செவ்வாய் கிரகத்திற்கு ரூ.1 கோடி காரை அனுப்பிய டெஸ்லா; நாசாவால் முடியாததை செய்து முடித்த எலான் மஸ்க்

By Azhagar

சமீபத்தில் அமெரிக்காவின் ஃப்ளோரிடா கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஃபால்கன் ஹெவி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

டெஸ்லா காரை விண்ணுக்கு அனுப்பி நாசாவிற்கே சவால்விட்ட மஸ்க்..!!

இது நடந்து முடிந்த அடுத்த நொடிக்கு எல்லாம் உலகளவில் ஃபால்கன் ஹெவி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட நிகழ்வு தலைப்புச் செய்தியாகி போனது.

தொடர்ந்து மக்கள் இதைக்குறித்து பேசுவதும், ஃபால்கன் ஹெவி ராக்கெட் பற்றிய தகவல்களை இணையத்தில் தேடுவதிலும் மும்முறமாகினர்.

உலகத்தையே உற்றுநோக்க வைத்திருக்கும் இந்த ராக்கெட்டின் பின்னணி என்ன..?? ஃபால்கன் ஹெவி ராக்கெட்டில் அப்படி என்னதான் இருக்கிறது..?? விரிவாக பார்க்கலாம்.

அறிவியல் தொழில்நுட்பத்தில் சர்வதேச அளவில் கோலோச்சி வரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ராக்கெட் தான் ஃபாலகன் ஹெவி. தற்போது பயன்பாட்டில் இருக்கும் உலகின் மிக சக்தி வாய்ந்த ராக்கெட்டாகவும் ஃபால்கன் ஹெவி உள்ளது

A post shared by Elon Musk (@elonmusk) on Jan 4, 2018 at 5:13pm PST

மூன்று பூஸ்டர் ராக்கெட்டுகளுடன் பிணைக்கப்பட்டுள்ள ஃபால்கன் ஹெவி-ல் மொத்தம் 27 எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளன. ராக்கெட் தயாரிப்பு வரலாற்றிலேயெ இத்தனை எஞ்சின்கள் ஒரே ராக்கெட்டில் பொருத்தப்பட்டது இதுதான் முதல் முறை.

டெஸ்லா காரை விண்ணுக்கு அனுப்பி நாசாவிற்கே சவால்விட்ட மஸ்க்..!!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஃபால்கன் ஹெவி-க்கான உருவாக்க திட்டத்தை 2004ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. 2011ல் இத்திட்டம் இறுதி வடிவம் பெற்றதை அடுத்து, 2013ம் ஆண்டில் ஃபால்கான் ஹெவி ராக்கெட்டை விண்ணில் செலுத்த ஸ்பேஸ் எக்ஸ் திட்டமிட்டது.

ஆனால் சில தொழில்நுட்ப கோளாறால் அது நடக்காமல் போக, கிட்டத்தட்ட 4 வருடங்கள் காத்திருந்து புதிய திட்டங்களை வரையறுத்து, ஃபால்கன் ஹெவி ராக்கெட்டை விண்ணில் செலுத்தி ஸ்பேக்ஸ் எக்ஸ் அதில் வெற்றியை பெற்றிருக்கிறது.

Falcon Heavy at the Cape

A post shared by Elon Musk (@elonmusk) on Dec 20, 2017 at 1:47am PST

ராக்கெட்டை விண்ணில் செலுத்திய பிறகு, அதில் எடையை சுமந்து செல்லும் பூஸ்டர்கள் மீண்டும் பூமியில் தரையிறங்கும். இந்த தொழில்நுட்பம் ஸ்பேக்ஸ் எக்ஸ் தயாரிக்கும் ராக்கெட்டுகளில் மட்டுமே உள்ளது. இதே முறையை பின்பற்றி தான் ஃபால்கன் ஹெவி ராக்கெட்டையும் ஸ்பேக்ஸ் எக்ஸ் தயாரித்துள்ளது.

