ஏப்ரல் கடைசியில் வரப்போகும் முக்கிய அறிவிப்பு! மோடி ஜெயிக்கிறதுக்கு இந்த ஒரு விஷயம் போதுமே!
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டு வரும் நிலையில், இந்த ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மாஸ்க் இந்தியா வருகிறார். அப்பொழுது அவர் பிரதமர் மோடியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக இருப்பது, டெஸ்லா தான் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த நிறுவனம் ஆலையமைத்து வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் டெஸ்லா கார்கள் இதுவரை விற்பனையில் இல்லை. ஆனால் இந்தியா உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக மாறி உள்ளது.

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் இதற்கு முன்னர் வாகனங்களை விற்பனை செய்ய முயற்சி செய்தது. ஆனால் அப்பொழுது இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு வாகனங்களை விற்பனை செய்ய அதிகமான வரி இருப்பதால் டெஸ்லா நிறுவனம் அந்த முடிவிலிருந்து பின்வாங்கியது. தற்போது மீண்டும் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் வாகனங்களை விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்ய சில கட்டுப்பாடுகளுடன் கூடிய வரி தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி குறிப்பிட்ட நிறுவனம் குறிப்பிட்ட ஆண்டுக்குள் இந்தியாவில் ஆலை அமைக்க வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களை மட்டுமே இறக்குமதி செய்ய வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்களை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது அங்கு டெஸ்லா நிறுவனத்தின் நேரில் சந்தித்து பேசி இருந்தார். இந்நிலையில் இந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் எலான் மஸ்க் இந்தியாவிற்கு வருவது உறுதியாகி உள்ளது.
இந்தியாவிற்கு வரும் எலான் மஸ்கை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் சந்திப்பின்போது இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் எப்படியான முதலீடுகளை செய்யப்போகிறது என்ற விரிவான விபரங்கள் எல்லாம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளில் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீட்டை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் டெஸ்லா நிறுவனம் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்து குறைந்த வரியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரும் இந்த கார்களுக்கு இந்தியாவில் கிடைக்கும் வரவேற்பு கொடுத்த அடுத்ததாக எந்தெந்த வாகனங்களை எல்லாம் இந்தியாவில் தயாரிக்க முடியும் என்ற யுக்தியை டெஸ்லா நிறுவனம் செய்ய உள்ளது.
இந்நிறுவனம் தற்போதைய இந்தியாவில் ஆலையை அமைப்பதை உறுதி செய்து அதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணியை தொடங்கி விட்டது. தமிழக உள்ளிட்ட சில முக்கியமான மாநிலங்கள் டெஸ்லா நிறுவனத்தின் பட்டியலில் உள்ளன. இதில் அந்நிறுவனம் மற்றும் அம்மாநில அரசுகள் சேர்ந்து எடுக்கும் முடிவை வைத்து எந்த மாநிலத்தில் டெஸ்லா நிறுவனம் வாகன தயாரிப்பு ஆலையை அமைக்கும் என்பதை முடிவு செய்து அறிவிக்கும்.
தமிழகத்தில் டெஸ்லா ஆலை அமைய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தில் டெஸ்லா நிறுவனம் ஆலை அமைத்தால் இங்கு தயாரிக்கப்படும் வாகனங்களை எளிதாக தெற்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். இதை மனதில் வைத்து டெஸ்லா நிறுவனம் தமிழகத்தில் குறிப்பாக சென்னை அருகே ஆலையமைக்க திட்டமிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்தால் குறைந்த விலையில் தரமான எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் விற்பனைக்கு வரும் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் பெரும் போட்டி ஏற்படும். இதனால் தரமான வாகனங்களை பெரும்பாலான நிறுவனங்கள் தயாரிக்க துவங்கிவிடும். இது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்பாட்டை அதிகரிக்க உதவும்.


Click it and Unblock the Notifications









