ரயிலில் எமர்ஜென்ஸி பிரேக் பிடித்தால் தடம் புரளுமா? உண்மை இது தான்!

ரயில்கள் வேகமாக செல்லும்போது திடீரென தண்டவாளத்திற்கு குறுக்கே ஏதாவது வந்தால் உடனடியாக எமர்ஜென்சி பிரேக் பிடிப்பார்கள். இப்படியாக எமர்ஜென்சி பிரேக் பிடிக்கும்போது ரயில் பெட்டிகள் தடம் புரள வாய்ப்புள்ளதாக பலர் நம்பி வருகிறார்கள். ரயிலில் எமர்ஜென்சி பிரேக் சிஸ்டம் இருந்தும் அதை பயன்படுத்த மாட்டார்கள் என்ற புரளியும் பல்வேறு இடங்களில் பேசப்பட்டு வருகிறது. உண்மையில் ரயிலில் எமர்ஜென்சி பிரேக்கை பயன்படுத்தினால், ரயில் பெட்டிகள் தடம் புரள வாய்ப்பு உள்ளதா? இதற்கு பின்னால் உள்ள அறிவியல் என்ன என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ரயில்கள் பயணம் செய்து வருகின்றனர். ரயில் பாதைகள் எல்லாம் பெரும்பாலும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகவே இருக்கின்றன. இருந்தாலும் அதையும் மீறி சில விலங்குகள் மனிதர்கள் என பலர் ரயில் செல்லும் பாதையில் தண்டவாளங்களுக்கு குறுக்கே வருகிறார்கள். இவர்கள் ரயிலில் மோதி விபத்தில் சிக்குகிறார்கள். பொதுவாக ரயில் விபத்தில் சிக்கினால் அதில் சிக்கும் நபர்களின் உயிர் என்பது பிரிந்து விடும்.

emergency brake in train

அந்த அளவுக்கு மோசமான விபத்தாக இது அமையும். இந்நிலையில் மக்கள் மத்தியில் ரயில் தண்டவாளங்களுக்கு நடுவே மனிதர்கள் என்றால் கூட ரயில் ஓட்டுநர்கள் ரயிலை நிறுத்த மாட்டார்கள் என்ற பேச்சு நிலவி வருகிறது. மீறி ரயிலில் உள்ள எமர்ஜென்சி பிரேக் சிஸ்டத்தை ரயில் ஓட்டுநர் பயன்படுத்தினால் ரயில் பெட்டிகள் தடம் புரள வாய்ப்புள்ளதால் அதை செய்ய மாட்டார்கள் என்ற பொருளையும் பேசப்பட்டு வருகிறது.

இது உண்மைதானா? இதற்கு பின்னால் உள்ள அறிவியல் என்ன இது? ரயிலில் எமர்ஜென்சி பிரேக் சிஸ்டத்தை பயன்படுத்த மாட்டார்களா என்ற தெளிவான விவரங்களை தான் காண போகிறோம். இதை தெரிந்து கொள்ளும் முன் நாம் ரயில் பெட்டிகளில் உள்ள பிரேக்கிங் சிஸ்டத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக ரயில் தண்டவாளங்களும் ரயில் பெட்டிகளில் உள்ள சக்கரங்களும் இரும்பால் செய்யப்பட்டவையாக இருக்கிறது.

emergency brake in train

இதனால் ஒன்றுக்கொன்று வழுக்கிக் கொண்டுதான் செல்லுமே தவிர, குறிப்பாக பிரேக் பிடிப்பது என்பது இருக்காது. இதனால் ரயில் பெட்டிகளின் பிரேக் அமைப்பு என்பது வீல்களின் வேகத்தை குறைத்து மெதுவெதுவாக ரயிலை நிறுத்துவது தான் இருக்கும் ஒரே டெக்னிக்காக இருக்கிறது. எமர்ஜென்சியாக பிரேக் பிடிப்பதற்காக சில டெக்னிக்கைகளை வைத்திருக்கிறார்கள். அதுவும் நாம் கார் பைக் போல பிரேக் போட்ட இடத்திலேயே நிற்காது.