ஃபால்கன் ஹெவி ராக்கெட் 64 ஆயிரம் கிலோ, 70மீ உயரம், 12.2 மீ அகலம் கொண்டது. இதனால் 16, 800 கிலோ எடை கொண்ட பொருட்களை சுமந்து அதற்கான சுற்றுவட்டப் பாதையில் செலுத்தும் திறன் பெற்றது.

நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்து செல்லும் கனவை நினைவாக்குவதற்காக டிரையல் பார்க்கத்தான் ஃபால்கன் ஹெவி ராக்கெட்டை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியுள்ளது.

விண்ணில் ராக்கெட் செலுத்தப்பட்ட பிறகு அதன் தாக்கத்தை உணர பெரிய இரும்புப் பெட்டகம் அல்லது பெரிய கான்கிரீட் கல் ஏதாவது இருக்கும். ஆனால் ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான எலான் மஸ்க் சற்று வித்தியாசமாக யோசித்து செயல்படக்கூடியவர்.

Camera views from inside the payload fairing #FalconHeavy

A post shared by Elon Musk (@elonmusk) on Feb 6, 2018 at 12:36pm PST

ஃபால்கன் ஹெவி ராக்கெட்டின் முன்புறத்தில் எலான் மஸ்க் தான் சொந்தமாக பயன்படுத்தி வரும் செர்ரி ரெட் நிறத்திலான டெஸ்லா ரோஸ்டர் காரை வைத்திருக்கிறார்.

தவிர அந்த காரின் ஓட்டுநர் இருக்கையில் விண்வெளி உடைய அணிந்திருக்கும் மனிதன் போன்ற பொம்மை ஒன்று உட்கார வைக்கப்பட்டுள்ளது.

டெஸ்லா காரை விண்ணுக்கு அனுப்பி நாசாவிற்கே சவால்விட்ட மஸ்க்..!!

கூடவே அமெரிக்காவில் பிரபலமான 'ஸ்பேஸ் ஆடிட்டி' என்ற பாடல் திரும்பத் திரும்ப காரின் ஸ்பீக்கர்களில் ஒலித்துக் கொண்டே இருக்குமாம்.

இந்த காரின் அனைத்துப் பக்கங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கேமரா மூலம் புகைப்படங்கள் & விடியோக்களை கார் பூமிக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும்.

டெஸ்லா காரை விண்ணுக்கு அனுப்பி நாசாவிற்கே சவால்விட்ட மஸ்க்..!!

ரூ. 90 லட்சம் மதிப்பில் விலைபெறும் இந்த காரை ஃபால்கன் ஹெவி ராக்கெட்டில் வைத்து அனுப்பியதற்கு எலான் மஸ்க் கூறிய காரணம் தான் இந்த சம்பவத்தின் முழு ஹைலைட்.

வெறும் விண்ணில் ஏவுவதோடு மட்டுமில்லாமல், அந்த காரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைப்பது தான் எலான் மஸ்க்கின் திட்டம்.

டெஸ்லா காரை விண்ணுக்கு அனுப்பி நாசாவிற்கே சவால்விட்ட மஸ்க்..!!

விண்ணில் ஏவப்பட்ட கார் திட்டமிட்டப்படி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தால், இந்த சோதனை வெற்றி பெறும்.

செவ்வாய் கிரகத்தை அடைய இந்த கார் நம் சூரிய குடும்பத்தை தாண்டி தான் பல தொலைவிற்கு பயணிக்க வேண்டும். அதற்கிடையில் டெஸ்லா ரோட்ஸ்டர் கார் மீது விண்கல் மோதலாம்.

டெஸ்லா காரை விண்ணுக்கு அனுப்பி நாசாவிற்கே சவால்விட்ட மஸ்க்..!!

