அம்பானி, அதானி கிடையாதுங்க... தனக்கு சொந்தமாக தனி விமான நிலையத்தை அமைக்கும் உலக பணக்காரர்... எங்கு தெரியுமா?
ஆயிரக்கணக்கான கோடிகளை வருமானமாக ஈட்டும் கோடீஸ்வரர்கள் பலர் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
Recommended Video
இந்த சூழலில், உலக பணக்காரர் ஒருவர் தனக்கு சொந்தமாக ஓர் தனி விமான நிலையத்தை உருவாக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

தங்களின் தனிப்பட்ட பயணத்திற்காக செல்வந்தர்கள் தனி விமானத்தை வாங்கியதைப் பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். முதல் முறையாக உலக பணக்காரர் ஒருவர் தனக்கு சொந்தமாக ஓர் விமான நிலையத்தையே உருவாக்க இருக்கின்றார். உலகின் பெரும் பணக்காரரான எலன் மஸ்கே அவர் ஆவார்.

மின் வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை அதிகாரியான இவர் தனக்கு சொந்தமாக ஓர் பிரைவேட் ஏர்போட்டையே உருவாக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரத்திற்கு வெளிப் பகுதியிலேயே இந்த விமான நிலையம் அமைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் துள்ளியமாக எந்த இடத்தில் அமைய உள்ளது என்பது பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு இப்போதே ஆரம்ப புள்ளி போடப்பட்டுள்ளது. எனவேதான் இதுகுறித்த எந்தவொரு தகவலும் அதிகாரப்பூர்வமாக தெரிய வரவில்லை.

அதேவேலையில், ஆஸ்டின் நகரத்தின் பாஸ்ட்ராப் பகுதியில் எலன் மஸ்கின் தனியார் விமான நிலையம் அமைய இருப்பதாக கூறப்படுகின்றது. டெஸ்லாவின் தலைமை அலுவலகமும் இந்த பகுதியில்தான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. எலன் மஸ்கின் பயன்பாட்டிற்கும் அவரின் நிர்வாகத்திற்கும் இந்த விமானம் பெரும் உதவியாக இருக்கும் வகையில் அமைக்கப்பட இருக்கின்றது.

விமான நிலையத்திற்காக சுமார் 1.30 லட்சம் சதுர அடி நிலபரப்பு கையகப்படுத்த உள்ளது. மேலும், அது டெஸ்லாரடி (Teslarati) எனும் பெயரில் அமையலாம் என்று தெரிகின்றது. இதில், 6,025 அடி நீளம் ரன்-வே விமானங்களின் லேண்டிங் மற்றும் டேக்-ஆப்பிற்காக உருவாக்கப்பட இருக்கின்றது.

டெஸ்லா நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் உலகளவில் பிரபலமடைந்துக் காணப்படுகின்றது. இந்தியாவில் சிலர் இந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களை பிரத்யேகமாக இறக்குமதி செய்து பயன்படுத்தும் அளவிற்கு டெஸ்லாவின் எலெக்ட்ரிக் கார்கள் அதிக சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றன.

அம்பானி குடும்பத்தினர் மற்றும் இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபர்கள் சிலர் இந்நிறுவனத்தின் தயாரிப்பை இந்தியாவில் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். மாடல் 3 மற்றும் மாடல் ஒய் ஆகிய இரு எலெக்ட்ரிக் கார்களே நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்களாக காட்சியளிக்கின்றன.

ஆனால், இதில் அதிக பிரபலமானதாக டெஸ்லா மடால் 3 எலெக்ட்ரிக் கார் இருக்கின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 568 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த கார் வெறும் 3.1 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறனைக் கொண்டிருக்கின்றது.

இந்த எலெக்ட்ரிக் காரையே இந்தியாவிற்கான முதல் டெஸ்லா காராக நிறுவனம் களமிறக்க இருக்கின்றது. அரசுடனான பேச்சுவார்த்தை முழுமை எட்டாமல் இருப்பதால் இந்த காரின் இந்திய வருகை சற்றே தூரத்தில் இருக்கின்றது. இருப்பினும், இந்த காருக்கு எலெக்ட்ரிக் வாகன பிரியர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு நீடித்துக் கொண்டிருக்கின்றது.


Click it and Unblock the Notifications