எமர்ஜென்சி பிரேக் பிடிக்கும்போது ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் மணல் அடங்கிய பெட்டிகள் இருக்கும். இது வால்வு வழியாக வீல் பகுதியில் மணல் விழும்படி அமைக்கப்பட்டு இருக்கும். எமர்ஜென்சி பிரேக் அப்ளை செய்தவுடன் இந்த மணல் தண்டவாளத்தில் விழும். அதனால் ரயில்வே கிரிப்பாகி விரைவாக பிரேக் பிடிக்க வழிவகுக்கும். எமர்ஜென்சி பிரேக்கில் இருக்கும் ஒரே தொழில்நுட்பம் இதுதான். மற்றபடி சாதாரண பிரேக் இருக்கும் இந்த எமர்ஜென்சி பிரேக்கருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.

emergency brake in train

ரயில்கள் வேகமாக பயணம் செய்யும்போது தண்டவாளங்களுக்கு குறுக்கே ஏதாவது விலங்குகள் அல்லது மனிதர்கள் இருந்தால் பெரும்பாலும் ரயில் ஓட்டுநர்களுக்கு பிரேக் பிடிக்கும் அளவுக்கு கால அவகாசம் இருக்காது. நீண்ட தொலைவிலேயே டிரைவர்கள் இதை பார்த்தால் மட்டுமே உடனடியாக பிரேக் பிடிப்பார்கள். அருகில் வந்த போது பார்த்தால் இல்லை அல்லது ரயில் நெருங்கும் போது அவர்கள் தண்டவாளத்திற்கு உள்ளே வந்தால் ரயில் ஓட்டிகளால் எதுவும் செய்ய முடியாது.

இதன் காரணமாகவே ரயிலில் அடிபடும்போது ரயில் அதிக வேகத்தில் பயணிக்கும் போது தான் விலங்குகள் அடிபடுவது உள்ளிட்ட விபத்துக்கள் நடக்கும். அப்படி என்றால் ரயில் எமர்ஜென்சி பிரேக் எதற்காக வைத்திருக்கிறார்கள் என்ற கேள்வி எழலாம். நீண்ட தொலைவில் ரயில் தண்டவாளுக்கு நடுவே விலங்குகள் மனிதர்கள் நின்றாலோ, தண்டவாளத்தில் ஏதாவது பிரச்சனை இருப்பதை ரயில் ஓட்டி கண்டுபிடித்துவிட்டாலோ உடனடியாக இந்த எமர்ஜென்சி பிரேக் அழுத்தி ரயிலை முடிந்த அளவுக்கு வேகமாக நிறுத்துவார்கள்.

இந்த எமர்ஜென்சி பிரேக் பயன்படுத்தி பல்வேறு விதமான ரயில் விபத்துக்கள் தடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் தண்டவாளங்கள் சேதமாவது இயற்கை பேரிடரால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது காரணமாக ரயில் விபத்து நடக்க இருந்ததை முன்கூட்டியே கணித்து ரயில் ஓட்டிகள் பலர் இந்த எமர்ஜென்சி பிரேக் பயன்படுத்தி ரயிலை நிறுத்தி விபத்தை தடுத்துள்ளார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரயிலில் தொடர்ந்து பயணம் செய்யும் பயணிகள் பலருக்கும் இந்த ரயிலில் உள்ள எமர்ஜென்சி பிரேக் சிஸ்டம் குறித்த புரிதல் இல்லாமல் இருக்கும். பலர் எமர்ஜென்சி பிரேக் சிஸ்டம் குறித்த புரளிகளை கிளப்பி வருகிறார்கள். இதையெல்லாம் நம்ப வேண்டாம் ரயில் பயணத்தில் பிரேக்கிங் என்பது தற்போது கார், பைக் போல இல்லை என்றாலும் மற்ற நாடுகளில் உள்ள ரயில் சிஸ்டத்தை விட இந்தியாவில் ரயில் பிரேக்கிங் சிறப்பாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, May 31, 2024, 7:00 [IST]
English summary
Emergency brake train does it cause derailment
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X