2ஜி ஊழல் பணத்தை ஒரே நாளில் நேர்மையாக சம்பாதித்த எலான் மஸ்க்! எப்படி இது சாத்தியமானது தெரியுமா?

உலகின் பணக்கார பிரபலங்களில் ஒருவனான எலான் மஸ்க் சமீபத்தில் ஒரே நாளில் ரூபாய் 1.76 லட்சம் கோடியை சம்பாதித்துள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் விலை உயரும் காரணமாக இந்த வருமானத்தை அவர் ஈட்டி உள்ளது. இது எப்படி நடந்தது? இதற்குப் பின்னால் உள்ள விஷயம் என்ன என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

உலகம் முழுவதும் பிரபலமானவர் எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மிகப்பெரிய அளவில் உலகில் லாபம் சம்பாதித்து வருகிறது. இந்த நிறுவனம் அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகில் பல்வேறு நாடுகளில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தி லாபத்தை ஈட்டி வருகிறது. இதனால் இவர் உலகின் நம்பர் 1 பணக்காரராகவும் இருக்கிறார்.

Elon Musk

இந்நிலையில் ஒரே நாளில் இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 1.76 லட்சம் கோடியை சம்பாதித்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தான் டெஸ்லா நிறுவனம் அமெரிக்காவில் இந்த காலண்டர் ஆண்டின் மூன்றாவது காலாண்டு அறிக்கையை வெளியிட்டது. அதில் நிறுவனம் மிகப்பெரிய லாபம் ஏற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த 2024ம் ஆண்டிற்கான மூன்றாவது காலாண்டு விற்பனை விவரங்களில் அந்நிறுவனம் மொத்தம் 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான லாபத்தை சம்பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு இதே காலகட்டத்தில் நிறுவனம் சம்பாதித்த லாபத்தை விட 17 சதவீதம் அதிகமாகும். இது மட்டுமல்லாமல் நிறுவனம் மொத்த வருமானத்தையும் 25.2 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தி உள்ளது. இது கடந்தாண்டு இதே காலகட்ட வருமானத்தை விட 8 சதவீதம் அதிகமாகும்.

Elon Musk

டெஸ்லா நிறுவனம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டி உள்ள நிலையில் குறித்த செய்தி வெளியான போது மக்கள் மத்தியில் நிறுவனத்திற்கு நல்ல பெயர் கிடைத்தது. இதனால் பலர் பங்குச் சந்தைகள் நிறுவன பங்குகளை பங்கு துவங்கினார்கள். இதனால் வேகமாக டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளின் விலை அதிகரித்தது இதனால் ஒரே நாளில் இந்த நிறுவனத்தின் பங்கின் விலை மிக அதிகமானதால் நிறுவனத்தின் ஒட்டுமொத்த மதிப்பும் அதிகமானது. தற்போது நிறுவனம் 117 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மார்க்கெட்டை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் டெஸ்லா நிறுவன பங்குகளை வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமானதால் நிறுவனத்தின் பங்குகளின் விலையும் அதிகமானது. டெஸ்லா நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகள் எதாவது எலான் மஸ்கிடம் இருப்பதால் அவரிடம் உள்ள பங்குகளில் விலையும் அதிகமாகி தற்போது ஒரே நாளில் அவர் 1.76 லட்சம் கோடி ரூபாயை வருமானமாக ஈட்டி உள்ளார் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

Elon Musk

இதற்கு பின்னால் மற்றொரு காரணமும் இருக்கிறது. சமீபத்தில் டெஸ்லா நிறுவனம் ரோபோ டாக்ஸியை காட்சிப்படுத்தியது. இது விரைவில் அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2025ம் ஆண்டு டிரைவரே இல்லாமல் இயங்கும் ரோபோ டாக்ஸிகள் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் அறிமுகப்படுத்த டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

இந்த செய்தியும் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்ததால் மக்கள் பல டெஸ்லா நிறுவன பங்குகளை வாங்கி மிகப்பெரிய அளவில் அந்நிறுவனத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். இதுதான் நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபத்தை ஈட்டிதருகிறது. தொடர்ந்து இந்நிறுவனம் சிறப்பான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும்போது இந்நிறுவனத்தின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும்.

டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வருவது குறித்து இன்னும் தெளிவான முடிவுகளை எடுக்கவில்லை என்று தான் தெரிகிறது. டெஸ்ட்லா நிறுவனம் இந்தியாவிற்கு வருவதற்காக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் கடைசி கட்டத்தில் இது டெஸ்லா நிறுவனத்தால் அடுத்த கட்ட முயற்சிக்கு செல்லாமல் நிறுத்தப்பட்டு விட்டது. இதற்கு பின்னால் மற்ற நாடுகளின் அழுத்தம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆட்டோமொபைல் துறையில் டெஸ்லா நிறுவனம் மிகப்பெரிய அளவு வளர்ச்சியை சந்தித்துள்ளது. மிகக் குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவிற்கு வருவது இந்திய மக்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் என எதிர்பார்த்தாலும், இந்தியாவில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, October 25, 2024, 12:37 [IST]
English summary
Elon musk 21 billion dollars richer tesla stock gains q3 earnings
மேலும்... #tesla #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X