ஹைப்பர்லூப்பை அடுத்து பாதாள சாலை போக்குவரத்திற்கான பேருந்தை டிசைன் செய்த எலான் மஸ்க் நிறுவனம்!!

பிரபல எலான் மஸ்க் நிறுவனம் சுரங்க வழி போக்குவரத்திற்கான புதிய பேருந்தை உருவாக்கி வருகிறது

By Azhagar

ஹைப்பர்லூப் போக்குவரத்து தொழில்நுட்பத்தின் திட்டவரையறையை காட்டி உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய எலான் மஸ்க் போரிங் கம்பெனி அடுத்ததாக சுரங்க வழி பயணத்திற்கான பேருந்துகளை உருவாக்க திட்டமிட்டு வருகிறது.

பாதாள சாலை போக்குவரத்து: எலான் மஸ்க்கின் அடுத்த இலக்கு!

பெரிய தொழிற்சாலைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட உரிமையாளர்கள் பயன்படுத்தும் ஊர்திகள் போல இந்த பேருந்துகளை எலான் மஸ்க் நிறுவனம் வடிவமைக்கவுள்ளது.

பாதாள சாலை போக்குவரத்து: எலான் மஸ்க்கின் அடுத்த இலக்கு!

இதை செயல்படுத்துவது குறித்து தனது வலைதளபக்கத்தில் புகைப்படங்களுடன் கூடிய திட்ட வடிவனங்களை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளது.

பாதாள சாலை போக்குவரத்து: எலான் மஸ்க்கின் அடுத்த இலக்கு!

பயணங்களுக்கு ஏற்றவாறு பயணிகள் அமர்ந்து கொண்டு போகவும் அல்லது நின்றுக்கொண்டு போகவும் வசதிகளுக்கு ஏற்ப இதனுடைய உள்கட்டமைப்பு இருக்கும்.

பாதாள சாலை போக்குவரத்து: எலான் மஸ்க்கின் அடுத்த இலக்கு!

முற்றிலும் கண்ணாடியிலான கட்டமைப்பு கொண்ட இந்த சுரங்கப் பேருந்துகள் மின்சாரத்தால் இயங்கும் ஆற்றலை பெற்றிருக்கும் என தனது வலைதளபக்கத்தில் எலான் மஸ்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாதாள சாலை போக்குவரத்து: எலான் மஸ்க்கின் அடுத்த இலக்கு!

பறக்கும் கார்களை விட, சுரங்க வழிப்பாதையில் பயன்படுத்தும் இந்த பேருந்துகள் மிக பாதுகாப்பை வழங்கும் என அந்நிறுவனம் மேலும் தனது வலைதள பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.

பாதாள சாலை போக்குவரத்து: எலான் மஸ்க்கின் அடுத்த இலக்கு!

சுரங்க வழிப்பாதையில் அமைக்கப்படுவதால், இதற்கான போக்குவரத்து எந்தவிதத்திலும் தடைபடாது எனவும், எவ்வளவு தொலைவு வேண்டுமானாலும் இதற்கான கட்டமைப்புகளை விரிவுப்படுத்திக்கொண்டே செல்லலாம் எனவும் எலான் மஸ்க் தனது வலைதள பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

பாதாள சாலை போக்குவரத்து: எலான் மஸ்க்கின் அடுத்த இலக்கு!

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பல தொழில்நுட்பவியலாளர்கள், சுரங்க வழி பேருந்து போக்குவரத்து நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராது என தெரிவிக்கின்றனர்.

பாதாள சாலை போக்குவரத்து: எலான் மஸ்க்கின் அடுத்த இலக்கு!

பேருந்திற்கான பயன்பாடு அதிகளவில் உள்ளதால், அதற்கு ஏற்றவாறான கட்டமைப்பை பூமிக்கு அடியில் உருவாக்கிக்கொண்டே போக முடியாது என அவர்கள் கருதுகின்றனர்.

பாதாள சாலை போக்குவரத்து: எலான் மஸ்க்கின் அடுத்த இலக்கு!

எலான் மஸ்க் நிறுவனம் சுரங்க வழி பேருந்திற்கான கட்டமைப்பை லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி உள்ளது. பெரிய பெரிய டனல் போரிங் கொண்டு சுரங்கம் அமைக்கப்படும் புகைப்படங்கள் அந்நிறுவனத்தின் இணையள தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

பாதாள சாலை போக்குவரத்து: எலான் மஸ்க்கின் அடுத்த இலக்கு!

புகைப்படங்களை பற்றி பேசிய தொழில்நுட்பவியலாளர்கள், அது சுரங்க பேருந்து போக்குவரத்திற்கான கட்டமைப்பு இல்லை என்று தெரிவிக்கின்றனர்.அந்த புகைப்படங்கள் அனைத்தும் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கட்டமைத்து வரும் ஹைப்பூர்லூப் போக்குவரத்திற்கானது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதாள சாலை போக்குவரத்து: எலான் மஸ்க்கின் அடுத்த இலக்கு!

ஆனால் சுரங்க பேருந்து போக்குவரத்து கட்டமைப்பில் தொழில்நுட்பவியலாளர்களின் பார்வையை முற்றிலும் மறுக்கிறது ஈயான் மஸ்க்.

பாதாள சாலை போக்குவரத்து: எலான் மஸ்க்கின் அடுத்த இலக்கு!

மேலும், பேருந்துகள் சுரங்க வழி சாலைகளில் இயக்கப்படும் என்பதால், அதற்கான கட்டமைப்பு மிகவும் எளிதானது என்பது அந்நிறுவனத்தின் கூற்றாக உள்ளது.

பாதாள சாலை போக்குவரத்து: எலான் மஸ்க்கின் அடுத்த இலக்கு!

மேலும் தற்போது சுரங்கங்களை கட்டமைப்பது என்பது அதிக செலவுப் பிடிக்கும் தொழில்நுட்பமாக உள்ளது. குறிப்பாக ஒரு மைல் தூரத்திற்கு சுரங்கங்கள் அமைக்கப்பதற்கு சுமார் ஒரு மில்லியன் வரை செலவாகிறது.

பாதாள சாலை போக்குவரத்து: எலான் மஸ்க்கின் அடுத்த இலக்கு!

ஆனால் இதுபோன்ற பயனுள்ள தொழில்நுட்பங்கள் பல உருவாக்கப்பட்டால், அதற்கான தேவைகள் அதிகரித்து, சுரங்க கட்டமைப்பிற்கான செலவுகள் மலிவாகும் என்பது இதுகுறித்து எழுந்துவரும் விமர்சனத்திற்கு எலான் மஸ்க் நிறுவனத்தின் பதிலாகவுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Elon Musk Boring Company revelas its next Innovation Under Ground Buses to the Future Transportation. Click for Details...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X