வானத்தில் பறக்கும் அரண்மனை.. நம்பர்1 பணக்காரர் எலன் மஸ்க் வாங்க இருக்கும் புதிய பிரைவேட் ஜெட் இவ்ளோ சொகுசானதா!
வானத்தில் பறக்கும் அரண்மனை எனும் கூறுமளவிற்கு சொகுசு மற்றும் ஆடம்பர வசதிகளால் உருவாக்கப்பட்டிருக்கும் ஓர் விமானத்தை உலகின் நம்பர் 1 பணக்காரர் எலன் மாஸ்க் வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

உலகின் நம்பர் பணக்காரர் எலன் மஸ்க். அமெரிக்காவைச் சேர்ந்த இந்த தொழிலதிபர் தற்போது புதிய பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்ஃப்ஸ்ட்ரீம் ஜி700 (Gulfstream G700) எனும் பிரைவேட் பிளேனுக்கே அவர் ஆர்டர் கொடுத்திருக்கின்றார்.

இதன் விலை மிக மிக அதிகம் என கூறப்படுகின்றது. ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த விமானம் எலன் மஸ்க்கின் கைகளை 2023 ஆம் ஆண்டிற்கு முன்னதாகவே வந்து சேர்ந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்ஃப்ஸ்ட்ரீமின் லேட்டஸ்ட் தயாரிப்பாக ஜி700 காட்சியளிக்கின்றது. இதன் கேபின் அரண்மனைகளில் காணப்படும் சொகுசு வசதிகளுக்கு இணையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிக மிக தாராளமான இட வசதி மற்றும் லக்சூரியான பயண அனுபவத்தை வழங்குகின்ற வகையில் விமானத்தின் உட்பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் பயணத்தின்போது துளியளவும் களைப்பையோ, அசௌகரியத்தை ஏற்படுத்தாத வண்ணம் இந்த விமானத்தை நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது.

இதுமட்டுமின்றி, இந்த விமானத்தால் எந்தவொரு தடையும் இன்றி சுமார் 7,500 நாட்டில் மைல்கள் பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, ஒரு முறை எரிபொருளை நிரப்பினால் ஜி700 விமானம் 13,890 கிமீ இடைநில்லாமல் பறக்கும் என நிறுவனம் உறுதியளித்துள்ளது. இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் ஆஸ்டினில் இருந்து ஹாங்காங்கிற்கு இடைவிடாமல் இந்த விமானத்தால் பறக்க முடியும்.

இதற்கிடையில் எரிபொருள் நிரப்ப வேண்டிய அவசியமே இருக்காது. இத்தகைய சூப்பர் திறன் கொண்ட விமானமே விரைவில் எலன் மஸ்க்கின் கைகளுக்கு சென்று சேர இருக்கின்றது. மேலும், இந்த விமானமானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 51,000 அடி உயரத்தில் பறக்கக் கூடியதும் ஆகும். இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளைத் தாங்கியதாக இந்த விமானம் காட்சியளிக்கின்றது.

அந்தவகையில், விமானத்தைத் தயாரித்து வரும் கல்ஃப்ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் கார்பரேஷன் (Gulfstream Aerospace Corporation) நிறுவனம் விமானம் பற்றி கூறியிருப்பதாவது, "விமான துறையின் மிக சிறந்த உருவாக்கமே இந்த ஜி700. பன்முக கேபின், மிக சிறந்த தொழில்நுட்ப கருவிகள் மற்றும் சொகுசு வசதிகள் என பலவற்றால் இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.

கல்ஃப்ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் கார்பரேஷன் இந்த விமானத்தில் புத்தம் புதிய, உயர்-உந்துதலை வழங்கக் கூடிய ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் எஞ்ஜின்களைப் பயன்படுத்தியிருக்கின்றது. மேலும், சொந்தமான வைஃபை சிஸ்டம், 20 முட்டை வடிவ ஜன்னல்கள் மற்றும் இரண்டு கழிவறைகள் உள்ளிட்டவற்றையும் விமானத்தில் அந்நிறுவனம் வழங்கியிருக்கின்றது.

இந்த கழிவறைகளைக்கூட அதிக சொகுசு வசதிகள் நிறைந்ததாக விமானம் உருவாக்கியிருக்கின்றது. உலகின் நம்பர் பணக்காரரான எலன் மஸ்க் இடத்தில் மற்றொரு விலையுயர்ந்த பிரைவேட் ஜெட்டும் பயன்பாட்டில் இருக்கின்றது. அவர் தற்போது ஜி650இஆர் (G650ER) சொகுசு விமானத்தையே பயன்படுத்தி வருகின்றார். விரைவில் இதன் இடத்தை ஜி700-ஐக் கொண்டு ரீபிளேஸ் செய்ய இருக்கின்றார்.

கல்ஃப்ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் கார்பரேஷன் நிறுவனம் ஜி700 விமானத்தை 2019ம் ஆண்டு அக்டோபர் மாதமே முதல் முறையாக இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியது. உலக செல்வந்தர்களைக் கருத்தில் இந்த விமானத்தை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. தற்போது எலன் மஸ்க் ஆர்டர் கொடுத்திருக்கும் இந்த விமானம் 78 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடையதாகும்.

இத்தகைய அதிகபட்ச செலவிலேயே மஸ்க் ஜி700 விமானத்தை வாங்க இருக்கின்றார். இந்திய ரூபாய் மதிப்பில் இதன் விலை 646 கோடி ஆகும். மஸ்க் அதிகம் பயணத்தை விரும்பக் கூடியவராக இருக்கின்றார். தன்னுடைய தனிப்பட்ட பயணங்களுக்கு அவர் அதிகளவில் பிரைவேட் ஜெட்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். இந்த நிலையிலேயே புதிய அதிக லக்சூரி வசதிகள் நிறைந்த ஜி700 பிரைவேட் ஜெட்டிற்கு அவர் ஆர்டர் கொடுத்திருக்கின்றார்.

எலன் மஸ்க் சமீபத்தில் டுவிட்டரை கையகப்படுத்தியிருந்தார். இவரின் கைகளுக்கு சென்ற பின்னர் டுவிட்டர் நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, டுவிட்டர் தினசரி 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டத்தைச் சந்திப்பதாக கூறி அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஊழியர்களைக் குறைக்கும் பணிகளையே அவர் மேற்கொண்டு வருகின்றார். இந்த சர்ச்சைகளுக்கு இடையிலேயே விலையுயர்ந்த விமான கொள்முதலுக்கு அவர் ஒப்புதல் வழங்கியிருக்கின்றார்.


Click it and Unblock the Notifications








