இவரோட வாய்ல இருந்து வாழ்த்துக்கள வாங்குறது எல்லாம் பெரிய விஷயம்! உலகமே இஸ்ரோவ பாராட்டுது இவருலாம் ஒன்னுமே இல்ல
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவை உலக பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க் பாராட்டு டுவிட் செய்திருக்கின்றார். எதற்காக அவர் இஸ்ரோவை பாராட்டினார் என்பது பற்றிய முக்கிய விபரங்களையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான எலன் மஸ்க் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO)-வை புகழ்ந்து தள்ளி இருக்கின்றார். தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக தன்னுடைய பாராட்டுகளை அவர் இஸ்ரோவிற்கு தெரிவித்திருக்கின்றார். சமீபத்தில் இஸ்ரோ, பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தியது.

இஸ்ரோவின் இந்த செயலுக்கே எலன் மஸ்க் தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்திருக்கின்றார். எலன் மஸ்க், பிரபல மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா (Tesla) மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் சிஇஓ-வாகவும் இருந்து வருகின்றார். இவரை அறியாதவர் இந்த உலகில் இருக்க முடியாது.
குறிப்பாக, டுவிட்டர் நிறுவனத்தை இவர் கையகப்படுத்திய பின்னர் இவர் மிகப் பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார். குறிப்பாக, டுவிட்டரின் பிரபல சின்னமான குறுவியை தூக்கிவிட்டு, அவர் அவருடைய செல்லப் பிராணியான நாயின் படத்தை எம்பளமாக மாற்றினார். இதற்கு பின்னரே அவரின் முகம் பட்டி-தொட்டி வரை பரவியது.

இவரை மிகப் பெரிய குசும்புக் காரராகவும் இணைய உலகம் பார்க்கின்றது. இத்தகைய ஓர் நபரே இஸ்ரோவை பாராட்டி ஓர் டுவிட்டை போட்டு இருக்கின்றார். சமீபத்தில் இஸ்ரோ, தனது பிஎஸ்எல்வி - சி55/டிஇஎல்இஓஎஸ்-2 (PSLV - C55/TeLEOS-2) மிஷன் வெற்றி பெற்றதைக் கொண்டாடியது.
மேலும், பிஎஸ்எல்வி - சி55 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறி பாயும் வீடியோவையும் இஸ்ரோ அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது. இந்த பதிவை வாழ்த்தியதோடு அதை அவர் ரீ-ட்வீட்டும் செய்திருக்கின்றார், எலன் மஸ்க். கடந்த சனிக்கிழமை அன்றே ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி55 விண்வெளியை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியது.

இந்த ஆண்டில் விண்ணிற்கு அனுப்பப்படும் மூன்றாவது மிகப் பெரிய ராக்கெட் இதுவாகும். இதன் காரணத்தினாலேயே இஸ்ரோவின் இந்த செயல் உலக நாடுகளை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இது இஸ்ரோ விண்ணிற்கு அனுப்பும் 57 ராக்கெட்டும்கூட. அதன் ஒட்டுமொத்த எடை 228 டன் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிலியோஸ்-2 (TeLEOS-2) மற்றும் லூம்லைட்-4 (LUMELITE-4) எனும் இரு சேட்டிலைட்களே இந்த ராக்கெட்டில் அனுப்பப்பட்டு உள்ளன. இரண்டும் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு சொந்தமானவை என்பது கவனிக்கத்தகுந்தது. இவற்றின் ஒட்டுமொத்த எடை 757 கிலோ ஆகும். டிலியோஸ்-2 ஓர் செயற்கை அபர்சர் ரேடார் (Synthetic Aperture Radar) கருவி ஆகும்.
இது வானிலையை, பகல் மற்றும் இரவு என அனைத்து நேரங்களிலும் கண்கானிக்கும். இந்த இரு சேட்டிலைட்டுகள் மட்டுமின்றி பிஎஸ்எல்வி ஆர்பிடல் எக்ஸ்பெரிமென்டல் மோடுலும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றது. இது ராக்கெட்டின் நான்கு கட்டமாக இணைக்கப்பட்டு இருக்கும். இந்த பேலோடை பிரிக்க முடியாது. இது இஸ்ரோ தன்னுடைய சோதனைகளை மேற்கொள்வதற்கு ஏற்ப உருவாக்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா அனைத்து துறைகளிலும் சாதிக்கத் தொடங்கி இருக்கின்றது. குறிப்பாக, விண்வெளி ஆராய்ச்சியிலும், புதிய சாட்டிலைட்டுகளை உருவாக்குவதிலும் உலக நாடுகளையே அது மிரள செய்யும் வகைில் இஸ்ரோ செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே உலக பணக்காரர் தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சிாயளர்களுக்கு பெருமிதம் சேத்திருக்கின்றார்.


Click it and Unblock the Notifications









