ஏர்போர்ட்டுக்கு சாதாரணமா வந்தது இவ்ளோ பெரிய ஆளா! இவங்க மட்டும் தமிழ்ல நடிக்க வந்தா நிறைய நடிகைகள் காலி!
இந்தியாவில் ஒரு மாநிலத்தை சேர்ந்த நடிகைகள், மற்ற மொழி திரைப்படங்களில் ஆதிக்கம் செலுத்துவது ஒன்றும் புதிதல்ல. இதற்கு திரிஷா (Trisha) மற்றும் நயன்தாரா (Nayanthara) போன்ற பல்வேறு நடிகைகளை உதாரணமாக கூற முடியும். ஆனால் வெளிநாடுகளை சேர்ந்த ஒரு சில நடிகைகளும் கூட, இந்திய சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளனர் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் ஆகும். இதற்கு எல்னாஜ் நொருஜி (Elnaaz Norouzi) ஒரு உதாரணம். இவர் இஸ்ரேல் (Israel) உடன் சண்டையிட்டு வரும் ஈரான் (Iran) நாட்டில் பிறந்தவர் ஆவார்.
ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரான் (Tehran) நகரம்தான் எல்னாஜ் நொருஜியின் பிறப்பிடம். ஈரானில் பிறந்திருந்தாலும் கூட தற்போது இந்தியாவின் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைககளில் ஒருவராக அவர் திகழ்ந்து வருகிறார். பாலிவுட் மட்டுமல்லாது, ஹாலிவுட் மற்றும் பாகிஸ்தான் திரைப்படங்களிலும் கூட அவர் தலை காட்டியுள்ளார்.

தற்போது 33 வயதாகும் எல்னாஜ் நொருஜி, முன்னதாக மெர்சிடிஸ் பென்ஸ் ஏ180 (Mercedes Benz A180) காரில் வலம் வந்து கொண்டிருந்தார். அது சிகப்பு நிற கார் ஆகும். இந்த வரிசையில் தற்போது மற்றொரு புதிய கார் ஒன்றை, எல்னாஜ் நொருஜி வாங்கியுள்ளார். அது பிஎம்டபிள்யூ எக்ஸ்7 (BMW X7) ஆகும்.
இது சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்று. இந்த காரில் மும்பை விமான நிலையத்திற்கு (Mumbai Airport) எல்னாஜ் நொருஜி வந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. யூடியூப் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், கருப்பு நிற பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரில், எல்னாஜ் நொருஜி வந்து இறங்குவதை பார்க்க முடிகிறது.

பொதுவாக பிரபலமான நடிகைகள் பலரும் பாதுகாவலர்கள் உடன்தான் பொது இடங்களுக்கு வருவார்கள். ஆனால் எல்னாஜ் நொருஜி, பாதுகாப்பு பரிவாரங்கள் இல்லாமல், மிகவும் சாதாரணமாக காரில் வந்து இறங்குகிறார். இவரது அழகு மற்றும் எளிமையை கண்ட ரசிகர்கள் பலரும், தமிழ் சினிமாவில் முகம் காட்ட வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
முன்னதாக இந்த வீடியோவின் தொடக்கத்தில் எல்னாஜ் நொருஜியின் சிகப்பு நிற மெர்சிடிஸ் பென்ஸ் ஏ180 காரும் காட்டப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எல்னாஜ் நொருஜி தற்போது வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரில், மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன.
அவை 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ டீசல் ஆகியவை ஆகும். அத்துடன் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரில், 48V மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதன் உரிமையாளர்கள், ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தையும் அனுபவிக்கலாம்.
மிகவும் விலை உயர்ந்த கார் என்பதால், அதிநவீன வசதிகளுக்கும் (Features) கொஞ்சம் கூட பஞ்சமில்லை. இதில், 14.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், கனெக்டட் கார் தொழில்நுட்பம், டிஜிட்டல் கீ, பனரோமிக் சன்ரூஃப், 14 கலர் ஆம்பியண்ட் லைட்டிங் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இவை எல்லாம் தவிர, 360 டிகிரி கேமரா, அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) மற்றும் 16 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம் போன்ற வசதிகளும் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரில் இடம்பெற்றுள்ளன. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரின் ஆரம்ப விலை 1.30 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 1.34 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 1.70 கோடி ரூபாய் வரை வரும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் (Mercedes Benz GLS), ஆடி க்யூ7 (Audi Q7) மற்றும் வால்வோ எக்ஸ்சி90 (Volvo XC90) போன்ற கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக பிஎம்டபிள்யூ எக்ஸ்7 கார் திகழ்ந்து கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








