பெங்களூரு வானத்தில் அரங்கேறிய அரிய நிகழ்வு! இவ்ளோ பெரிய பிளேன இதுக்கு முன்னாடி அந்நகர வான்வெளியே கண்டிருக்காது

பெங்களூரு வான்வெளியையே அதிர வைக்கும் வகையில் பிரமாண்ட உருவம் கொண்ட ஏர்பஸ் ஏ380 முதல் முறையாக கெம்பேகவுடா விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியது. இந்த அரிய நிகழ்வுகுறித்தும், விமானம் பற்றிய முக்கிய தகவலையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பெங்களூரு வானத்தில் அரங்கேறிய அரிய நிகழ்வு... இவ்ளோ பெரிய விமானத்தை இதுக்கு முன்னாடி பெங்களூரு வான்வெளியே பார்த்திருக்காது!

உலகின் மிகப் பெரிய விமானமாக கருதப்படும் ஏர்பஸ் ஏ380 இன்று (அக்டோபர் 14) பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த அரிய வகை விமானம் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்குவது இதுவே முதல் முறையாகும். எனவேதான் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக இது பார்க்கப்படுகின்றது.

பெங்களூரு வானத்தில் அரங்கேறிய அரிய நிகழ்வு... இவ்ளோ பெரிய விமானத்தை இதுக்கு முன்னாடி பெங்களூரு வான்வெளியே பார்த்திருக்காது!

துபாயில் இருந்து இன்று காலை 10.11 மணிக்கு விமானம் புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 4 மணி நேரம் பயணத்திற்கு பின்னர் அது இந்தியா வந்தடைந்தது. இந்த ஜம்போ சைஸ் விமானத்தின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பும், முன்னேற்பாடுகளும் பெங்களூரு விமான நிலையத்தில் செய்யப்பட்டிருந்தன.

பெங்களூரு வானத்தில் அரங்கேறிய அரிய நிகழ்வு... இவ்ளோ பெரிய விமானத்தை இதுக்கு முன்னாடி பெங்களூரு வான்வெளியே பார்த்திருக்காது!

இந்த நிலையிலேயே அது வெற்றிகரமாக அங்கு லேண்ட் செய்யப்பட்டது. எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானம் வரும் அக்டோபர் 30ம் தேதி அன்றே இந்தியா வர இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே அவ்விமானம் இந்தியா வந்தடைந்திருக்கின்றது.

பெங்களூரு வானத்தில் அரங்கேறிய அரிய நிகழ்வு... இவ்ளோ பெரிய விமானத்தை இதுக்கு முன்னாடி பெங்களூரு வான்வெளியே பார்த்திருக்காது!

இந்த நிகழ்வே இப்போது இந்தியா முழுக்க பேசு பொருளாக மாறியிருக்கின்றது. இகே562 என்றழைக்கப்படும் இந்த விமானத்தில் 500-க்கும் அதிகமானோர் பயணிக்க முடியும். இதன் காரணத்தினாலேயே ஏர்பஸ் ஏ380 விமானத்தை ஜம்போ சைஸ் விமானம் என்று கூறுகின்றனர். இந்த விமானத்தை உலகின் மிகப் பெரிய விமானமாக கருதுவதற்கு அதன் பிரமாண்ட தோற்றம் மட்டுமின்றி ஈரடுக்கு அமைப்பும் ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது.

பெங்களூரு வானத்தில் அரங்கேறிய அரிய நிகழ்வு... இவ்ளோ பெரிய விமானத்தை இதுக்கு முன்னாடி பெங்களூரு வான்வெளியே பார்த்திருக்காது!

ஆமாங்க, டபுள் டக்கர் பஸ் போல இந்த விமானம் இரண்டு அடுக்குகளைக் கொண்டதாக இருக்கின்றது. அதேவேலையில்,வழக்கமான விமானத்தைப் போல எகனாமி, பிசினஸ் கிளாஸ் மற்றும் ஃபர்ஸ்ட் கிளாஸ் உள்ளிட்ட கேபின் அமைப்பையும் ஏர்பஸ் ஏ380 கொண்டிருக்கின்றது. இதன் வழக்கமான எகனாமி வகுப்பு இருக்கையில் அதிக வசதியைப் பெற முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூரு வானத்தில் அரங்கேறிய அரிய நிகழ்வு... இவ்ளோ பெரிய விமானத்தை இதுக்கு முன்னாடி பெங்களூரு வான்வெளியே பார்த்திருக்காது!

கூடுதல் லெக்ரூம் மற்றும் பொழுதுபோக்கிற்கான திரை உள்ளிட்டவை எகனாமி கிளாஸில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த திரை 13.3 அங்குலம் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமாதிரியான அம்சங்கள் பலவற்றை இந்த விமானம் கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான் இதனை உலக அதிசயமாகவும் பார்க்கின்றனர். அதேவேலையில், இவ்விமானத்தில் இருக்கும் முதல் வகுப்பு இருக்கைகள் தனி கேபினைக் கொண்டதாக இருக்கும்.

பெங்களூரு வானத்தில் அரங்கேறிய அரிய நிகழ்வு... இவ்ளோ பெரிய விமானத்தை இதுக்கு முன்னாடி பெங்களூரு வான்வெளியே பார்த்திருக்காது!

முழு லக்சூரி பயண அனுபவத்தை பெற்றுக் கொள்ளும் விதமாக இந்த அமைப்பு ஏர்பஸ் ஏ380இல் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, இன்னும் பல சொகுசு வசதிகள் செல்வந்தர்களைக் கவரும் விதமாக இவ்விமானத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஏர்பஸ் ஏ380 சுமார் 72.7 மீட்டர் நீளம் கொண்டதாகும். இந்த அதிகபட்ச நீளமே இவ்விமானத்தின் தாராளமான இட வசதிக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது.

பெங்களூரு வானத்தில் அரங்கேறிய அரிய நிகழ்வு... இவ்ளோ பெரிய விமானத்தை இதுக்கு முன்னாடி பெங்களூரு வான்வெளியே பார்த்திருக்காது!

மேலும், இந்த உச்சபட்ச நீளமே ஏர்பஸ் ஏ380க்கு உலகின் மிக பெரிய விமானம் என்கிற பெயர் கிடைப்பதற்கு காரணமாக இருக்கின்றது. இதன் ஒட்டுமொத்த எடை 575 டன்கள் ஆகும். உயரம் 24.1 மீட்டர் ஆகும். வழக்கமான விமானங்களைக் காட்டிலும் பாரிய உருவம் கொண்டது ஏ380 என்பதற்கு இதுவே சான்றாகும். இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் போயிங் 777-ஐ விட 45 கூடுதல் இருக்கைகளை இந்த விமானம் கொண்டிருக்கும்.

பெங்களூரு வானத்தில் அரங்கேறிய அரிய நிகழ்வு... இவ்ளோ பெரிய விமானத்தை இதுக்கு முன்னாடி பெங்களூரு வான்வெளியே பார்த்திருக்காது!

அந்தளவிற்கு மிக பெரியதே ஏர்பஸ் ஏ380. இத்தகைய சூப்பர் ஜம்போ உருவம் கொண்ட விமானமே பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இன்று தரையிறங்கி வரலாற்று நிகழ்வை நிகழ்த்தியிருக்கின்றது. இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, October 14, 2022, 20:21 [IST]
English summary
Emirates airbus a380 makes historic landing at kempegowda international airport
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+