ஹைப்பர் லூப் சாதனத்தின் சோதனை ஓட்டம் விரைவில் துவங்குகிறது

Written By:

கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவை சேர்ந்த பில்லியனர் எலான் மஸ்க் ஹைப்பர் லூப் என்ற புதிய போக்குவரத்து சாதனத்தின் மாதிரி வடிவத்தை வெளியிட்டார். மணிக்கு 1220 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த புதிய போக்குவரத்து சாதனம் உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

அதனை சாத்தியப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தெளிவான, தொலைநோக்கான பார்வையுடன் அந்த திட்டத்தை உலக அரங்கில் எலான் மஸ்க் முன்வைத்தார். இந்த திட்டத்தை மேம்படுத்துவதற்கு அறிவியலாளர்கள், பொதுமக்கள், பொறியாளர்களிடமிருந்து கருத்துக்களை வரவேற்பதாகவும் தெரிவித்தார். இது குறித்து அப்போதே டிரைவ்ஸாப்க் தமிழ் தளம் மிக விரிவான தகவல்களுடன் செய்தியை வழங்கியது. தற்போது புதிய அத்யாயத்தை எட்டியிருக்கிறது.

எலான் மஸ்க் தீவிரம்

எலான் மஸ்க் தீவிரம்

கடந்த மாதம் இந்த திட்டம் மேம்படுத்துவதற்காக ஹைப்பர் லூப் கான்செப்ட்டை தயாரிக்கும் போட்டி ஒன்றை எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நடத்தியது. இதில், இந்தியா, சீனா, உள்பட 20 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் அடங்கிய பொறியாளர் குழுவினர் தங்களது புதிய ஹைப்பர் லூப் திட்டத்துடன் பங்கேற்றனர்.

அமெரிக்க குழு வெற்றி

அமெரிக்க குழு வெற்றி

இதில், அமெரிக்காவின் மாசாசூட்ஸ் தொழில்நுட்ப கழகத்தை(எம்ஐடி) சேர்ந்த குழுவினர் வெற்றி பெற்றனர். இவர்கள் தயாரித்த ஹைப்பர் லூப் ரயில் ஓரிரு மாதங்களில் சோதனை நடத்தப்பட உள்ளது. இது எலான மஸ்க்கின் ஹைப்பர் லூப் கான்செப்ட்டிலிருந்து சற்று வேறுபாடுகள் கொண்டிருக்கிறது.

சோதனை மையம்

சோதனை மையம்

ஹைப்பர் லூப் சாதனத்தை சோதனை செய்வதற்காக ஒரு மைல் நீளத்திற்கான சோதனை ஓட்டத் தடம் அமைக்கப்படுகிறது. இந்த தடத்தில்தான் எம்ஐடி குழுவினர் தயாரித்த ஹைப்பர் லூப் சோதனை செய்யப்பட உள்ளது. இது புரோட்டோடைப் எனப்படும் மாதிரி வடிவம். இது வெறும் 250 கிலோ மட்டுமே எடை கொண்டது.

ஹைப்பர் லூப் சாதனம்

ஹைப்பர் லூப் சாதனம்

ஹைப்பர் லூப் என்றழைக்கப்படும் இந்த சாதனம் குழாய் வடிவிலான தட அமைப்பில் குறைந்த காற்றழத்தம் மற்றும் காந்த விசையை பயன்படுத்தி செலுத்தக்கூடியதாக இருக்கும். பாட் எனப்படும் பஸ் போன்ற சாதனத்தில் ஒரே நேரத்தில் 28 பேர் வரை பயணிக்க முடியும்.

வேகம்

வேகம்

இந்த ஹைப்பர் லூப் போக்குவரத்து சாதனம் மணிக்கு 1,223.1 கிமீ வேகத்தில் பயணிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதாவது, டெல்லியிலிருந்து சென்னையை 2 மணிநேரத்திலும், திருச்சியிலிருந்து சென்னையை 25 நிமிடங்களிலும் அடைந்துவிட முடியும்.