இல்லையென்றால் ஏதாவது வேற்று உலகவாசிகள் கையில் சிக்கலாம். அப்படி யாரிடமாவது இந்த கார் சிக்கினால் அவர்களுக்கு பூமியை பற்றிய தகவல்கள் தர எழுத்தாளர் ஐசக் அசிமோவின் 'ஃப்வுண்டேஷன்' என்ற புத்தக்கத்தின் சிடி பதிப்பு காரில் வைக்கப்பட்டுள்ளது.

டெஸ்லா காரை விண்ணுக்கு அனுப்பி நாசாவிற்கே சவால்விட்ட மஸ்க்..!!

அந்த வேற்றுகிரகவாசிக்கு ஒருவேளை ஆங்கிலம் தெரிந்திருந்தால், அவர்கள் படித்து தெரிந்துக்கொள்ள காரின் சர்க்கியூட் போர்டில் "Made on Earth by humans." இது "பூமியில் மனிதர்களால் உருவாக்கப்பட்டது" என்ற வாசகம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ள டெஸ்லா ரோட்ஸ்டர் மின்சார கார் செவ்வாய் கிரகத்தை எடைய 6 மாதம் காலம் ஆகும். தற்போது 300 கி.மீ வேகத்தில் கார் விண்ணில் சென்றுக்கொண்டு இருக்கிறது.

டெஸ்லா காரை விண்ணுக்கு அனுப்பி நாசாவிற்கே சவால்விட்ட மஸ்க்..!!

எலான் மஸ்க் ஃபால்கன் ஹெவி ராக்கெட்டில் டெஸ்லா ரோட்ஸ்டர் காரை வைத்து அனுப்ப இன்னொரு காரணமும் உள்ளது. அது தான் விளம்பர யுக்தி. ஸ்பேக்ஸ் எக்ஸ் போலவே, டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனமும் எலான் மஸ்க்கிற்கு சொந்தமானது தான்.

டெஸ்லா காரை விண்ணுக்கு அனுப்பி நாசாவிற்கே சவால்விட்ட மஸ்க்..!!

ஒரு சில நாடுகளில் மட்டுமே விற்பனையில் இருக்கும் டெஸ்லா கார் விரைவில் இந்தியா உட்பட பல நாடுகளில் விற்பனைக்கு களமிறங்கவுள்ளது. புதிய சந்தையில் மொத்த விற்பனை திறனையும் பிடிக்க எலான் மஸ்க் செய்த ஒரு தந்திரம் தான் விண்ணுக்கு காரை அனுப்பியது.

டெஸ்லா காரை விண்ணுக்கு அனுப்பி நாசாவிற்கே சவால்விட்ட மஸ்க்..!!

ஃபால்கன் ஹெவி ராக்கெட் திட்டமிட்டப்படி செவ்வாய் கிரகத்தை அடைந்தால் இது எலான் மஸ்க்கின் 13 ஆண்டு கால காத்திருப்பிற்கு கிடைக்கும் பெரிய வெற்றி. இதன்மூலம் பல நிறுவனங்கள் ஃபால்கன் ராக்கெட்டில் பொருட்களை சுமந்து செல்ல ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தை நாடும்.

டெஸ்லா காரை விண்ணுக்கு அனுப்பி நாசாவிற்கே சவால்விட்ட மஸ்க்..!!

ஃபால்கன் ஹெவி ராக்கெட்டில் பொருட்களை சுமந்து செல்ல ரூ. 570 கோடி தொகையை ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. இது மற்ற நாடுகளின் விண்வெளி நிலையங்களின் கட்டணத்தை விட மிக மிக குறைவே.

டெஸ்லா காரை விண்ணுக்கு அனுப்பி நாசாவிற்கே சவால்விட்ட மஸ்க்..!!

செவ்வாய் கிரக முயற்சி தோல்வி அடைந்தால் எந்த கிரகத்திலோ விண் கல்லிலோ மோதாத வரை, இனி வரும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு, எலான் மஸ்க்கின் கார் விண்ணில் பறந்து கொண்டே இருக்கும்.

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Elon Musk Space X launches Red Color Tesla Car Into Space. Click for Details...
 
X

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more