இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ இந்தியாவிற்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்த பயணம் தற்போது தள்ளிப் போய் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்த மாத இறுதிக்குள் எலான் மஸ்க் மற்றும் மோடி ஆகியோர் சந்திக்க திட்டமிட்டு இருந்த நிலையில், இந்த சந்திப்பும் தள்ளிப் போய் உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவை எலvக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு விதமான திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அதன்படி வெளிநாட்டில் உள்ள நிறுவனங்கள் இந்தியாவில் ஆலையை அமைத்து வாகனங்கள் தயாரிப்பதாக இருந்தால் குறிப்பிட்ட நிபந்தனையின் கீழ் குறைவான இறக்குமதி வரியில் வாகனங்களை இறக்குமதி செய்யலாம் என்ற புதிய எலெக்ட்ரிக் வாகன பாலிசி ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனால் டெஸ்லா போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் ஆலையை அமைப்பதற்கு முன்னர் இந்தியாவில் வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்து பார்த்து, இந்தியாவில் எப்படியான மார்க்கெட் இருக்கிறது என்பதை கணித்து அதன் பின்னர் ஆலையமைத்து வாகனங்களை தயாரிக்க திட்டமிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் ஆலையை அமைப்பது குறித்து முடிவு செய்து இந்தியாவில் இடம் தேர்வு செய்து வருகிறது.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஆலையை அமைப்பது கிட்டத்தட்ட முடிவான சூழ்நிலையில், கடந்த 10ம் தேதி டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் இந்த மாத இறுதிக்குள் இந்தியாவிற்கு வர இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் இவர் இந்தியாவிற்கு வந்தால் பிரதமர் மோடியை நேரில் சந்திப்பார் என்றும், மேலும் டெஸ்லா நிறுவனம் எந்த மாநிலத்தில் அமைக்கப் போகிறதோ அந்த மாநிலத்தில் உள்ள அதிகாரிகளையும் நேரில் சந்தித்து பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் வரும் திங்கட்கிழமை இந்த சந்திப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது டெஸ்லா நிறுவனம் இந்தியா வருவது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தள்ளி வைக்கப்பட்டதற்கான காரணம் எதுவும் இதுவரை தெளிவாக கூறவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயம் வருவார் என்ற பதிலுடன் இந்த வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து எலான் மாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் டெஸ்லா நிறுவனம் தொடர்பான அதிகமான வேலை இருப்பதால் தற்காலிகமாக இது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்துள்ளார். இந்த சந்திப்பு தள்ளிப் போய் உள்ளது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தேர்தல் நடந்து வருவதால் இது சந்திப்பு தள்ளிப் போய் உள்ளதாக ஒரு பக்கம் பேசப்படுகிறது.
மற்றொரு பக்கம் இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் எந்த மாநிலத்தில் தனது ஆலையை அமைக்க போகிறது என்ற முடிவை இதுவரை எடுக்கவில்லை எனவும், இந்த தடுமாற்றம் காரணமாக எலான் மஸ்கின் வருகை தள்ளிப் போய் உள்ளதாகவும் மறுபுறம் பேசப்படுகிறது. இதன் பின்னால் உள்ள உண்மையான காரணம் எதுவும் இதுவரை தெரியவில்லை.
எலான் மாஸ்க் இந்தியாவிற்கு வரும்போது டெஸ்லா நிறுவனத்தின் ஆலை எந்த மாநிலத்தில் அமையப்போகிறது என்ற தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைக்க எவ்வளவு பணத்தை முதலீடு செய்யப் போகிறது என்று அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது இந்த இரண்டு தகவலும் காலதாமதம் ஆகி உள்ளது.
டெஸ்லா நிறுவனம் தமிழகத்தில் தனது ஆலையை அமைக்க ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கார்களை தயாரித்து இந்தியாவில் மட்டும் விற்பனை செய்யாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு வரும் நிலையில், சென்னை போன்ற இடங்களில் ஆலையை அமைப்பதன் மூலம் சுலபமாக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என்ற நோக்கில் தமிழகமும் அவர்களது பட்டியலில் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வருவது உறுதியான நிலையில், தற்போது எலான் மஸ்கின் வருகை மட்டுமே காலதாமதமாகி உள்ளது டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வரும் அனைத்து பணிகளும் ஒரு பக்கம் துரிதமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் டெஸ்லாக் கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்ய அந்நிறுவனம் துவங்கி விடும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