குறைவான செலவு

குறைவான செலவு

புல்லட் ரயில் இயக்குவதற்கான தடத்தை அமைப்பதற்கான செலவைவிட இதற்கு பன்மடங்கு செலவு குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, புல்லட் ரயிலுக்கு 68 மில்லியன் டாலர் முதலீடு தேவைப்பட்டால், இந்த ஹைப்பர் லூப் போக்குவரத்து சாதன தடத்தை கட்டமைப்பதற்கான செலவு வெறும் 6 மில்லியன் டாலர்கள் மட்டுமே ஆகுமாம்.

 பாதுகாப்பு

பாதுகாப்பு

இது காந்த விசையில் காற்றில் மிதந்து செல்வது போல குழாய்களில் பயணிக்கும் என்பதால், அதிர்வுகள் மிக குறைவாக இருக்கும். மேலும், கடலுக்கு அடியில் கூட இந்த குழாய் அமைப்பில் ஹைப்பர் லூப் சாதன போக்குவரத்தை நடத்த முடியும். அத்துடன், இதற்காக தரையில் அமைக்கப்படும் கான்க்ரீட் தூண்கள் நிலநடுக்கத்தில் கூட ஏதும் ஆகாத வகையில் கட்டமைக்கப்படும்.

மலிவு கட்டண போக்குவரத்து

மலிவு கட்டண போக்குவரத்து

ஒரு பாட் சாதனத்தில் 28 பேர் மட்டுமே பயணிக்க முடிந்தாலும், 30 வினாடிகள் இடைவெளிகள் அல்லது 8 கிமீ இடைவெளியில் ரோப் கார் போன்று ஒன்றன் பின் ஒன்றாக பாடுகளை செலுத்த முடியும். எனவே, மிக விரைவான, மலிவான போக்குவரத்து சாதனமாக இருக்கும். அவரது கனவுப்படி, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான்பிரான்சிஸ்கோ நகரங்களுக்கு இடையில் ஒரே நேரத்தில் 70 பாடுகளை இயக்க முடியும்.

சுற்றுச்சூழல் நண்பன்

சுற்றுச்சூழல் நண்பன்

சூரிய சக்தி மற்றும் இதர வகை மூலத்திலிருந்து பெறப்படும் மின்சாரம் லித்தியம் அயான் பேட்டரியில் சேமிக்கப்பட்டு, மின் மோட்டார்கள் மூலமாக இந்த ஹைப்பர் லூப் சாதனம் இயங்கும். எனவே, புகை என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

இலக்கு

இலக்கு

வரும் 2021ம் ஆண்டிற்குள் இந்த ஹைப்பர் லூப் போக்குவரத்து சாதனத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற இலக்குடன் எலான் மஸ்க் மற்றும் பொறியாளர் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால், காலத்தை வரையறுத்து கூற இயலாத நிலை உள்ளது.

ஐந்தாவது போக்குவரத்து சாதனம்

ஐந்தாவது போக்குவரத்து சாதனம்

விமானம், கப்பல், ரயில், கார்களை தவிர்த்து 5வது முக்கிய போக்குவரத்து சாதனமாக இது இருக்கும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதேபோன்று, விமானம், ரயில்களை விட மலிவான கட்டணம் கொண்ட, அதைவிட விரைவான போக்குவரத்து சாதனமாகவும் குறிப்பிடுகிறார்.

நம்ம டெஸ்லா ஓனர்...

நம்ம டெஸ்லா ஓனர்...

மின்சார கார் தயாரிப்பில் உலக புகழ்பெற்ற டெஸ்லா கார் நிறுவனத்தின் தலைவரும் எலான் மஸ்க்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்ரிக்காவில் பிறந்த இவர் தற்போது கனடா மற்றும் அமெரிக்காவின் மிக பிரபலமான தொழில் முனைவோரில் முக்கியமானவராக பாராட்டப்படுகிறார்.

  
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Elon Musk's Hyperloop Test Track Will Open 'Summer 2016.
Story first published: Saturday, February 27, 2016, 17:25 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark