

05. ஃபோக்ஸ்வேகன் போலோ

இந்த செய்தியை துவங்குவதற்கு அடிப்படை காரணமே ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் ரியர் வியூ கண்ணாடிகளின் டிசைன்தான். தினசரி சாலையில் செல்லும்போது போலோ காரின் ரியர் வியூ கண்ணாடிகளை கண்டு மயங்காத நாள் ஒன்று இல்லை எனலாம்.

 06. ரெனோ டஸ்ட்டர்

06. ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டரில் என்னை மிக மிக கவர்ந்த விஷயம் வீல் ஆர்ச்சுகள். அந்த எஸ்யூவியின் கம்பீரத்தை பன்மடங்கு மேலே கொண்டு சென்றதற்கு அதன் வீல் ஆர்ச்சுகள்தான் மிக முக்கிய காரணம்.

07. டொயோட்டா லிவா டிஆர்டி

07. டொயோட்டா லிவா டிஆர்டி

டொயோட்டா லிவா டிஆர்டி ஸ்போர்ட்டிவா காரின் அலாய் வீல்கள் டிசைன் மிகவும் கவர்ந்த ஒன்று. 6 ஸ்போக்குள் கொண்ட 15 இஞ்ச் அலாய் வீல்களின் டிசைன் சிம்பிளி சூப்பர்ப்...!!

08. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

08. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்யூவியின் வலதுபக்க டெயில்லைட் க்ளஸ்ட்டருடன் இணைந்த சில்வர் கலர் கைப்பிடிகள் சூப்பரோ சூப்பர். யாரும் அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியாதபடி, டெயில்லைட் க்ளஸ்ட்டருடன் இயைந்து மிக நுட்பமாக டிசைன் செய்துள்ளனர்.

09. ஃபியட் அவென்ச்சுரா

09. ஃபியட் அவென்ச்சுரா

ஃபியட் அவென்ச்சுராவில் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் அவென்ச்சுராவின் பாடி கிளாடிங்குள் அந்த காருக்கு மிகச்சிறந்த வசீகரத்தை கொடுக்கிறது. அந்த காரை பார்த்தவுடன் எனக்கு பிடித்த விஷயம் பாடி கிளாடிங்குகள்தான்...

10. ஸ்கோடா ரேபிட்

10. ஸ்கோடா ரேபிட்

ஒரு காரின் முன்பக்க அழகுக்கு அதன் முகப்பு க்ரில் மிக முக்கியமானது. அந்த வகையில், ஸ்கோடா ரேபிட் காரின் முகப்பு க்ரில் என்னை கவர்ந்த ஒன்று.

11. ஹூண்டாய் நியூ வெர்னா

11. ஹூண்டாய் நியூ வெர்னா

சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஹூண்டாய் புதிய வெர்னா காரின் பனி விளக்குகள் டிசைன் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. வழக்கம்போல் வட்ட வடிவிலோ, செவ்வக வடிவிலோ இல்லாமல், தலைகீழான பூமராங் ஆயுத வடிவ பனி விளக்குகள் என்னை கவர்ந்த ஒன்று.

 12. இனி உங்கள் சாய்ஸ்...

12. இனி உங்கள் சாய்ஸ்...

எனக்கு பிடித்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துவிட்டேன். இனி உங்கள் காரில் அல்லது வேறு கார்களில் உங்களுக்கு பிடித்த விஷயங்களை கருத்துப் பெட்டியில் பகிர்ந்து கொள்ளலாம்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Our picks of eleven outstanding design details of affordable Indian cars. Have a look.
Please Wait while comments are loading...

Latest Photos