சென்னையில் டெஸ்லா ஆலையை அமைக்க மத்திய அரசு எலான் மஸ்க் உடன் பேச்சு? தீபாவளிக்கு அப்புறம் நல்ல செய்தி வருமா?

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது ஆலையை அமைத்து தயாரிப்புகளை துவங்க திட்டமிட்டுள்ள நிலையில் இதை உறுதி செய்வதற்காக மத்திய வணிகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் அடுத்த வாரம் அமெரிக்காவில் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்கை சந்திக்க உள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டெஸ்லா நிறுவனம் உலகில் முதன்முறையாக தானியங்கியாக செயல்படும் காரை தயாரித்து அறிமுகம் செய்த நிறுவனமாகவும் இந்நிறுவனத்தின் கார்களுக்கு உலகம் முழுவதும் மவுசு இருக்கிறது. குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட மிகப்பெரிய நாடுகளில் டெஸ்லா நிறுவனத்தின் காரை வாங்கி பயன்படுத்தும் மக்கள் அதிகமாக இருக்கின்றனர். டெஸ்லா நிறுவனத்தின் கார்களுக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய மவுசு இருக்கிறது.

elon musk piyush goyal meeting

இந்த கார் நிறுவனத்தை துவங்கி அதன் சிஇஓ எலான் மஸ்க் தற்போது உலகின் நம்பர் 1 பணக்காரராக மாறிவிட்டார். உலகின் மிகப்பெரிய மூன்றாவது கார் சந்தையாக இருப்பது இந்தியா தான். ஆனால் இந்தியாவில் டெஸ்லா வாகனங்கள் இதுவரை விற்பனையாகவில்லை. இந்தியாவிலிருந்து யாராவது டெஸ்லா வாகனத்தை வாங்க வேண்டும் என்றால் வெளிநாட்டில் வாங்கி அதை இந்தியாவிற்குள் இறக்குமதி தான் செய்ய வேண்டும்.

இந்நிலையில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கார்களை விற்க சில ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அரசிடம் அனுமதி கோரியது. ஆனால் மத்திய அரசு வெளிநாட்டிலிருந்து கார்களை இறக்குமதி செய்ய வரியை குறைக்க முடியாது என தெரிவித்ததால் டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்குள் வருவதை யோசித்தது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் டெஸ்லா கார்களுக்கான மிகப்பெரிய மார்க்கெட் இருப்பதால் இந்தியாவிலேயே டெஸ்லாக் கார்களை தயாரித்து விற்பனை செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது.

elon musk piyush goyal meeting

இதையடுத்து மத்திய அரசுடன் டெஸ்லா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதன்படி அந்நிறுவனம் இந்தியாவிலேயே அலைகளை அமைத்து இங்கே கார்களை தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தவும் அதேபோல சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்துள்ளது. இதற்காக இடம் தேடும் பணி நடந்தது. ஆனால் அதில் ஏற்பட்ட தொய்வு காரணமாக டெஸ்லா நிறுவனம் மீண்டும் இந்தியாவிற்கு வருவது சந்தேகம் தான் என பேசப்பட்டது.

இந்நிலையில் தற்போது மத்திய வணிக துறை அமைச்சர் பியூஸ் கோயல் அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு செல்கிறார். அங்கு அவர் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்கை நேரில் சந்தித்து பேசுகிறார். இவர்களது பேச்சுவார்த்தையில் இந்தியாவிற்கு டெஸ்லா வாகனம் வருவது குறித்த முக்கியமான அம்சம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விரைவில் இந்தியாவில் டெஸ்லாக் அவர்களை காண முடியும் என எதிர்பார்க்கலாம்.

elon musk piyush goyal meeting

மத்திய அரசு தற்போது வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கான வரியை குறைக்க ஆலோசனை நடத்தி வருகிறது. தற்போது வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் எந்த காராக இருந்தாலும் அதை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய வேண்டும் என்றால் 100% வரி செலுத்த வேண்டும்.

அதாவது வெளிநாட்டில் அந்த காரின் விலை 10 லட்சமாக இருந்தால் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யும் போது கூடுதல் ரூ 10 லட்சம் மத்திய அரசுக்கு வரி செலுத்த வேண்டும். இதுபோக போக்குவரத்து கட்டணம் எல்லாம் சேர்த்து அந்த கார் இந்தியாவில் விற்பனையாகும்போது ரூபாய் 22 லட்சம் என்ற விலையில் விற்பனையாகும். இதனால் பல நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் காரை இறக்குமதி செய்ய தயங்கி வருகின்றனர்.

elon musk piyush goyal meeting

இந்நிலையில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகப்படுத்தவும் மாசு கட்டுப்பாட்டை கொண்டு வரவும் மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகனங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தால் அதற்கான வரியை 15 சதவீதமாக குறைக்க திட்டமிட்டு வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், மத்திய அரசு இது குறித்து ஆலோசனைகள் மற்றும் ஆய்வுகளை நடத்தி வருகிறது.

இது அமலுக்கு வரும் பட்சத்தில் டெஸ்லா நிறுவனத்தால் முதலில் இந்தியாவில் தனது கார்களை இறக்குமதி செய்து மார்க்கெட்டை புரிந்து கொண்ட பின்பு, இந்தியாவில் ஆலை அமைத்து இந்தியாவிற்கு தகுந்தார் போல கார்களை தயாரிக்க வசதியாகவும் இருக்கும் என்பதை எலான் மஸ்கிர்க்கு புரிய வைக்க மத்திய மணிய துறை அமைச்சர் பியூஸ் கோயல் அமெரிக்காவிற்கு செல்லும்போது இந்த சந்திப்பை நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டெஸ்லா கார்கள் வருவதற்கான ஒரு நல்ல வாய்ப்பு உருவாகி உள்ளது. ஆரம்பத்தில் ஆலைகளை அமைக்காவிட்டாலும் காரை இறக்குமதி செய்து டெஸ்லா நிறுவனம் மார்க்கெட் ஆய்வு செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். அதன் பின்பு டெஸ்லா நிறுவனம் ஆலையை அமைக்கும் முயற்சியில் இறங்கும். பெரும்பாலும் சென்னையில் தான் டெஸ்லா நிறுவனத்தின் ஆலை அமைய வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, November 10, 2023, 21:00 [IST]
English summary
Elon musk piyush goyal meeting tesla to enter india soon
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X